Sunday, June 30, 2013

இஸ்ரேல் நாடு உருவான கதை தெரியுமா உங்களுக்கு?

அவர்கள் சாமானிய மனிதர்கள் அல்லர். உலகின் மிகப்பெரிய கந்து வட்டிக்காரர்கள் . மகா மகா கோடீஸ்வரர்கள் அமெரிக்க அரசிற்கே அவர்கள் கடன் கொடுப்பவர்கள், ஆம். அவர்கள் தான் யூதர்கள். அவர்களுடைய இனத்திற்கென்று ஒரு பூமி இல்லை. இது தங்கள் தேசம் என்று சொல்லிக் கொள்ள அவர்களுக்கு ஒரு நாடு இல்லை. உலக வரைபடத்தில் முகவரி இல்லை. அவர்கள் தங்களுக்கு இனி ஒரு விலாசம் தேடிக் கொள்வது என்று அந்த சூதாட்ட விடுதியில் முடிவு கண்டனர்.

அவர்களின் தலைவன் தியோடர்ஹெட்நெல் என்பவன் தலைமையில் ஒரு படுபயன்கர ரகசிய சதி திட்டம் தீட்டப்பட்டது. அவர்கள் ‘யூததேசிய நிதி’ என்று வலிமை மிக்க ஓர் பெட்டகத்தைத் திறந்தனர். அங்கே கூடியவர்களே ஆளுக்குப் பல்லாயிரம் கோடி டாலர் என்று நிதி அளித்தனர். இது ஒரு நூற்றாண்டிற்கு முன்னரே நடந்த நிகழ்வு. இனி அவர்கள் தங்கள் இனத்திற்கென்று ஒரு தேசத்தை உருவாக்க வேண்டும். எங்கே உருவாக்குவது? எப்படி உருவாக்குவது ? அவர்களுடைய வேதத்திற்கு பெயர் ‘தவுராத்.’ பத்துக் கட்டளைகள் என்றும் கூறுவார்கள். தங்கள் தேசம் எங்கே இருக்கிறது என்பதை அந்த வேதம் சுட்டிக் காட்டியிருப்பதாக கற்பிதம் செய்தார்கள். இப்படித் தான் இஸ்ரேல் என்ற நாட்டிற்காக ஒரு கரு உருவாக்கப்பட்டது. 

இதனை முதன் முதலாக எதிர்த்துக் குரல் எழுப்பியவர் அண்ணல் காந்தியடிகள் தான். தங்கள் தேசம் இருந்த இடம் என வேதம் வாக்களித்திருக்கிறது என்று கூறி எந்த நாட்டையும் ஆக்கிரமிக்கக் கூடாது. அப்படி இஸ்ரேல் என்று ஒரு நாடு உருவாக்கப் படுவதை எதிர்க்கிறோம். அதனையும் மீறி அப்படி ஒரு நாடு உருவாக்கப்படுமானால் அதனை உலகம் அங்கீகரிக்கக் கூடாது. கண்டிப்பாக இந்தியா அங்கீகரிக்காது என்று காந்தியடிகள் தெரிவித்தார். ஆனாலும், வட்டிக்காக கடன் பெற்றவளின் கண்களையே கேட்கின்ற அந்த யூத மகாப்பிரபுக்கள் ஜோர்டான் எல்லையை ஓட்டிய பாலஸ்தீனப் பகுதிக்குள் காலடி பதித்தனர். அரபு மக்கள் ஒரு வகையினர் நமது நாடோடி மக்களைப் போல் வசிக்கும் பழங்குடி மக்கள் . அவர்களுக்கு ஜோர்டான் எல்லையோரம் பாலஸ்தீனப் பரப்பிற்குள் சொந்த நிலங்கள் இருந்தன. அவைகள் ரோஜா தோட்டங்களோ, பேரீச்சை
தோட்டங்களோ அல்ல. கள்ளிச் செடி மேலும் வானம் பார்த்த பூமி. அந்த நிலங்களை யூத மகாபிரபுக்கள் வாங்கினர். விலை என்ன தெரியுமா? யானை விலை, குதிரை விலை என்பார்களே அதற்கும் அதிகம்தான். அப்படி வாங்கப்பட்ட இடங்களில் யூதர்கள் குடியமர்த்தப்பட்டனர்.

அப்போது அண்டையிலுள்ள அரபு நாடுகளெல்லாம் அவர்களுக்கு அனுதாபமாகவே இருந்தன. யூத இனத்தையே பூண்டோடு ஒழிப்பது என்பது ஹிட்லரின் லட்சியம். அதற்காக அவன் படை கொண்டு சென்ற நாடுகளிலெல்லாம் முதன் முதலாகச் செய்த கைங்கரியம் யூத மக்களை அழித்ததுதான். தப்பித்த யூதர்கள் அடைக்கலம் தேடி உலகம் முழுமையும் ஓடிக்கொண்டிருந்தனர். இது அண்மைக் கால வரலாறு. ஆனால், சென்ற நூற்றாண்டின் துவக்கத்திலேயே ஷியாவும், ஐரோப்பிய நாடுகளும் யூதர் என்றாலே முகம் சுளித்தனர். அவர்களை தண்டிக்கப்பட்ட மக்களாகவே கருதினர். அப்படி சரித்திரத்தால் சபிக்கப்பட்ட மக்கள் இங்கேயாவது இளைப்பாறட்டுமே என்று உண்மையில் அரபு மக்கள் அவர்கள் மீது இரக்கம் கொண்டனர்.

அவர்கள் உருவாக்கிக் கொண்ட குடியிருப்பு நாளை தங்கள் எல்லைகளையே தீண்டப்போகும் மலைப்பாம்பு என்பதனையும் அதற்கு இரையாகப் போகும் மான்குட்டிகள்தான், அரபு நாடுகள் என்பதனையும் அப்போது அவர்கள் உணரவில்லை. அந்த மலைப்பாம்பு மெள்ள மெள்ள நெளியத் தொடங்கியது. தமது நீளத்தை காட்ட தொடங்கியது. சுற்றிலுமுள்ள அரபு நாடுகளுக்குள் தமது வாலினை நீட்டியது. அந்த நிலமெல்லாம் யூத சமுதாயத்திற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உரிமையாக இருந்தது. எனவே, இப்போது தங்கள் மூதாதையர் விட்டுச் சென்ற பரம்பரைச் சொத்தில் தங்களுக்குப் பாத்தியம் உண்டு என்று யூதர்கள் கோரிக்கை வைக்கவில்லை. அபகரிக்கவேத் தொடங்கினர். முதல் உலகப் போருக்குப் பின்னர் பாலஸ்தீனம் பிரிட்டனின் ஆளுகைக்குள் வந்தது. பாலஸ்தீனத்தில் யூதர்கள் தமது எல்லைகளை விரிவுபடுத்துவதை பிரிட்டன் ஊக்கப்படுத்தியது. காரணம் அந்த நாட்டை விட்டு வெளியேறினாலும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு மத்தியில் -அரபு நாடுகளுக்கு மத்தியில் ஒரு ஏவல் பிராணியை வளர்த்து விட வேண்டும் என்பதில் குறியாக இருந்தது. பின்னர் பிரிட்டனுக்கு துணையாக அமெரிக்காவும் வந்தது.

 பாலஸ்தீனத்திற்குள்ளேயே யூதர்களின் குடியிருப்புக்கள் பெருகின. பின்னர் இணைந்தன. தங்கள் பூமிக்குள் ஓர் கள்ள தேசம் உருவாவதை அப்போதுதான் பாலஸ்தீன மக்கள் நன்றாக உணரத் தொடங்கினர். எனவே, 1920ம் ஆண்டு முதன்முதலாக பாலஸ்தீன மக்களுக்கும், யூதர்களுக்கும் இடையே நேரடி மோதல்கள் வெடித்தன. அடுத்த ஆண்டே இன்னொரு இனக்கலவரம். 1929 ம் ஆண்டு நடந்த மோதல் பயங்கரமானது. `ஹெப்ரான் படுகொலை’ என்று வர்ணிக்கப்பட்ட அந்த வெறித்தனமான மோதலில் ஏராளமான பாலஸ்தீனிய மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். காரணம் யூதர்கள் வலிமை வாய்ந்த ஆயுதங்களை பெற்றிருந்தனர். அத்தனையும் அமெரிக்க தயாரிப்புத் தான். 1936ம் ஆண்டு பாலஸ்தீன மக்கள் யூத ஆதிக்கத்தை எதிர்த்து வெகுண்டெழுந்தனர். அந்த எழுச்சி 1939 ம் ஆண்டு வரை பொங்கும் எரிமலையாய் குமுறிக்கொண்டிருந்தது. அதே சமயத்தில் யூதக் குடியிருப்புக்களுக்கு உதவியாக பிரிட்டனும், அமெரிக்காவும் பெருமளவில் ஆயுத உதவிக்கள் செய்தன. கரங்களாலும், கவண் கற்களாலும் பாலஸ்தீனிய இளைஞர்கள் எவ்வளவு காலம் போராட முடியும்? பாலஸ்தீனத்திற்குள் யூதர்களுக்கு என்ன உரிமை என்பதனை தீர்மானிக்க பல்வேறு கமிஷன்களை பிரிட்டன் அமைத்தது. கடைசியாக இந்தப் பிரச்சனையை ஐ.நா மன்றத்திற்கு கொண்டு சென்றது இப்படி.

பாலஸ்தீனத்தின் இதயத்தைப் பிளந்து உருவாகிவரும் இஸ்ரேலைஒரு நாடாக அங்கீகரிப்பது என்பதுதான் தீர்வாகும். எப்படி நமது துணைக் கண்டத்தை இந்தியா - பாகிஸ்தான் என்று இரு நாடுகளாக உருவாக்கியதோ, அதே போல பாலஸ்தீனம் அதற்குள் இஸ்ரேல் என்ற கோட்பாட்டை ஐ.நா மன்றத்தில் பிரிட்டன் முன்மொழிந்தது. இந்த நிலையில்தான், இன்னொரு தேசத்தைத் துண்டாடி ரத்தக்கோடுகளால் இஸ்ரேல் என்று ஒரு நாட்டை உருவாக்குவதை உலகம் ஏற்கக்கூடாது என்று காந்தியடிகள் அறைகூவல் விடுத்தார். ஆனாலும், அரபு மக்களின் தாயகமான பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் என்று ஒரு நாடு உருவாக்கப்படுவதை ஐ.நா மன்றம் அங்கீகரித்தது. அந்த மன்றம் அமெரிக்கா ஆட்டி வைக்கும் பொம்மை என்பதனை எத்தனையோ முறை மெய்பிக்கவும் செய்திருக்கிறது. 1947 ம் ஆண்டிற்கு முந்தைய உலக வரை படத்தை பாருங்கள். இஸ்ரேல் என்ற நாடே இடம் பெற்றிருக்காது. அதன் பின்னர் வெளியிடப்பட்ட உலக வரை படத்தைப் பாருங்கள் இன்றைக்கும் ரத்தம் சொட்டிக் கொண்டிருக்கிற எல்லைகள் தெரியும். அதற்குள் இருக்கின்ற நாடுதான் இஸ்ரேல்.

 இஸ்ரேல் என்ற நாட்டை இந்தியா அங்கீகரிக்கவில்லை. பாலஸ்தீனம் என்பது ஒரே பூமிதான். அதுதான் நாடு. அதைத்தான் அங்கீ கரிக்கிறோம்’ என்று பிரதமர் ஜவஹர்லால் நேரு முரசறைந்தார். இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலம் வரை இஸ்ரேல் அங்கீகரிக்கப்படவில்லை. பாலஸ்தீன மக்களின் தானைத் தலைவராக விளங்கிய யாசர் அராபத்தை அழைத்து இந்தியா கவுரவித்தது. உலகப்புகழ் பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீன் ஓர் யூதர். உருவாகும் இஸ்ரேல் நாட்டிற்கு அவரே முதல் பிரதமராக இருக்க வேண்டும் என்பதை யூதர்கள் மட்டுமல்ல அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளும் விரும்பின. இன்னொருவர் பூமியை ஆக்கிரமித்து உருவாக்கும் ஒரு நாட்டிற்கு தான் பிரதமராக இருக்க முடியாது என்று அறிவித்து ஐன்ஸ்டீன் விலகி விட்டார். ஆனாலும், 1948ம் ஆண்டு முதல் இஸ்ரேல் என்ற நாடு செயல்படத் தொடங்கியது. தேசமில்லாது அலைந்தவர்கள் ஒரு தேசத்தின் வரலாற்றை துப்பாக்கி முனையில் எழுதத் தொடங்கினர்.

1949 ம் ஆண்டு இஸ்ரேலிலிருந்து ஒரு லட்சத்திற்கும் அதிகமான பாலஸ்தீனிய மக்கள் வெளியேற்றப்பட்டனர். அப்படி வெளியேற்றப்பட்டவர்கள் இத்தனை ஆண்டுகளில் நாற்பது லட்சம் பேருக்கும் அதிகமாநோராக பெருகியிருக்கின்றனர். ஆனால் அவர்களெல்லாம் மீண்டும் வருவதற்கு அருகதையற்றவர்கள் என்று இஸ்ரேல் தெரிவித்துவிட்டது. அதே சமயத்தில் கொச்சியிலும், மணிப்பூரிலும் எத்தனையோ நூற்றாண்டுகளாக இருக்கும் யூதர்களை தங்கள் குடிமக்கள் என்று அழைத்துக் கொள்கிறது. ஒரு நாடாக அறிவிக்கப்படுவதற்கு முன்னரே வலிமை வாய்ந்த ஆயுதச்சாலையாக இஸ்ரேல் தன்னை உருவாக்கிக் கொண்டது. இன்றைக்கு அமெரிக்காவிற்கு ஈடாக ராணுவ வல்லமை பெற்றிருக்கிறது. பாலஸ்தீனத்திற்குள் உருவான பாம்புப் புற்றை அகற்றுவதற்கு எகிப்து, சிரியா, லெபனான், ஈராக் ஆகிய நாடுகள் கூட்டாக முயன்றன. அப்போதுதான் இஸ்ரேலின் ராணுவ வலிமை வெளிப்பட்டது. இஸ்ரேலின் கரங்கள் தான் உயர்ந்தன. அந்த மோதலைப் பயன்படுத்தி அண்டை நாடுகளின் பரப்பளவுகளை இஸ்ரேல் கைப்பற்றிக் கொண்டது. அந்தப் பிரதேசங்களும் தங்கள் வேதம் சொல்லும் தங்களின் புனித பூமிதான் என்று வன்முறை வாதம் செய்தது.

அனுமானங்கள் தான் அதற்கு அடையாளங்களாம். பாலஸ்தீனத்திலிருந்து வெளியேற்றப் பட்ட மக்கள் அண்டை நாடுகளில் குடியேறினர். அந்தக் குடியிருப்புகளெல்லாம் தங்கள் தேசத்திற்கு ஆபத்தானவை என்று கூறி இஸ்ரேல் ஆக்கிரமிப்பு யுத்தம் நடத்தியது. அதற்குத் துணை அமெரிக்காதான். தமது ஆயுத வியாபாரத்திற்கு இஸ்ரேல் நல்ல சந்தை என்று அந்த நாடு கருதுகிறது. இப்படி இன்று வரை பாலஸ்தீன மக்களின் ரத்தத்தில்தான் இஸ்ரேல் நீராடிக் கொண்டிருக்கிறது. 1967 ம் ஆண்டு எகிப்தின் மீது படையெடுத்த இஸ்ரேல் அதன் காசா பகுதியைக் கைப்பற்றிக் கொண்டது. ஜோர்டான் மீது படையெடுத்து மேற்குக் கரையை ஆக்கிரமித்துக் கொண்டது. 1982ம் ஆண்டு லெபனான் மீது இஸ்ரேல் படையெடுத்தது. எல்லை நெடுகிலும் அந்த நாட்டிற்குள் தங்கியிருந்த 3 ஆயிரத்து 500 பாலஸ்தீனியர்கள் படு கொலை செய்யப்பட்டனர். அவர்கள் ஆயுதங்களே இல்லாத அப்பாவி மக்கள். அந்தப் படுகொலைக்கு இஸ்ரேலிலிலேயே எதிர்ப்புக் கிளம்பியது. அதனால் அன்றைய பாதுகாப்பு அமைச்சர் ஓரியல் ஜரான் பதவி விலகினார். இந்த கொடுமைகள் கண்டு இஸ்ரேல் ஆக்கிரமித்த பகுதிகளில் வசிக்கும் பாலஸ்தீனிய மக்கள் வெகுண்டெழுந்தனர். ஆங்காங்கே மூர்க்கத்தனமாக இஸ்ரேல் படைகளுடன் மோதினர். ரத்த தடாகங்களில் அவ்வப்போது வெற்றி மலர்கள் மணம் வீசவே செய்தன. ஆனாலும் பூச்செண்டுகளைக் கொடுத்தால் இஸ்ரேல் எரிகுண்டுகளை திருப்பிக் கொடுத்தது.

எனவே பாலஸ்தீனிய மக்கள் ஆக்கிரமிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் இஸ்ரேலுக்கு எதிராக போர்க்கோலம் பூண்டனர். அவர்களுடைய ஆயுதம் என்ன தெரியுமா? விளைந்த காடுகளில் பறவைகளை விரட்ட நாம் வீசும் கவண் கற்கள்தான் இஸ்ரேலின் ராட்சஷ ஆயுதங்களை வெற்றிகரமாக சந்தித்தன. 1987ம் ஆண்டு இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகளை எதிர்கொள்ள ஹமாஸ் இயக்கம் தோன்றியது. அந்த இயக்கம் இளைய தலைமுறையின் போர் பாசறை. மேற்குக் கரையிலும், காசா பகுதியிலும் அந்த இயக்கத்தின் செல்வாக்கு சிகரம் தொட்டது. உண்மையில் அந்த இரு பரப்பிலும் சமூகப்பணிகளையும் மேற்கொண்டது. பாலஸ்தீனிய மக்களை பயங்கர ஆயுத பலத்தால் அடிபணிய வைக்க முடியாது என்பதனை இஸ்ரேலுக்கு காலம் உணர்த்தியது. எனவே பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை அங்கீகரிக்க முன் வந்தது. 1993ம் ஆண்டு ஓஸ்லோ நகரில் அமைதிப் பேச்சு வார்த்தை நடந்தது. அந்த மாநாடு முழு வெற்றி என்று கூற முடியாவிட்டாலும், மேற்குக் கரையிலும் காசா பகுதியிலும் சுயாதிக்க அமைப்புகளை பாலஸ்தீன மக்கள் அமைக்கலாம் என்று அந்த மாநாடு முடிவு கண்டது. அதனைத் தொடர்ந்து பலப் பல மாநாடுகள் நடந்தன.

2000ம் ஆண்டு அமெரிக்க குடியரசுத் தலைவர் கிளிண்டன் ஓர் மாநாடு கூட்டினார். பாலஸ்தீனியத் தலைவர் யாசர் அராபத்தும், இஸ்ரேலியப் பிரதமர் எகுட்பாராக்கும் கலந்து கொண்டனர். உடன்பாடு ஏற்படவில்லை. ஆனால் அதே சமயத்தில் இழந்த தங்கள் தேசத்தை இஸ்ரேல் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணி நேரமும் பாலஸ்தீனிய மக்கள் போராடுகிறார்கள்; அங்குலம் அங்குலமாக முன்னேறுகிறார்கள். மேற்குக் கரையும் காசா பகுதியும் தான் இன்றைக்கு அங்கீகரிக்கப்பட்ட பாலஸ்தீனம். அங்கே ஒருநாள் கூட மக்கள் நிம்மதியாக உறங்கியதில்லை. 2006 ம் ஆண்டு பாலஸ்தீனத்தில் பொதுத்தேர்தல் நடைபெற்றது. மக்கள் தீர்ப்பு அறிய அந்தத் தேர்தல் ஓர் வாய்ப்பு என்று ஐ.நா. மன்றமும் கருதியது. தேர்தலில் காசா பகுதியில் ஹமாஸ் இயக்கம் மகத்தான வெற்றி பெற்றது. மேற்கு கரைப் பகுதியில் மிதவாத அரசு அமைந்தது. ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹமாஸ் அரசை அங்கீகரிக்க மாட்டோம் என்று இஸ்ரேலும், அமெரிக்காவும் அறிவித்தன. அதனைத் தொடர்ந்து காசா பகுதியை கலவர பூமியாகவே வைத்திருக்க பிரியப்படுகின்றன.

தங்கள் அரசை அங்கீகரிக்க மறுக்கும் இஸ்ரேலை, ஹமாஸ் இயக்கமும் அங்கீகரிக்கவில்லை. தங்கள் தாயகத்தின் இதயப்பகுதியில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் யூத ஆக்கிரமிப்பாளர்களை அகற்றுவோம் என்று ஹமாஸ் இயக்கம் சூளுரைத்து செயல்படுகிறது. எனவே ஏதாவது ஒரு காரணம் கூறி காசா பகுதிக்குள் அவ்வப்போது இஸ்ரேல் படையெடுக்கிறது. ஒரு பக்கம் வான்வழித் தாக்குதல் - இன்னொரு பக்கம் கடல்வழித் தாக்குதல் - தொடர்ந்து தரைவழித் தாக்குதல் என்று சமீபத்தில் கூட மூர்க்கத்தனமாக தாக்குதலைத் தொடர்ந்தது. காசா பகுதியில் இன்னொரு ரத்த ஆறு ஊற்றெடுத்தது. ஆனாலும் பாலஸ்தீன மக்கள் அடிபணியவில்லை. அங்கு நடக்கும் அநியாங்களை கொடூரத்தின் மறுபெயர் இஸ்ரே .முன்னாள் பாலஸ்தீனிய மக்களுக்கு கவண் கற்கள்தான் ஆயுதம். ஆனால் இன்றைக்கு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் பறக்கின்றன. இன்னொரு பக்கம் தரைவழிப் போரில் பாலஸ்தீனிய மக்களை வெல்ல முடியவில்லை. எல்லைகளை முறித்துக் கொண்டு நுழையும் டாங்கிகளை அவர்கள் அப்பளங்களாக நொறுக்குகிறார்கள்.

 இன்றைக்கு மத்திய கிழக்கில் ஏகாதிபத்திய சக்திகளின் பயங்கர ஆக்கிரமிப்புக்களை பார்க்கிறோம். அரசு பயங்கரவாதம் என்றால் என்ன என்பதற்கு இஸ்ரேல் இலக்கணம் வகுத்துக் கொண்டிருக்கிறது. ஹமாஸ் இயக்கம்தான் காசா பகுதிக்கும் மேற்குக் கரைக்கும் உண்மையான அரசியல் இயக்கம். அதனை அழித்தொழிக்காது கண் துஞ்ச மாட்டோம் என்று இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்கள் கொக்கரிக்கிறார்கள். ஆனால் சர்வவல்லமை படைத்த அந்த ஆக்கிரமிப்பாளர்கள் அவ்வப்போது சோர்ந்து போகிறார்கள். அதனால் போர் நிறுத்தம் என்கிறார்கள். பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையில் மிதவாத ஆட்சி அமைந்தாலும் முழு பாலஸ்தீன மக்களின் அங்கீகாரம் பெற்ற மாபெரும் இயக்கமாக ஹமாஸ் தலை நிமிர்ந்து நிற்கிறது. அதனைப் பணிய வைக்க அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் சில அரேபிய நாடுளே துணை நிற்கின்றன என்பது வேதனை தரும் செய்தி.

எனினும் பாலஸ்தீனம் இமயம் போல எழுந்து நிற்கும் இன்ஷா அல்லாஹ்..... வல்ல ரஹ்மான் பாலஸ்தீனிய மக்களுக்கு மென்மேலும் வெற்றியை தருவானாக என்று பிரார்த்தனை செய்தவனாக............!

Saturday, June 29, 2013

ஐ.நாவின் இந்த அநாகரீக கொடுமையை பார்த்தீர்களா?

ஆண்-பெண் பால் உறவுகளை மாசுபடுத்தி, விலங்குகள்போல் வாழலாம் என ஐ.நா. மன்றம் கூறுமானால், நாட்டைத் துறந்து காட்டுக்குப் போவதுதான் சரியாக இருக்கும்.

கொடுமை இழைத்தது யாரோ ஒரு தனி மனிதனோ ஒரு சர்வாதிகார நாடோ அல்ல. உலக நாடுகளில் நடக்கும் அக்கிரமங்களைத் தட்டிக் கேட்பதற்காக உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா. சபை)தான்.

ஆம்! ஐ.நா. சபையின் பெண்களுக்கான ஆணையம் (Commission On the Status of Women-CSW 57) 2013 மார்ச் 4-15இல் ஒரு தீர்மானம் வெளியிட்டுள்ளது. ‘‘பெண்கள் மற்றும் யுவதிகளுக்கெதிரான அனைத்து வகைக் கொடுமைகளையும் தடுத்து நிறுத்தல்’’ (Elimination and prevention of all forms of violence against women and girls) என்பது அந்தத் தீர்மானம், அல்லது சட்டத்தின் (Act) பெயராகும்.

பெயரைப் பார்த்து ஏமாந்துபோகாதீர்கள். பொதுவாகவே ஐ.நா.வின் தலைப்புகள் கவர்ச்சியானவையாகவும் சமூக ஆர்வலர்களை ஆசுவாசப்படுத்துபவையாகவுமே இருக்கும். அப்படித்தான் இதுவும்.

உலக நாடுகளில் பெண்களுக்கெதிராக நடக்கும் கொடுமைகளுக்கு ஐ.நா. சாவுமணி அடிக்கப்போகிறது என்று நீங்கள் நினைத்தால் ஏமாந்துபோவீர்கள்.

போர்களில் எதிரிகளின் இராணுவ வீரர்கள் (ஆண்கள்) அந்த நாட்டின் பெண்கள்மீது நடத்தும் பாலியல் பலாத்காரங்கள், பெண்களைக் கடத்தும் சம்பவங்கள், விபசாரத்தில் ஈடுபடுத்தல், இயல்பான அடிப்படை உரிமைகளைக்கூட மறுத்தல் ஆகிய கொடுமைகளுக்கெதிரான தீர்மானம்தான் இது என்று எண்ணிவிடாதீர்கள்!

இன்று பாலஸ்தீனம், இராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் அந்நாட்டுப் பெண்களுக்கெதிராக அந்தியப் படைகள் இழைத்துவரும் வன்கொடுமைகள், மாலி, மியான்மர் போன்ற நாடுகளில் அப்பாவி முஸ்லிம் பெண்களுக்கெதிராக அந்நாடுகளின் தீவிரவாதிகளும் காவல்படையினரும் நடத்தும் அக்கிரமங்கள், வசதியான நாடுகளில் வீட்டு வேலைகள் பார்க்கும் ஏழைநாட்டுப் பெண்கள்மீது வீட்டு எசமானர்கள் செய்யும் கொடுமைகள் போன்ற எதையேனும் ஐ.நா. தீர்மானம் தடுக்கப்போகிறது என்று கனவிலும் நினைத்துவிடாதீர்கள்!

தீர்மானம் என்ன சொல்கிறது?

வேறு என்னதான் சொல்கிறது அச்சட்டம்? நீங்களே படியுங்கள் அந்தப் புனித (?) சட்டத்தை:

1. இளம்பெண்களுக்கு முழுப் பாலினச் சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும்; ஒரு பெண் பெண்ணையோ, அல்லது ஒரு பெண் ஆணையோ வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும். திருமண வயதை உயர்த்த வேண்டும்.

2. பருவ வயதை நெருங்கும் சிறுமிகளுக்குக் கர்ப்பத் தடை செய்வதற்கான பயிற்சி அளிக்கப்படுவதுடன் கருக்கலைப்புக்கு அனுமதியும் வழங்கப்பட வேண்டும். இதன்மூலம் பாலின மற்றும் மகப்பேறு உரிமை (விரும்பினால் பிள்ளை பெறலாம்; இல்லையேல் கலைக்கலாம் எனும் உரிமை) வழங்கல் வேண்டும்.

3. ஆசை நாயகியையும் மனைவிக்குச் சமமாக நடத்த வேண்டும்; விபசாரத்தில் பிறந்த பிள்ளைகளுக்கு, சட்டப்படி பிறந்த பிள்ளைகளுக்கு வழங்கும் எல்லா உரிமைகளையும் சமமாக வழங்க வேண்டும்.

4. விலைமாதுகளுக்கு எல்லாவிதமான உரிமைகள், பாதுகாப்பு, மரியாதை வழங்கப்பட வேண்டும். விபசார விடுதிகளில் வேலை செய்யும் பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

5. ஒரு பெண், தன்னை தன் கணவன் கற்பழித்ததாகவும் தன் விருப்பமின்றி பலாத்காரம் செய்ததாகவும் குற்றம்சாட்டுவதற்கு உரிமை உண்டு. அப்போது, அந்நியப் பெண்மீது பாலியல் பலாத்காரம் செய்தால் என்ன தண்டனையோ அதே தண்டனை கணவனுக்கும் வழங்கப்பட வேண்டும்.

6. ஆண்-பெண் இடையே பாகப்பிரிவினைச் சட்டத்தில் சமமான பங்கு அளிக்கப்பட வேண்டும்.

7. திருமணத்தைப் பொறுத்தவரை, பலதார மணம், ‘இத்தா’ மேற்கொள்ளல், ‘வலீ’யை ஏற்படுத்தல், ‘மஹ்ர்’ அளித்தல், ஆண் குடும்பத்தின் செலவுகளை ஏற்றல் ஆகிய நடைமுறைகளை அகற்ற வேண்டும்; ஒரு முஸ்லிம் பெண் முஸ்லிம் அல்லாத ஆணை மணமுடிக்க அனுமதிக்க வேண்டும்.

8. மணவிலக்கு அளிக்கும் அதிகாரத்தைக் கணவனிடமிருந்து பறித்து, நீதிமன்றத்திற்கு வழங்க வேண்டும். மணவிலக்கு ஆனபின் எல்லா சொத்துகளையும் இருவரிடையே பங்கிட வேண்டும்.

9. ஒரு பெண், கணவனின் அனுமதியின்றியே வெளியே செல்லலாம்; பயணம் போகலாம்; வேலைக்குச் செல்லலாம்; கர்ப்பத் தடை சாதனங்களைப் பயன்படுத்தலாம்.


இவைதான் வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் ஐ.நா. சபையின் பெண்கள் ஆணையம் தீர்மானித்திருக்கும் சட்டங்கள்.

யாரைக் கேட்டு?

முதலில், இச்சட்டங்களையெல்லாம் அந்த ஆணையம் யாரைக் கேட்டு நிறைவேறியுள்ளது? அல்லது பரிந்துரை செய்துள்ளது? அமெரிக்காவும் ஐரோப்பாவும் விரும்பும், அல்லது சுதந்திரம் என்றும் நாகரிகம் என்றும் கருதும் ஒன்றை உலகப் பெண்கள்மீது திணிக்க ஐ.நா. சபைக்கு யார் உரிமை வழங்கினார்கள்?

மேலை நாடுகளின் கைப்பொம்மையாகச் செயல்படும் ஐ.நா.வும் அதன் துணை அமைப்புகளும் நினைத்ததை எல்லாம் சட்டமாக்குவதற்கு இறைவனே அனுமதி வழங்கிவிட்டானா? அல்லது வான்மறை ஏதேனும் இந்த அதிகாரத்தை அவர்களுக்கு வழங்கியிருக்கிறதா?

அவர்கள்தான், சமயக் கட்டுப்பாட்டிற்கோ சமூகப் பண்பாடுகளுக்கோ மனித நாகரிகத்திற்கோ கீழ்ப்படியாமல் காட்டுமிராண்டித்தனமான மிருக வாழ்க்கை வாழ்கிறார்கள் என்றால், புனித வான்மறையை, பரிசுத்தமான மார்க்கத்தைப் பின்பற்றும் உலக முஸ்லிம்கள் மீது ஐ.நா.வின் பேரால் அநாகரிகத்தைத் திணிக்க இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?

ஐ.நா. சபை இயங்குவது அமெரிக்காவில்; ஐ.நா.வின் பட்ஜெட்டில் 60 விழுக்காடு நிதியை வழங்குவது அமெரிக்கா; வீட்டோ அதிகாரம் படைத்த ஐந்து நாடுகளில் மூன்று மேலைநாடுகள். இதையெல்லாம் வைத்துக்கொண்டு மேற்கத்திய நாடுகள் உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தில்தான் நாட்டாண்மைத் தனம் செய்கின்றன என்றால், கலாசாரம், பண்பாடு, சமயக் கட்டுப்பாடு, பெண் ஒழுக்கம் ஆகிய தனிமனித உரிமைகளிலும் தலையிடுவது மிகப்பெரும் ஆபத்தாகும். இவர்களின் அராஜகத்தை அடக்காவிட்டால் உலகம் பேரழிவையே சந்திக்கும்.

குடும்ப அமைப்பைச் சீரழிக்கவா?

இரண்டாவதாக, உலக அளவில் குடும்ப அமைப்புகளும் உறவுமுறைகளும் சீரழிவதற்கே ஐ.நா.வின் பெண்கள் அமைப்பு கூறும் தீர்மானங்கள் உதவும். குடும்ப அமைப்பு சிதைந்தால், உறவு முறைகள் அழிந்தால் மனித இனம், முன் எப்போதும் இல்லாத பேரழிவைச் சந்திக்கும் என்பதை ஏன் மறந்துவிட்டார்கள்?

திருமணம் என்பது, புனிதமானதொரு வாழ்க்கை ஒப்பந்தம். அங்கே இரு உள்ளங்கள் மட்டும் இணைவதில்லை; இரு குடும்பங்களே இணைகின்றன. ஒருவரின் இன்ப துன்பங்களில் மற்றவரும் பங்கெடுத்துக்கொண்டு, சுமைகளை -அவரவர் இயற்கைக்கேற்றவாறு- பகிர்ந்துகொண்டு, நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்ல தலைமுறைகளைப் பெற்றுக்கொடுக்கும் அற்புதமான வலைபின்னலே இல்லற வாழ்க்கை.

திருமணம் என்று ஒன்று இருப்பதால்தான் உலகில் மனித வாழ்க்கை எனும் சக்கரம் சுழன்றுகொண்டிருக்கிறது; மனித இனப் பெருக்கம் தடங்கலின்றி தொடர்ந்துகொண்டிருக்கிறது; மனித உள்ளங்களில் அன்பு, பாசம், மனிதநேயம் ஆகிய மலர்கள் பூத்துக்கொண்டிருக்கின்றன; அழுகையும் சிரிப்பும் மனித முகங்களில் தவழ்ந்துகொண்டிருக்கின்றன.

கல்வி, ஆராய்ச்சி, தொழில்நுட்பம், வேலைவாய்ப்பு, தொழில், நிர்வாகம், ஆட்சி… என எந்த இயக்கத்தை எடுத்துக்கொண்டாலும் அவற்றுக்குப் பின்னால் குடும்ப வாழ்க்கை ஏதேனும் ஒருமுறையில் உந்துதல் சக்தியாக இருக்கும்.

திருமண வாழ்க்கையின் அடிவேர்களையே பிடுங்கி எறியும் வகையில், அதன் தளிர்களில் வெந்நீரை ஊற்றும் விதத்தில் ஆண்-பெண் பால் உறவுகளை மாசுபடுத்தி, விலங்குகள்போல் வாழலாம் என ஐ.நா. மன்றம் கூறுமானால், நாட்டைத் துறந்து காட்டுக்குப் போவதுதான் சரியாக இருக்கும்.

இஸ்லாத்தின் மீது தாக்குதல்

மூன்றாவதாக, உலக முஸ்லிம்களையும் அவர்களின் வளமான பண்பாடுகளையும் இஸ்லாம் மார்க்கத்தின் தனித்தன்மைகளையும் அழித்தொழிப்பதில் இஸ்ரேலும் அமெரிக்காவும் இதுவரை கைகோத்திருந்தது போய், இப்போது ஐ.நா.வே அந்த வேலையைக் கையிலெடுத்திருக்கிறதே அது ஏன்? ஐ.நா. சபையின் இலக்கும் இலட்சியமும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை, அதன் பாரம்பரிய மாண்புகளை வெட்டி வீழ்த்துவதுதானா?

ஐ.நா. சபை மகளிர் ஆணையத் தீர்மானங்கள் அனைத்தும், குறிப்பாகக் கடைசி நான்கு (6,7,8.9) ஷரத்துகளும் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் குறிவைத்தே சேர்க்கப்பட்டுள்ளன என்பது தெளிவாகத் தெரிகிறது.

முஸ்லிம் சமூகத்தின் கூட்டுவாழ்க்கை முறை, மக்கட் தொகை அதிகரிப்பு, என்னதான் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ‘இஸ்லாம்’ என்று வந்துவிட்டால் முஸ்லிம்கள் அனைவரும் ஐக்கியமாகிவிடுவது, மேலை நாட்டினரிடையே இஸ்லாம் வேகமாகப் பரவிவருவது முதலான அம்சங்கள் மேற்கத்திய உலகை அச்சுறுத்திவருகின்றன.

இதனால் முஸ்லிம்களின் குடும்ப அமைப்பைச் சீர்குலைத்து, வளர்ச்சியைத் தடுத்துவிடலாம் என மேற்குலகம் நம்புகிறது. சட்டப் புறம்பான பாலியல் உறவுகள் மேலை நாடுகளில் பரவலானதால் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்துபோனதைப் போன்றே, முஸ்லிம் உலகிலும் குறைப்பதற்கு அவர்கள் செய்யும் சதியே இது.

1995லிருந்து ஐ.நா. சபை அமைப்புகளையும் மாநாடுகளையும் வழிநடத்துவதில் சியோனிஸ்ட் லாபி திட்டமிட்டு வேலை செய்துவருகிறது. ஐ.நா. மாநாடுகளின் திட்டங்கள், தீர்மானங்கள் ஆகியவற்றை வரையறுப்பதில் சியோனிஸ்டுகளின் கரம் வலுவாக உள்ளது.

ஆனால், வரலாற்று உண்மை ஒன்றை இந்தத் தீய சக்திகள் புரிந்துகொண்டதாகவே தெரியவில்லை. உலக முஸ்லிம்கள் தம் உயிருக்கோ உடைமைக்கோ பங்கம் நேர்ந்தால்கூட பாராமுகமாக இருந்துவிடுவார்கள். ஆனால், எப்போதெல்லாம் இஸ்லாத்தின் மீதும் அதன் நம்பிக்கைகள் மற்றும் கலாசாரத்தின் மீதும் தாக்குதல் வருகிறதோ அப்போதெல்லாம் முஸ்லிம்கள் கொதித்தெழுந்துவிடுவார்கள்; உயிரைக் கொடுத்தும் தங்கள் மார்க்கத்தைப் பாதுகாத்துவிடுவார்கள்; அதில் பின்வாங்கமாட்டார்கள்.

ஐக்கிய நாடுகள் சபையின் பெண் ஆணையம் வெளியிட்டுள்ள இத்தீர்மானங்களை எகிப்து, ஈரான், கத்தர், நைஜீரியா, சூடான், ஹோன்டுராஸ், வாடிகன் போன்ற நாடுகள் வன்மையாகக் கண்டித்துள்ளன; இந்த அறிவிப்புகளை உடனே திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.

எகிப்தில் இக்வானுல் முஸ்லிமீன் அமைப்பு இத்தீர்மானங்களைக் கடுமையாக விமர்சித்துள்ளது. சமூகக் கட்டமைப்பைத் தகர்க்கக்கூடிய தீர்மானங்கள் என அறிவித்துள்ளது.

பெண்கள் செய்யும் எல்லா பாலியல் குற்றங்களுக்கும் இத்தீர்மானங்கள் சட்ட அனுமதி கொடுப்பதை ஏற்க முடியாது என இக்வான்கள் அறிவித்துள்ளனர். - கான்பாகவி

நன்றி : அல்முஜ்தமா.

Friday, June 28, 2013

இஸ்லாத்தை கொச்சைபடுத்தி சினிமா தயாரித்தவர் I follow Islam" என்று இஸ்லாத்தை தழுவினார்.!!!

"I hate Islam" என்று இஸ்லாத்தை கொச்சைபடுத்தி சினிமா தயாரித்தவர் I follow Islam" என்று இஸ்லாத்தை தழுவினார்.!!!


நெதர்லாந்தில் Geert Wilders என்பவர் தோற்றுவித்த Party for Freedom எனும் வலதுசாரி கட்சியின் உறுப்பினர் அர்னோட் வேன் டோர்ன் (Arnoud van Doorn). சமீபத்தில் இவர் இஸ்லாத்தைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார். கடந்த சனிக்கிழமையன்று (20-04-2013) மதீனாவிற்கும், ஞாயிறு அன்று (21-04-2013) மக்காவிற்கும் வருகை தந்த டோர்ன் தனது உம்ராவை நிறைவு செய்துள்ளார். அத்துடன் ஷேக் அப்துர் ரஹ்மான் அல் ஸுதைஸி உட்பட பல மார்க்க அறிஞர்களைச் சந்தித்து உரையாடியுள்ளார். சரி இதில் என்ன பெரிய பிரமாதம் இருக்கிறது?

இவரது பின்னணியைப் பற்றி சற்று தெரிந்து கொள்வது நல்லது. இறைத்தூதரை இழிவு படுத்தும் நோக்கில் ஃபித்னா எனும் திரைப்படத்தைத் தயாரித்த Geert Wilders-ன் Party for Freedom தலைவர்களில் ஒருவராவார் டோர்ன்.

விஷமத்தனமான இத் திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து சர்வதேச அளவில் எழுந்த மக்கள் எழுச்சியைக் கண்டு வியந்து போனார். "இந்த மனிதர் முஹம்மதுக்கு முஸ்லிம்களிடத்தில் அப்படி என்ன சிறப்பு?" என்று பெரும் ஆச்சரியம் அடைந்து அக் கேள்விக்கு விடை காணும் ஆய்வில் இறங்கி விட்டார்.

"அந்த ஒரு கேள்விக்கான தேடலே இன்று என்னை முஸ்லிம் ஆக்கியது" என்கிறார் டோர்ன். டட்ச் (Dutch) பாராளுமன்ற உறுப்பினரான இவர், தமது மன மாற்றத்தை தனது ட்விட்டர் பக்கம் மூலம் வெளியுலகத்திற்கு பகிரங்கமாக அறிவித்தார். "லாயிலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்!" எனும் அவரது டிவிட்டர் ஷஹாதா அரபி மொழியில் அமைந்திருந்தது.

46 வயதான டோர்னின் இந்த மனமாற்றம் நெதர்லாந்தில் பெரும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியது. விஷயம் மெல்ல வெளியே கசிந்து பல நாட்களாகியும் இவரின் கட்சி உறுப்பினர்கள் பலருக்கு இது ஒரு வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் ஒரு நகைச்சுவையாகவே இருந்தது.

பின்னே? "I hate Islam" என்பது இவரது Party of Freedom கட்சியின் பகிரங்க அடிநாதம். அக்கட்சியைச் சேர்ந்த இவரே இப்போது "I follow Islam" என்றால்? சிரித்தார்கள்.

"இஸ்லாத்தைக் கடுமையாக வெறுக்கக் கூடிய நான் முஸ்லிம் ஆகி விட்டேன் என்பதை நம்ப மறுப்பர் என்பது எனக்கும் தெரியும். ஆனால், நான் கடந்த ஒரு வருடமாக பல முஸ்லிம் அறிஞர்களுடன் பல்வேறு சந்திப்புகளை நடத்தி, மனத்திலுள்ள சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்வதற்காக குர்ஆன், ஹதீஸ்களை முழுமையாக ஆராய்ந்து கொண்டிருந்தேன். அதை எனக்கு நெருக்கமானவர்கள் மட்டுமே அறிவர்!" என்கிறார் அல் ஜஸீராவிற்கு பேட்டியளித்த டோர்ன்.

மனம் மாறிய கையோடு, தனது மாநகர மேயருக்கு அதிகாரப்பூர்வமாகக் கடிதம் எழுதிக் கோரிக்கை விடுத்திருந்தார் டோர்ன். 'தமது பணி நேரத்தினூடாக தொழுது கொள்ள அனுமதி வேண்டும்' என்ற கோரிக்கை.

"இஸ்லாத்தைப் பற்றிய எதிர்மறை விமர்சனங்களை அதிகமதிகம் கேட்டவன் நான். இன்னமும் இஸ்லாத்தைக் கடுமையாக எதிர்த்துக் கொண்டிருக்கும் என் கட்சியினர், என்னைத் துரோகி என்றே அழைக்கின்றனர்.

ஆனால் எந்த ஆராய்ச்சியும் செய்யாமல் மற்றவர்கள் சொல்வதை கண்மூடிக் கொண்டு நம்புபவன் நான் அல்ல. சிலர் பிறந்த மதத்துக்கு நான் துரோகம் செய்து விட்டதாக கூறுகின்றனர். பலர் நான் எடுத்த இந்த முடிவு மிகச் சரியானது என்கின்றனர். டிவிட்டரிலும் பலர் எனக்கு ஆதரவு தந்துள்ளனர்.'

நல்லது. மனதை விசாலமாக்கி, முன் முடிவுகளை கைவிட்டு, ஆராய்ந்து இம்முடிவை நான் தேர்ந்தெடுத்ததை அறிந்த பலரோ எனக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.


மற்றவர்களைப் போலவே நானும் வாழ்க்கையில் இதுவரை மாபெரும் தவறுகளை இழைத்திருக்கிறேன். ஆனால், நான் செய்து வந்த தவறுகளிலிருந்து இப்போது நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதன் மூலம் என் பாதை தெளிவாகி விட்டதையும் இதில் நான் பயணிக்க வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது என்பதையும் உணர்கிறேன்!" என்று தமது பேட்டியில் மேலும் கூறியுள்ளார்.

நாங்கள் எவ்வளவு மோசமாக இறைத்தூதர் மீது இல்லாததையும் பொல்லாததையும் இட்டுக் கட்டி ஒரு திரைப்படம் எடுத்து வெளியிட்டிருக்கிறோம்? என் மனம் இன்று புண்படுவது மாதிரி தானே அன்று உலக முஸ்லிம்களும் வேதனை அடைந்திருப்பர்?"


அவதூறு மற்றும் பொய்களை மட்டுமே முதலீடாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஃபித்னா திரைப்படம் பற்றி நினைத்தால் வெட்கித் தலைகுனிவதாகக் கூறும் டோர்ன், நபியவர்கள் மீது நடத்தப்படும் இதுபோன்ற மேற்கத்தியப் பொய்ப் பிரச்சாரங்கள் பற்றி உலகமெங்கும் சென்று எடுத்துரைக்கத் திட்டமிட்டுள்ளேன்.

இப்போது நினைத்தால் என்னால் வேதனையைத் தாங்க முடியவில்லை. நாங்கள் எவ்வளவு மோசமாக இறைத்தூதர் மீது இல்லாததையும் பொல்லாததையும் இட்டுக் கட்டி ஒரு திரைப்படம் எடுத்து வெளியிட்டிருக்கிறோம்? என் மனம் இன்று புண்படுவது மாதிரி தானே அன்று உலக முஸ்லிம்களும் வேதனை அடைந்திருப்பர்?" என்கிறார்.

இட்டுக் கட்டப்பட்ட தகவல்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஃபித்னா திரைப்படம் ஏற்படுத்திய அவநம்பிக்கையை போக்க, டொராண்ட்டோ (Toronto) நகரில் அமைந்துள்ள இஸ்லாமிய அழைப்பு மையமான Canadian Dawah Association – CDA வுடன் இணைந்து சர்வதேசத் திரைப்படம் ஒன்றினைத் தயாரிக்கப் போவதாகக் கூறுகிறார்.

"இம்முறை என் திரைப்படம் அப்பட்டமான உண்மையைப் பேசும். இஸ்லாத்தைப் பற்றியும் நபிகளாரின் சிறப்புப் பண்புகளையும் இது எடுத்துரைத்து, மேற்கத்திய நாடுகளிடையே பரப்பப் படும் இஸ்லாமோஃபோபியாவை அகற்றும்!" என்கிறார் உறுதியாக.

"உங்களது புனிதப் பயணம் எவ்வாறு இருந்தது?" என்ற கேள்விக்கு, "இதே இடத்திற்கு உம்ரா மற்றும் ஹஜ் செய்யச் செல்பவர்களை கிறுக்குப் பிடித்தவர்கள் (Lunatic) என்றெல்லாம் ஏளனம் செய்துள்ளேன்.

இப்படி கீழ்த்தரமாக பிறர் மனம் புண்படும்படி நடந்து கொண்ட நான், நபி (ஸல்) அவர்களின் கல்லறைக்கு அருகிலும் ரவ்தா ஷரீஃப்க்கு முன்பு நிற்கும் போதும் என்னுள் பொங்கிய உணர்வுகளை கட்டுப் படுத்த முடியவில்லை. இவ்விடங்களில் நான் தொழும் போது, சுவர்க்கத்தின் அருகே நெருங்கி விட்டது போன்ற தூய்மையானதொரு உணர்வு ஏற்பட்டிருந்தது. என் கண்கள் குளமாயின"

"இறைத்தூதர் மீது இத்தனை அன்பை வைத்திருக்கும் உலக முஸ்லிம்களைப் போன்றே நானும் என்னை உணர ஆரம்பித்திருக்கிறேன். அதே நேரத்தில், இறைத்தூதர் பற்றி திட்டமிட்டு பரப்பப்படும் தவறான தகவல்களை நம்பி இஸ்லாத்தைக் கடுமையாக வெறுக்கும் சில மேற்கத்தியவர்களையும் நினைத்துப் பார்க்கிறேன். எங்களிடையே தான் எவ்வளவு அறியாமை? எத்தனை பாரபட்சம்? இவற்றை எல்லாம் நான் எப்படி களையப் போகிறேன்?" என்று கவலைப்படுகிறார் டோர்ன்.

"உலக அளவில் முஸ்லிம்களுக்கும் பிற மதத்தினருக்குமுள்ள இடைவெளியைக் குறைத்து அவர்களிடையே அமைதியும் நல்லிணக்கமும் ஏற்படச் செய்வேன். இஸ்லாம் பற்றிய தெளிவை எனக்கு உணர்த்திய இஸ்லாமிய அழைப்பு மையமான CDA வுடன் இணைந்து, அழைப்புப் பணியினை முழு மூச்சுடன் மேற்கொள்வேன். இஸ்லாத்தைப் பற்றியும், முஹம்மத் நபி (ஸல்) அவர்களைப் பற்றியும் உண்மைச் செய்திகளை உலகிற்கு எடுத்துச் சொல்ல, என்னுடைய வாழ்க்கையை இனி அர்ப்பணிப்பேன்!" என்று

Okaz/Saudi Gazette க்கு -_http://saudigazette.com.sa/index.cfm?method=home.regcon&contentid=20130422162428 அளித்த நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார். - அபூ ஸாலிஹா

THANKS TO SOURCE: http://www.satyamargam.com/news/world-news/2087-anti-islamic-dutch-arnoud-van-doorn-converts-to-islam.html.

முன்பு முகமது நபியை தவறாக சித்தரித்து படமெடுக்க உதவிய அர்னாடு வேன் மனம் திருந்தி இஸ்லாத்தை ஏற்று மதினாவில் முகமது நபியின் அடக்கத் தலத்துக்கு முன்னால் அமர்ந்து
அல்லாஹ்விடத்தில் தான் செய்த தவறுக்கு பாவ மன்னிப்பு கோரினார். எல்லா புகழும் இறைவனுக்கே!

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இஸ்லாத்தை எதிர்ப்பதையே தங்கள் வேலையாக வைத்திருக்கும் பலரும் உண்மையை விளங்கி ஒரு நாள் இது போல் இஸ்லாத்தின் முன் மண்டியிடுவார்கள். அது வரை தவறாக வழி நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் வழி தவறிய அந்த சகோதரர்களுக்காக நாம் பிரார்த்திப்போம்.

Thursday, June 27, 2013

இஸ்லாமிய நாடுகளில் என்ன நடக்கிறது ?

2010ஆம் ஆண்டு மத்தியக்கிழக்கு நாடுகளிலும் வட ஆப்ரிக்கா நாடுகளிலும் மன்னர் ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 2010 டிசம்பர் 18ஆம் நாள் எகிப்திலும் துனூசியாவிலும் மக்கள் போராட்டம் வெடித்தது. யமனில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது; லிபியாவில் உள்நாட்டுப் போர்; சிரியாவில் எழுச்சி; அல்ஜீரியாவில் பெரிய போராட்டம் வெடித்தது.

அவ்வாறே ஆர்மீனியா, பஹ்ரைன், இராக், ஜோர்டான், மொராக்கோ, அம்மான், துருக்கி ஆகிய நாடுகளிலும் பெரும் போராட்டங்கள் வெடித்தன. ஆதர்பீஜான், குவைத், லெபனான், சஊதி, சூடான் போன்ற நாடுகளில் சிறிய அளவிலான மக்கள் போராட்டங்கள் நடந்தன.

இப்போராட்ட எழுச்சியையே -குறிப்பாக எகிப்தில் நடந்த 2011 ஜனவரி 25 புரட்சியை- அரபு வசந்தம்என்று அழைக்கின்றனர். இப்போராட்டங்களுக்குப் பெரும் வெற்றி கிடைத்தது. அதையடுத்து எகிப்தில் இக்வானுல் முஸ்லிமீன்களின் அரசியல் கட்சியான நீதி மற்றும் வளர்ச்சி’ (அல்அதாலத்து வத்தன்மியா) கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. பொறியாளர் முஹம்மது முர்சீ அதிபரானார்.

துனூசியாவில் அந்நஹ்ழா’ (எழுச்சி) கட்சியும் துருக்கியில் நீதி மற்றும் வளர்ச்சிகட்சியும் ஆட்சிக்கு வந்தன. பாலஸ்தீனத்தின் ஃகஸ்ஸாவில் ஹமாஸ்கட்சியும் மொராக்கோவில் நீதி மற்றும் வளர்ச்சிகட்சியும் ஆட்சியில் அமர்ந்தன.

இந்தப் போராட்டங்களின் எதிரொலியாகவே இராக், சிரியா போன்ற நாடுகளில் இன்றும் பொதுஜன ஆர்ப்பாட்டங்கள் பெரிய அளவில் நடைபெற்றுவருகின்றன. சுருக்கமாகச் சொன்னால், அரபுலகில் இஸ்லாமிய எழுச்சி ஏற்பட்டு, ஆட்சியிலும் நிர்வாகத்திலும் இஸ்லாம் பின்பற்றப்பட வேண்டும் எனற அவா பெரும்பான்மை மக்களின் எதிர்பார்ப்பாக அமைந்துவிட்டது. அல்ஹம்து லில்லாஹ்.

எதிர்ப்பலை

நல்லது நடக்கும்போது கெட்டவன் ஷைத்தான் அமைதியாக இருப்பானா? நாம் குறிப்பிட்ட எல்லா நாடுகளிலும் மதச்சார்பின்மை பேசும் இடதுசாரிகள், அல்லது ஈரானிய ஷியாக்கள் அந்த அரசுகளுக்கு மிகப்பெரும் நெருக்கடியை ஏற்படுத்திவருகின்றனர்; முன்னேற்றத்திற்குத் தடைக்கல்லாக விளங்குகின்றனர்.

இந்த எதிர்ப்பு சக்திகளுக்குத் திரைமறைவில் வழக்கம்போல் அமெரிக்காவும் இஸ்ரேலும் தூபம் போட்டுவருகின்றன; எல்லா உதவிகளையும் தாராளமாக வழங்கிவருகின்றன. ஆயுத உதவி, நிதியுதவி, புலனாய்வுத் தகவல் பரிமாற்றம், சீர்குலைவுத் திட்டங்கள் என அனைத்துத் துரோகங்களையும் அரங்கேற்றி, அந்நாடுகளைத் துண்டாட காய்களை நகர்த்திவருகின்றன.

எகிப்தில் கிப்தி (Coptic) கிறித்தவர்களின் கட்சி (கிப்திகள் ஃபிர்அவ்னின் பரம்பரை என்பது குறிப்பிடத் தக்கது), மதச்சார்பின்மை பேசும் இடதுசாரி கட்சிகள், தொழிலாளர் கட்சி, இவர்களுடன் இராணுவத்திலுள்ள கறுப்பு ஆடுகள் என எல்லாம் சேர்ந்து ஆட்சிக்கெதிராகக் குழப்பம் விளைவித்துவருகின்றன.

முர்சீ அரசு கொண்டுவரும் அரசியல் சாசன மாற்றம், சீர்திருத்த நடவடிக்கை, இஸ்லாமியக் கலாசார வாழ்க்கைமுறை ஆகிய ஒவ்வொரு முயற்சிக்கும் எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டை போட்டு தடுக்கப்பார்க்கின்றன. ஆளும் கட்சியின் ஆதரவாளர்களும் எதிர்ப்போராட்டங்களை நடத்தத் தவறவில்லை.

எத்தியோப்பியாவில் அந்நஹ்ழாஅணை

எதிரிகளின் உச்சகட்ட சதித்திட்டமாக, எகிப்தின் பொருளாதாரம், தானிய உற்பத்தி, விளைச்சல், குடிநீர் ஆகிய உயிர்நாடியில் கைவைக்கத் திட்டமிடப்படுகிறது. நீல்நதியில் எகிப்துக்குரிய நீர் உரிமையைப் பறிக்கும் வகையில், எத்தியோப்பியாவைத் தூண்டிவிட்டு, ‘அந்நஹ்ழாஎனும் அணையைக் கட்டி நீரைத் தடுக்கப்போகிறார்கள்.

நீல் நதியில்தான், நபி மூசா (அலை) அவர்கள் குழந்தையாக இருந்தபோது, அன்னாரின் தாயார் பேழைக்குள் குழந்தையை வைத்து போட்டுவிட்டார்கள். ஃபிர்அவ்னின் துணைவியார் எடுத்து வளர்த்தார்கள். உலகிலேயே மிக நீளமான நதியான நீல், 6,650 கி.மீ. தொலைவுவரை பாய்கிறது; பத்து ஆப்பிரிக்க நாடுகளைக் கடக்கிறது.

நீல் நதியின் பிரதான உற்பத்தித் தலங்கள் என இரண்டைக் குறிப்பிடலாம். 1. எத்தியோப்பியா (அபிசீனியா). 2. சமதளத்தில் உள்ள ஏரிகள். எத்தியோப்பியாவிலிருந்து எகிப்துக்கு வரும் நீல் நதி நீரே 85 விழுக்காடு (71 பில்லியன் சதுர மீட்டர்) ஆகும். ஏரிகளிலிருந்து எகிப்துக்குக் கிடைக்கும் பங்கு 15 விழுக்காடு (13 பில்லியன் ச.மீ.) மட்டுமே.

1957ஆம் ஆண்டு -எகிப்தில் கமால் அப்துந் நாஸிர் அதிபராக இருந்தபோதே- எத்தியோப்பியாவுக்கு அமெரிக்கா திட்டம்போட்டுக் கொடுத்தது; நீல் நதியின் குறுக்கே அணை கட்டினால் பாசனத்திற்கும் மின்சார உற்பத்திக்கும் வழிகாணலாம் என ஆசைவார்த்தை காட்டியது. இந்த அணைகள் மூலம் தெற்கிலிருந்து எகிப்துக்கு வரும் நீரின் அளவைக் கட்டுப்படுத்திவிடலாம் என்பதே எதிரிகளின் திட்டம்.

1964ஆம் ஆண்டிலேயே அணை கட்டுவதற்காக 4 இடங்களைத் தேர்ந்தெடுத்து எத்தியோப்பாவின் இசைவுக்காகக் கொடுத்தது அமெரிக்கா. பல்வேறு பிரச்சினைகளால் திட்டம் தள்ளிப்போனது. இப்போது மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

அதன்படி, மேற்கு எத்தியோப்பியாவில் நீல் நதியில் 5,250 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் நோக்கத்தில் அந்நஹ்ழாஅணை கட்டும் திட்டம் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்த அணை சூடானுடனான எத்தியோப்பியா எல்லையிலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் கட்டப்படுகிறது. 4.8 பில்லியன் டாலர் செலவு என்று கூறப்பட்டாலும் 2017இல் அணை கட்டி முடிக்கப்படும்போது 8 பில்லியன் டாலரை எட்டலாம். இத்தாலியின் சாலினிநிறுவனம் பொறுப்பேற்றுள்ளது.

இந்த அணை எத்தியோப்பியா - எகிப்து இடையே போர் மூள்வதற்குக்கூட காரணமாகலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். எகிப்தின் ஜீவாதாரப் பிரச்சினையாக இது இருப்பதால், அந்நாடு நீர்போரைத் தொடுக்க வாய்ப்பு உண்டு எனக் கருதப்படுகிறது.

துருக்கியில்

துருக்கியில் 1940களில் முஸ்தஃபா கமால் அதாதுர்க் அழித்துவிட்டுப்போன இஸ்லாமியப் பாரம்பரிய நடைமுறைகளுக்கு உயிர் கொடுக்க இன்றைய துருக்கி அரசு முயன்றுவருகிறது. படிப்படியாக முழு மதுவிலக்கைக் கொண்டுவரவும் மூடிக்கிடக்கும் பள்ளிவாசல்கள், மதரசாக்கள், இஸ்லாமிய மையங்கள் ஆகியவற்றைத் திறக்கவும் மாணவிகள் புர்கா அணிந்து பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லவும் துருக்கி அதிபர் உர்துகான் முயன்றுவருகிறார்.

இதற்கு அங்குள்ள கம்யூனிஸ, மதச்சார்பற்ற, தேசிய சக்திகள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துவருகின்றன. வெளியிலிருந்தும் இவர்களுக்கு உதவிக்கரம் நீள்கிறது. மேற்கத்திய மற்றும் சியோனிச கரம்தான் அது எனச் சொல்லத் தேவையில்லை.

இராக், சிரியா

இராக்கில் இப்போது ஆட்சியில் இருக்கும் நூரீ மாலிகீ ஒரு ஷியா முஸ்லிம். இவர் சன்னி முஸ்லிம் அறிஞர்களையும் பொதுமக்களையும் கொத்துக் கொத்தாக சிறைப்பிடித்து தூக்கு தண்டனை நிறைவேற்றிவருகிறார். தன்னைக் கொல்வதற்குத் திட்டமிட்டார்கள் என்று குற்றம்சாட்டி கடந்த ஏப்ரலில் 21 சன்னி முஸ்லிம்களைக் கைது செய்த இவர், ஐவரைத் தூக்கிலிட்டார்.


சிரியாவில் பஷ்ஷார் அல்அசத் எனும் சர்வாதிகாரியின் ஆட்சி நடக்கிறது. இவரது ஆட்சியை அகற்ற வெகுஜன மக்கள் உயிரைக் கொடுத்துப் போராடி வருகின்றனர். இவருக்கு இஸ்ரேல் உதவுகிறது. அடுத்து ஈரான் பன்மடங்காக உதவி செய்துவருகிறது.


போராட்டக் களத்தில் இருப்போர் பெரும்பாலும் சன்னி முஸ்லிம்கள்தான். இவர்களை பஷ்ஷாரின் படைகளும் ஈரானிய ஷியா (ஹிஸ்புல்லாஹ்) படைவீரர்களும் இலட்சக்கணக்கில் கொன்று குவித்துவருகின்றனர். பல லட்சம் மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாகச் சென்று அல்லல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இன்னொரு புறம் பஹ்ரைன் நாட்டைக் கைப்பற்ற ஷியாக்கள் சண்டை போட்டுவருகிறார்கள். சஊதி, குவைத் போன்ற அரபு நாடுகளிலும் ஷியாக்களின் கை ஓங்கிவருகிறது.

முஸ்லிம் நாடுகள் உஷார்

ஆக, அரபு மற்றும் முஸ்லிம் நாடுகளில் ஏற்பட்டுள்ள இஸ்லாமிய எழுச்சியையும் பாரம்பரிய இஸ்லாமியக் கலாசாரத்தின் மீது பிறந்துள்ள விழுமங்களையும் நசுக்க விரோதிகள் ஒன்றுகூடி சதி செய்துவருகிறார்கள். மேற்கத்திய, சியோனிச வல்லூறுகள் ஒரு பக்கம்; நபிகளாரின் துணைவியரையும் பெரியவர்களான அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரையும் ஏசுவதையே தலையாயக் கொள்கையாகக் கொண்டுள்ள ஷியாக்கள் இன்னொரு பக்கம்.


இவர்களை உலக முஸ்லிம்கள் இனம்கண்டுகொள்ள வேண்டும். முஸ்லிம் மற்றும் அரபு நாடுகள் ஓரணியில் திரளும் நேரம் வந்துவிட்டது. இனியும் சொந்தப் பகையையும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பையும் பாராட்டிக்கொண்டிருந்தால், முஸ்லிம் நாடுகளை அழிப்பதில் எதிரிகள் வெற்றி கண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

முஸ்லிம் ஆட்சியாளர்கள் அபூபக்கர்களாக உமர்களாக ஸலாஹுத்தீன் அய்யூபிகளாக மாறியாக வேண்டும்; அல்லது மாறுவதற்கான திசையை நோக்கி அடி எடுத்துவைக்க வேண்டும். இல்லையேல், அவர்களை அல்லாஹ் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கமாட்டான்.

Wednesday, June 26, 2013

மௌலான அபுல் கலாம் ஆசாத்

நாம் சுவாசிக்கும் இந்த சுதந்திர காற்றுக்காக திரு.அபுல் கலாம் ஆசாதுக்கு இந்த தேசம் என்றைக்கும் நன்றி கடன் பட்டிருக்கிறது. இவர் ஆற்றிய செயல்பாடுகள் நம்முடைய விடுதலைக்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது.


காந்தி, நேரு உடன் ஆசாத்.


மௌலான அபுல் கலாம் ஆசாத் - நவீன கல்வியின் சிற்பி!

இந்திய விடுதலை இயக்கத்தின் மூத்த அரசியல் தலைவரும் இந்திய முசுலிம் அறிஞருமான‌ ஆசாத் தான் இந்திய உயர்கல்வி நிலையமான ஐ.ஐ.டி. நிறுவியவர் என்பது பலரும் அறியாத அல்லது பொதுவில் சொல்லப்படாத செய்தி.

ஐ.ஐ.டி என்ற கல்வி நிலையங்களால் பெரும் பயனுற்ற எவராலும் இந்த கல்வி நிலையங்களைத் தோற்றுவித்தவர் எவர் என்ற தகவல் வெளியில் சொல்லப்படுகிறதா என்றால், நிச்சயமாக இல்லையென்றே சொல்லப்பட வேண்டும்.

இந்தியாவில் கல்வித்துறைக்கு சரியான அடித்தளமிட்ட இவராற்றிய பணியை நினைவுகூறும் வகையில் இவரது பிறந்த நாள் தேசிய கல்வி நாளாகக் கொண்டாடப்படுகிறது. புதுதில்லியில் உள்ள‌ மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகள் இவரது பெயரைத் தாங்கி உள்ளன.

ஆசாத் அவர்கள்தான் தேச கல்வி முறைக்காக முதலில் குரல் எழுப்பியவர். அனைத்து மாணவர்களுக்கும், சாதி, மத இட,பால் பாகுபாடின்றி தரமான கல்வியை குறிப்பிட்ட நிலை வரை அளிக்க வேண்டும், 14 வயது வரை அனைத்துகுழந்தைகளுக்கும் இலவச கட்டாயக் கல்வி அளிக்க வேண்டும் என்று ஆசாத் வலியுறுத்தினார்.

கடைசி வரை இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்டுவிடக்கூடாது என மிகவும் பாடுபட்டவர் திரு.ஆசாத் அவர்கள். திரு.ஜின்னாவின் பாகிஸ்தான் கோரிக்கைக்கு எதிராக திரு.ஆசாத் பலமுறை வலியுறுத்திப்பேசி பிறகு ஜின்னாவின் மனதையும் மாற்றுவதில் ஓரளவு வெற்றி கண்டபோதிலும், திரு.நேரு அவசரப்பட்டு வெளியிட்ட ஒரு அறிக்கையின் மூலமாக ஜின்னா மீண்டும் மனம் மாற நேரிட்டது.

தோற்றம் 11.11. 1888 - மறைவு 22.2.1958. 1888ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி, மௌலானா கைருதீனுக்கும், அலியாவுக்கு மகனாக, மெக்காவில், மௌலானா அபுல் கலாம் முகியுத்தின் அகமது (அபுல் கலாம் ஆசாத்) பிறந்தார். அபுல்கலாம் என்ற அரபுச் சொல்லிற்கு "சொல்லின் செல்வர்" என்று பொருள். பரவலாக இவர் மௌலானா ஆசாத் (விடுதலை) என அறியப்படுகிறார்.

10 வயதிலேயே குரானை கற்றுத் தேர்ந்தார். 17 வயதில் இஸ்லாமிய உலகில் பயிற்சி பெற்ற ஆன்மீகவாதியாக அறியப்பட்டார். கெய்ரோவில் உள்ள அல் அசார் பல்கலைக்கழகத்தில் அவர் கற்ற கல்வி அவரது அறிவை விசாலமாக்கியது.

சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட ஆசாத், சிறையில் பல ஆண்டுகளைக் கழித்தார்.சமய அடிப்படையிலான இந்தியப் பிரிவினையை எதிர்த்து இந்து- முசுலிம் ஒற்றுமையை வலியுறுத்திய முசுலிம் தலைவர்களில் முதன்மையானவர்.

இந்தியா விடுதலையடைந்த பிறகு அமைந்த முதல் இந்திய அரசில் கல்வி அமைச்சராகப் பணியாற்றியவர். மதவாதத்தை ஒரேடியாக குழி தோண்டிப் புதையுங்கள் என்பதுதான் ஆசாத் மாணவர்களுக்கு எப்போதும் கூறும் அறிவுரையாகும். மாணவர்களின் ஒழுக்கமின்மை குறித்து அவர் வேதனைப்படுவார்.

1992ஆம் ஆண்டு இவருக்கு இந்தியாவின் உயரிய குடிமை விருதான பாரத ரத்னா மறைந்த பிறகு வழங்கப்பட்டது. மௌலானா அபுல் கலாம் ஆசாத் அற்புதமான ஒரு மனிதர். தனது வாழ்வின் இறுதி வரை இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காக அரும்பாடுபட்டார்.


()()()()()()()()()
தேசபக்தி திருத்தொண்டர்!

இஸ்லாமிய சமுதாயத்தின் இளைஞர் பட்டாளத்துக்குத் தேசபக்தி உணர்வூட்டும் திருத்தொண்டராக விளங்கினார் மௌலானா அபுல் கலாம் ஆசாத் . அவரது சண்டமாருதச் சொற்பொழிவில் இலக்கிய நயம் மிளிர்ந்தது. தத்துவ விளக்கம் தவழ்ந்தது. புரட்சிச் சூறாவளியும் சுழன்றடித்தது. ஆதலால் மக்கள் அந்த இளைஞரைப் பொங்கி வரும் பேருவகையோடு "அபுல்கலாம் " என்று அழைத்தனர். அபுல்கலாம் என்ற அரபுச் சொல்லிற்கு "சொல்லின் செல்வர்" என்று பொருள். சையத் மொகய்தீன் என்ற பெயர் மறைந்து அபுல்கலாம் என்ற சிறப்புப் பெயரே நிலைத்தது.

வங்கப்பிரிவினையை எதிர்த்து சுதந்திர ஆவேசக் கனலை எழுப்ப அரவிந்தரும் பரோடாவில் இருந்து கல்கத்தா வந்து சேர்ந்தார். 'கர்மயோகின்' என்ற வார ஏட்டைத் தொடங்கினார். "துணிந்த வாலிப உள்ளங்களே காரியமாற்றக் கனிந்த உள்ளத்தோடு வருக!" என்று அந்த ஏடு அறைகூவல் விடுத்தது. அபுல்கலாமும் அரவிந்தரும் தேசபக்த அன்பால் பிணைக்கப்பட்டனர். அபுல்கலாம் இப்போது பழுத்த விடுதலை வீரரானார். ஆனால் அவருக்கு ஒரு பெரிய மனக்குறை.

"ரகசிய விடுதலை இயக்க ஸ்தாபனங்களை வங்கத்திலும் பீகாரிலும்தானே நிறுவி இருக்கிறோம்? இந்தியா முழுவதும் இதன் கிளைகள் பரவ வேண்டாமா?" - இப்படி அவர் புரட்சித் தலைவர்களுடன் வாதிட்டார்.

"அமைக்கலாம் அபுல்கலாம். பரந்த அளவில் ஸ்தாபனங்களை அமைக்கும்போது ரகசியத்தைக் காக்க முடியுமா?"

"தூக்குமேடையே அழைத்தாலும் நமது ரகசியப் பணிகளை வெளியிடாத வீரர்களை மட்டும் சேர்த்துக் கொள்வோம்"- இது அபுல்கலாம் அளித்த பதில். அவர் ஒருவழியாகத் தலைமறைவு இயக்கத் தலைவர்களைத் தன் கருத்தை ஏற்றுக்கொள்ளுமாறு செய்து, இந்தியாவெங்கும் மாறுவேடத்தில் சென்று புரட்சி வீரர்களுடன் தொடர்பு கொண்டு ரகசிய விடுதலை இயக்க அமைப்புகளை அமைத்தார். செய்தி அறிந்த பல மாநில அரசாங்கங்கள் அபுல்கலாம் தங்கள் மாநிலத்தில் நுழையக்கூடது என்று தடைவிதித்தன.

1908ம் ஆண்டு அபுல்கலாம் எகிப்திற்குச் சென்றார். விடுதலை வீரர் முஸ்தபா கமால் பாட்சாவின் ஆதரவாளர்களோடு தொடர்பு கொண்டார். அங்கே இளம் துருக்கியர்கள் தொடங்கி நடத்திய வார ஏடு அவரைப் பெரிதும் கவர்ந்தது. ஓர் ஏட்டின் மூலமாக லட்சோப லட்சம் மக்களைப் புரட்சியின் தூதர்களாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கை விடி வெள்ளி முளைத்தது. அங்கிருந்து அவர் துருக்கிக்குச் சென்றார். துருக்கியின் ரகசியப் புரட்சித் தலைவர்களைச் சந்தித்தார்.

புரட்சி உலகக் கூடங்களில் புடம்போட்ட வீரராக, அனுபவக் களஞ்சியமாக 1912ம் ஆண்டு அபுல்கலாம் தாயகம் திரும்பினர். "அரபு நாடுகளில் நடைபெறும் விடுதலை இயக்கங்களில் இஸ்லாமியர்கள் முன்னணியில் நிற்கும் போது இங்குமட்டும்?" - இந்தச் சிந்தனை சுழன்று சுழன்று வந்தது. இப்போது அவரது சிந்தையில் குடியேறியிருந்த ஒரே லட்சியம் இஸ்லாமிய சமுதாயத்தை முழுக்க முழுக்க விடுதலை இயக்கத்தின் போர்ப் பாசறைக்கு அழைத்து வர வேண்டுமென்பதுதான்.

அதற்காக அவர் 'அல்ஹிலால்' என்ற உருது வார ஏட்டைத் துவக்கினார். ஒவ்வொரு இதழும் புரட்சி ஜுவாலையாக வெளியே வந்தது. அந்த ஏடு வெளிவந்த மூன்றே மாதங்களில் இஸ்லாமிய சமுதாயத்தில் பெரும் பரபரப்பைத் துடிதுடிப்பை ஏற்படுத்தியது.

இஸ்லாமிய இளைஞர் சமுதாயம் அல்ஹிலாலுக்கு மகத்தான வரவேற்பளித்தது. மூன்றே மாதங்களில் ஏற்கெனவே வெளியிட்ட பிரதிகளையெல்லாம் மீண்டும் அச்சடித்துக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இரண்டே ஆண்டுகளில் 'அல்ஹிலால்' வாரம் இருபத்தாறாயிரம் பிரதிகள் விற்பனையாயின. இது அன்றைக்கு உருதுப்பத்திரிக்கை உலகத்தில் எவரெஸ்ட் சாதனையாகும்.

இந்த ஏட்டில் ஆசாத் என்ற புனை பெயரில் வந்த கட்டுரைகளை மக்கள் கற்கண்டுச் சுவையோடு படித்தனர். ஆசாத் என்றால் சுதந்திரம் என்று பொருள். இந்தப் புனைப் பெயரில் எழுதியவர் நமது அபுல் கலாம் தான். 1915 ஆண்டு வெள்ளை அரசாங்கம் அல்ஹிலாலின் தீவிரத்தைத் தாங்க இயலாது அச்சகத்தையே பறிமுதல் செய்தது. ஐந்தே மாதங்கள் இடைவெளியில் அபுல்கலாம் 'அல்பலாக்' என்ற வார ஏட்டைத் துவக்கினார். இப்போது வெள்ளை அரசாங்கம் தனது கடைசி ஆயுதத்தை வீசியது. 1916 ஆண்டு ஏப்ரல் மாதம் அபுல்கலாம் வங்க மாநிலத்தை விட்டுவெளியேற வேண்டுமென்ற உத்தரவு பிறந்தது. ஏற்கெனவே அபுல்கலாம் தங்கள் மாநிலத்தில் அடியெடுத்து வைக்கக்கூடாதென்று பம்பாய், பஞ்சாப், டெல்லி, உத்திரப்பிரதேச மாநிலங்கள் தடை விதித்திருந்தன. எனவே அவர் (பீகார் மாநிலம்) ராஞ்சிக்குச் சென்றார். ஆறுமாதங்களுக்குப் பின்னால் அவர் அங்கே கைது செய்யப்பட்டு மூன்றாண்டுகள் சிறையிலிருந்தார்.

1920ம் ஆண்டு ஜனவரி முதல் தேதி பூட்டிய இருப்புக்கூட்டின் கதவு திறக்கப்பட்டது.

1942ம் ஆண்டு ஆகஸ்ட் 7 நாள், பம்பாயில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி 'வெள்ளையனே வெளியேறு' என்று வரலாற்றுச்சிறப்பு வாய்ந்த தீர்மானத்தை வடித்தெடுத்தது. இந்தத் தீர்மானம் அன்று அகில இந்திய காங்கிரஸ் கட்சித்தலைவராக இருந்த அபுல்கலாம் ஆசாத்தின் தலைமையில்தான் நிறைவேற்றப்பட்டது. பம்பாயில் புலாபாய் தேசாய் அவர்களின் இல்லத்தில் தங்கியிருந்த ஆசாத் கைது செய்யப்பட்டார்.

1943ம் ஆண்டு ஏப்ரல்மாதம் சிறை அதிகாரி சீட்டாக்கான் மௌனமாக வந்து ஆசாத்திடம் ஒரு தந்தியை நீட்டினார். ஏதோ சிந்தனையில் மூழ்கியிருந்த ஆசாத் தந்தியை வாங்கிப்பிரித்துப்பார்த்தார். அவருடையை அன்பு மனைவி காலமாகிவிட்டார் என்கிற துயரச்செய்தியைத் தாங்கி வந்திருந்தது அது. 1945ம் ஜுன் மாதம் அபுல்கலாம் ஆசாத் பங்குதாராவிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். மறுநாள் காலை கல்கத்தா நகரம் அவரை வரவேற்க எழுச்சிப் பெருங்குன்றாக எழுந்து நின்றது. ஹவ்ரா ரெயில் நிலையத்தை மக்கட் கடல் மூழ்கடித்துவிட்டது.

ஆசாத் காரில் ஏறினார். ஆமாம் எங்கே செல்வது? அவரை வரவேற்க ரெயில் நிலையத்திற்கு இரண்டு லட்சம் மக்கள் வந்திருந்தனர். ஆனால் நாலரை ஆண்டுகளுக்கு முன்பு நோய் வாய்ப்பட்ட நிலையிலும் தள்ளாடிக் தள்ளாடிக் வாசலுக்கு வந்து பம்பாய் காங்கிரசிற்கு அவரை வழியனுப்பி வைத்த மாதர்குல மாணிக்கம் அவரை அதே வாசலில் நின்று வரவேற்க இன்று இல்லையே? இல்லம் காலியாக வெறிச் சோடிக்கிடக்கிறதே.

ஆசாதின் மாதரசி நீங்காத துயில் கொண்டிருக்கும் சமாதியை நோக்கி கார் ஓடியது. கண்களில் திரையிட்டு நின்ற கண்ணீரைத் துடைத்துக்கொண்டே காரில் இருந்த ஒரு மாலையை எடுத்து சமாதியின் மீது சூட்டி அஞ்சலி(ஸலாம்) செலுத்தினார் ஆசாத். அமைதியாக 'பாத்தியா'(துஆ) ஓதினார்."அவரைக் கணவராக அடைய மாதவம் செய்திருக்க வேண்டும். இனவெறியைக் கொன்ற உயர்ந்த தேச பக்தன்தான் உண்மையான முசல்மானாக இருக்க முடியும். எனவே அவரைக் கணவராக அடைந்ததிலே நான்பெருமைப் படுகிறேன்" என்று புன்னகையோடு சொன்ன தேச பக்த திலகமல்லவா அந்த அம்மையார். சோலை, ஆனந்தவிகடன்(25-02-09)

இது தான் பத்திரிக்கை



அமெரிக்காவில் ஒரு தெருவில் நாயொன்று படு வேகமாக ஒரு பெண்ணை துரத்திக்கொண்டு வந்தது.

அந்தப்பெண்னோ மிகப்பயந்தவளாக நாய் கடித்துவிடாமல் இருக்க தன்னை பாதுகாத்துகொள்ளும் நோக்கோடு மிக வேகமாக ஓடி வந்துகொண்டிருந்தாள்.

நாய் அவளை நெருங்கி கடித்து விடும் நிலையில் அவளை காப்பாற்ற யாரும் முன்வராத நிலையில்

அந்த நொடி ஒரு மனிதன் சடாரென பாய்ந்து நாயை வேகமாக ஒரு உதை விட்டு அந்த பெண்ணை காப்பாற்றினான்.

பிறகு காப்பாற்றியவருக்கு நன்றியோடு விடைபெற்று அவ்விடத்தை நிம்மதியாக நடந்தாள்

அதை ஒரு பத்திரிக்கை நிருபர் நேரடியாக பார்த்து தனது கேமராவில் பதிவு செய்து கொண்டார்.

பின் அந்த மனிதனின் செயலை பாராட்டி "கண்டிப்பாக இதை நாளை பத்திரிக்கையில் பிரசுரிக்கிறேன்

தலைப்பு செய்தியே இது தான், 'லோக்கல் ஹீரோ வெறி நாயிடமிருந்து பெண்ணைக் காப்பாற்றினார்.'"

அந்த மனிதன்,"நன்றி, ஆனால் நான் உள்ளூர் இல்லை" என்றான்.

உடனே நிருபர்,"ஓ அப்படியா, சரி இந்த செய்தி எப்படி? 'அமெரிக்கர் வெறி நாயிடமிருந்து பெண்ணைக் காப்பாற்றினார்'"

திரும்பவும் அந்த மனிதன் , “இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு சுற்றுபயணம் வந்திருக்கும் அப்துல் கறீம்” என்றார்.

மறு நாள் வந்த செய்தியின் தலைப்பு இப்படியிருந்தது..

"தெரு நாயை தீவிரவாதி தாக்கினான்"

சிறுபான்மை இடஒதுக்கீடு

சிறுபான்மை இடஒதுக்கீடு:அரசின் முடிவை உச்சநீதிமன்றம் அங்கீகரிக்கும் – மத்திய அரசு நம்பிக்கை!

சிறுபான்மையினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 4.5 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மத்திய அரசின் முடிவை உச்ச நீதிமன்றம் அங்கீகரிக்கும் என்று மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு அளிப்பது குறித்து சச்சார் கமிட்டி ஏழு ஆண்டுகளுக்கு முன், மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்தது. இந்தக் கமிட்டி தனது அறிக்கையில் இந்திய முஸ்லிம்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி நிலை குறித்து விளக்கியிருந்தது. இந்நிலையில், சச்சார் கமிட்டி தொடர்பாகமும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்ற மத்திய சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் பேசியது:

சிறுபான்மையினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 4.5 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு, உச்ச நீதிமன்றத்தின் அரசமைப்புச் சட்ட அமர்வின் முன் விசாரணையில் உள்ளது. அரசின் முடிவுக்கு நீதிமன்றம் விரைவில் அங்கீகாரம் அளிக்கும் என்று நம்புகிறோம். மத்திய அரசின் முடிவு நியாயமானது மட்டுமின்றி சட்டபூர்வமானதும் ஆகும். நாட்டில் சிறுபான்மையினர் 14 சதவீதம் பேர் உள்ளனர். அவர்களில் 9 சதவீதம் பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்புவோருக்கான ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை பலராலும் எழுப்பப்படுகிறது. சவூதி அரசாங்கமே தனது ஒதுக்கீட்டை 50 சதவீதமாகவும், மற்ற நாடுகளுக்கான ஒதுக்கீட்டை
20 சதவீதமாகவும் குறைத்துள்ளது. தனியார் சுற்றுலா உரிமையாளர்கள் மூலம் அனுப்பப்படும் ஹஜ் பயணிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதா? வேண்டாமா? என்பதுகுறித்து மத்திய ஹஜ் கமிட்டி முடிவு செய்யும். மக்கள்தொகையின் அடிப்படையில் ஹஜ் கோட்டாவை உயர்த்துமாறு நாம் அடுத்த ஆண்டு சவூதி அரசிடம் கோர உள்ளோம் என்றார்