Monday, July 1, 2013

அண்ணலார் அறிவித்த நிகழ்கால அடையாளங்கள்.


ஒவ்வொரு காலத்திலும் இஸ்லாத்தின் உண்மைத்துவத்தை பிரதிபலிக்கக் கூடிய நிகழ்வுகள் நடந்துகொண்டே இருக்கின்றன. விஞ்ஞான ரீதியாக ஒவ்வோர் ஆய்வின் முடிவும் நவீன கண்டுபிடிப்புகளும் குர்ஆன் சத்தியவாக்கு என்பதை பறைசாற்றிக்கொண்டிருக்கின்றன. உதாரணமாக....
 
فَأَجَاءَهَا الْمَخَاضُ إِلَى جِذْعِ النَّخْلَةِ قَالَتْ يَا لَيْتَنِي مِتُّ قَبْلَ هَذَا وَكُنْتُ نَسْيًا مَنْسِيًّا 0 فَنَادَاهَا مِنْ تَحْتِهَا أَلَّا تَحْزَنِي قَدْ جَعَلَ رَبُّكِ تَحْتَكِ سَرِيًّا0
பிரசவ வலி அவரை ஒரு பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்திற்குக் கொண்டு சென்றது. நான் இதற்கு முன்பே இறந்து, அடியோடு மறக்கடிக்கப்பட்டவளாக இருந்திருக்கக் கூடாதா?'' என்று அவர் கூறினார். கவலைப்படாதீர்! உமது இறைவன் உமக்குக் கீழே ஊற்றை ஏற்படுத்தியுள்ளான்'' என்று அவரது கீழ்ப்புறத்திலிருந்து வானவர் அழைத்தார்.
திருக்குர்ஆன் 19:23.24
 
பிரசவ வலியில் துடிப்பதற்கும், கீழே நீரூற்றை ஏற்படுத்துவதற்கும் என்ன தொடர்பு? தொடர்பு இருப்பதை இன்றைய அறிவியல் உலகம் கண்டு பிடித்து குர் ஆன் இறைவனின் வார்த்தை என்பதை மேலும் மெய்பித்திருக்கிறது.
பிரசவம் நடைபெறும் லேபர் வார்டில் கணவனை அனுமதிப்பது தற்போது இந்தியா விலும் நடைமுறைக்கு வந்துள்ளது. பிரசவமாகும் பெண்ணுக்கு இது மனதளவில் தைரியத்தை தரும் என நம்பப்படுகிறது. ரஷ்யாவில் பிரசவத்தை நீருக்குள் வைத்துக் கொள்ளும் முறை நடைமுறையில் உள்ளது. நீருக்குள் பிரசவம் நடைபெறுவது தாய்க்கு பிரசவத்தை எளிதாக்குகிறது என்பது ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குழந்தை வயிற்றில் கருப்பையில் நீருக்குள்மிதந்தபடி தான் உள்ளது. எனவே நீருக்குள் பிரசவம் நடைபெறும் போது குழந்தை தனக்கு பழக்கப்பட்ட நிலையிலேயே வெளியே வருகிறது. எனவே குழந்தைக்கும் இது இயல்பானதாக உள்ளது. குளிர் நீரில் பிறப்பதால் குழந்தைக்கு நோய் எதிர்ப்புத்திறன் கூடுகிறது. ரஷ்யாவில் பிரசவ மருத்துவமனைகளில் பிரசவத்துக்கென சிறப்பு நீச்சல் குளங்கள் நீருடன் தயார் நிலையில் உள்ளன. தினமலர் 22-9-2009
 
  அது போல்
  நபி(ஸல்) அவர்கள் அறிவித்த முன்னறிவிப்புகளும் ஒவ்வொரு நாளும் உண்மையாகிக்கொண்டிருக்கின்றன.அதில் சிலவற்றை பார்ப்போம்..
 
1)சாதரணமானவர்கள் கூட மாடிவீடு கட்டுவது
أَخْبَرَنِي عُمَرُ بْنُ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُمْ بَيْنَا هُمْ جُلُوسٌ أَوْ قُعُودٌ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَاءَهُ رَجُلٌ يَمْشِي حَسَنُ الْوَجْهِ حَسَنُ الشَّعْرِ عَلَيْهِ ثِيَابُ بَيَاضٍ فَنَظَرَ الْقَوْمُ بَعْضُهُمْ إِلَى بَعْضٍ مَا نَعْرِفُ هَذَا وَمَا هَذَا بِصَاحِبِ سَفَرٍ ثُمَّ قَالَ يَا رَسُولَ اللَّهِ آتِيكَ قَالَ نَعَمْ فَجَاءَ فَوَضَعَ رُكْبَتَيْهِ عِنْدَ رُكْبَتَيْهِ وَيَدَيْهِ عَلَى فَخِذَيْهِ فَقَالَ مَا الْإِسْلَامُ قَالَ شَهَادَةُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ وَتُقِيمُ الصَّلَاةَ وَتُؤْتِي الزَّكَاةَ وَتَصُومُ رَمَضَانَ وَتَحُجُّ الْبَيْتَ قَالَ فَمَا الْإِيمَانُ قَالَ أَنْ تُؤْمِنَ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَالْجَنَّةِ وَالنَّارِ وَالْبَعْثِ بَعْدَ الْمَوْتِ وَالْقَدَرِ كُلِّهِ قَالَ فَمَا الْإِحْسَانُ قَالَ أَنْ تَعْمَلَ لِلَّهِ كَأَنَّكَ تَرَاهُ فَإِنْ لَمْ تَكُنْ تَرَاهُ فَإِنَّهُ يَرَاكَ قَالَ فَمَتَى السَّاعَةُ قَالَ مَا الْمَسْئُولُ عَنْهَا بِأَعْلَمَ مِنْ السَّائِلِ قَالَ فَمَا أَشْرَاطُهَا قَالَ إِذَا الْعُرَاةُ الْحُفَاةُ الْعَالَةُ رِعَاءُ الشَّاءِ تَطَاوَلُوا فِي الْبُنْيَانِ وَوَلَدَتْ الْإِمَاءُ رَبَّاتِهِنَّ قَالَ ثُمَّ قَالَ عَلَيَّ الرَّجُلَ فَطَلَبُوهُ فَلَمْ يَرَوْا شَيْئًا فَمَكَثَ يَوْمَيْنِ أَوْ ثَلَاثَةً ثُمَّ قَالَ يَا ابْنَ الْخَطَّابِ أَتَدْرِي مَنْ السَّائِلُ عَنْ كَذَا وَكَذَا قَالَ اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ قَالَ ذَاكَ جِبْرِيلُ جَاءَكُمْ يُعَلِّمُكُمْ دِينَكُمْ
 
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: என் தந்ைத உமர் பின்
அல்கத்தாப் (ரலி) அவர்கள் என்னிடம் ெதரிவித்தார்கள்:
நாங்கள் ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அருகில் இருந்தேபாது தூய
வெண்ணிற ஆடை அணிந்த, கறுப்பு நிறத்தில் தலமுடி உடைய ஒரு மனிதர் வந்தார். பயணத்தில் வந்த எந்த அடையாளமும் அவரிடம் காணப்படவில்லை;எங்களில் எவருக்கும் அவரை (யார் என)த் தெரிய வில்லை. அவர் நபி (ஸல்) அவர்களின் அருகில்
(சென்று), தம் முழங்கால்கைள நபியவர்களின் முழங்கால்களோடு இணைத்துக்கொண்டு
(நெருக்கமாக) அமர்ந்தார். அவர் தம்கைகளை தம் தொடைகள்மீது வைத்(து பவ்வியமாக
அமர்ந்)தார். பிறகு முஹம்மேத! இஸ்லாம் (அடிபணிதல்) என்றால் என்னெவன்று எனக்குத் ெதரிவியுங்கள்'' என்று ேகட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இஸ்லாம் என்பது, அல்லாஹ்ைவத் தவிர ேவறு இைறவன் இல்ைல என்றும் முஹம்மத் (ஆகியநான்) அல்லாஹ்வின் தூதர் என்றும் நீங்கள் உறுதி கூறுவதாகும்.ேமலும்,ெதாழுைகையக்கைடப்பிடிப்பதும், ஸகாத்ைத வழங்கிவருவதும், ரமளான் மாதத்தில் ேநான்பு ேநாற்பதும், ெசன்றுவர இயன்றால் இைறயில்லம் கஅபாவில் ஹஜ்' ெசய்வதும் ஆகும்'' என்று பதிலளித்தார்கள். அதற்கு அந்த மனிதர் உண்ைமதான்'' என்றார்.அவர் இவ்வாறு கூறியைதக் ேகட்டு, அவேர ேகள்வியும் ேகட்டுவிட்டு அவேர நபி (ஸல்)அவர்கள் அளித்த பதிைல உறுதிப்படுத்தவும் ெசய்கிறாேர என்று நாங்கள் வியப்பைடந்ேதாம்.அடுத்து அவர், ஈமான் (இைறநம்பிக்ைக) பற்றி எனக்குத் ெதரிவியுங்கள்'' என்று கூறினார்.அதற்கு நபி (ஸல்) அவர்கள்,அல்லாஹ்ைவயும் அவனுைடய வானவர்கைளயும் அவனுைடய ேவதங்கைளயும் அவனுைடய தூதர்கைளயும் இறுதி நாைளயும் நீங்கள்
நம்புவதாகும்; நன்ைம, தீைம அைனத்தும் விதியின்படிேய நடக்கின்றன என்றும் நீங்கள் நம்புவதுமாகும்'' என்று கூறினார்கள். அதற்கும் அம்மனிதர் உண்ைமதான்'' என்றார். அடுத்து அம்மனிதர்,இஹ்சான் (அழகிய முைறயில் ெசயலாற்றல்) பற்றி எனக்குத்ெதரிவியுங்கள்'' என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,(இஹ்சான் என்பது,) அல்லாஹ்ைவ நீங்கள் பார்த்துக் ெகாண்டிருப்பைதப் ேபான்ற உணர்வுடன் வழிபடுவதாகும்.ஏெனனில், அவைன நீங்கள் பார்க்கவில்ைல என்றாலும், அவன் உங்கைளப் பார்க்கின்றான்'' என்று பதிலளித்தார்கள். அம்மனிதர்,மறுைம (உலக அழிவு) நாைளப் பற்றி (அது எப்ேபாது வரும் என) எனக்குத் ெதரிவியுங்கள்'' என்று ேகட்க, நபி (ஸல்) அவர்கள், ேகள்வி ேகட்கப்படுபவர் (அதாவது நான்), ேகட்பவைரவிட (அதாவது உங்கைளவிட) அதிகம் அறிந்தவர் அல்லர். (இது பற்றிஎனக்கும் ெதரியாது; உங்களுக்கும் ெதரியாது.)'' என்று கூறினார்கள். அம்மனிதர்,மறுைம நாளின் அைடயாளங்கைளப் பற்றி எனக்குத் ெதரிவியுங்கள்!'' என்று
ேகட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,ஓர் அடிைமப் ெபண் தன் எசமானிையப்
ெபற்ெறடுப்பதும், காலில் ெசருப்பில்லாத, அைரகுைற ஆைடகைள அணிந்துள்ள
ஏைழகளான ஆட்டு இைடயர்கள் ேபாட்டி ேபாட்டுக்ெகாண்டு உயரமான கட்டடங்கள்
கட்டுவைத நீங்கள் காண்பதும் ஆகும்'' என்று கூறினார்கள்.
பிறகு அம்மனிதர் ெசன்றுவிட்டார். நீண்ட ேநரம் நான் (அங்ேகேய) இருந்ேதன். பின்னர்
என்னிடம் நபி (ஸல்) அவர்கள்,உமேர! ேகள்வி ேகட்ட அந்த நபர் யார் என்று உங்களுக்குத்
ெதரியுமா?'' என்று ேகட்டார்கள். நான், அல்லாஹ்வும் அவனுைடய தூதருேம நன்கு
அறிந்தவர்கள்'' என்று ெசான்ேனன். நபி (ஸல்) அவர்கள், அவர்தாம் (வானவர்) ஜிப்ரீல்.
உங்களுக்கு உங்களது மார்க்கத்ைதக் கற்றுத் தருவதற்காக உங்களிடம் அவர் வந்தார்''
என்று ெசான்னார்கள். இந்த ஹதீஸில் உலக அழிவு நாளின் அடையாளமாக கட்டடங்கள் அதிகமாவதையும். உயரமாக கட்டப்படுவதையும் கூறப்பட்டுள்ளது.
மக்கள் தொகை பெருக்கத்திற்கேற்ப வசிப்பிடங்களும் பெருகுவதில் ஆச்சரியமில்லை. இந்தியா சுதந்திரமடைந்தபோது 35 கோடியாக இருந்த இந்திய மக்கள் தொகை இன்று 125 கோடியை தாண்டிச் செல்கிறது. பல மாடிக் கட்டடங்கள் என்பது இந்தக்காலத்தில் குடிசைக்கு சமமாகிவிட்டது. 110 மாடிக் கட்டடம் அடிக்கடி காதில் விழும் வார்த்தை. அடுக்கு மாடிக்கு பெயரே கோபுரமாகி விட்ட காலம்.  இன்று ரியல் எஸ்டேட் உச்சத்தை எட்டியுள்ளது. பிளாட் வாங்கிய காலம் போய் சொந்தமாக தனித் தீவையே வாங்க ஆரம்பித்திருக்கிறாரகள். நிலத்தில் வாழ்ந்து அலுத்துப்போய் இப்போது சொகுசுக் கப்பல்-கடலில் செல்லும் வீட்டை வாங்குகிறார்கள். மண்ணில் வாழ்ந்து போரடித்துப்போய் விண்ணில் வாழ ஆசைப்பட்டு சந்திரமண்டலத்தில் இடம் புக்கிங்செய்கிறாரகள்.  அதனால் தான் நபி(ஸல்) அவர்கள் கட்டடங்களில் செலவு செய்வதை பரகத் இல்லாத செயல் என்றார்கள்.
 
وعن علي رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم : " إذا لم يبارك للعبد في ماله جعله في الماء والطين
 
ஒரு அடியானின் பொருளில் பரகத் செய்யப்படவில்லை என்றால் அந்த பொருளை தண்ணீரிலும்.களிமண்ணிலும் செலவு செய்வான் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர். அலி(ரலி) நூல்.மிஸ்காத்.
وعن أنس قال : قال رسول الله صلى الله عليه وسلم : " النفقة كلها في سبيل الله إلا البناء فلا خير فيه " . رواه الترمذ
நன்மையை நாடி செலவு செய்யக்கூடிய எல்லா செலவுகளும் அல்லாஹ்வின் பாதையில் செலவு செயததைப்போன்று.ஆனால் கட்டடத்தை தவிர. அதில் நன்மையில்லை. என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். 
2).எழுத்தின் ஆதிக்கம் அதிகமாகும்..
 
 
عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ بَيْنَ يَدَيْ السَّاعَةِ  وَظُهُورَ الْقَلَمِ
யுக முடிவு நாள் வருவதற்கு முன் எழுது கோல் எழுச்சிபெறும் என்று நபி(ஸல்)அவரகள் கூறினார்கள். நூல்; அஹ்மத்.
எழுதுகோல். என்பது கல்வி வளர்ச்சியையே குறிக்கும். நபி(ஸல்) அவர்களின் காலத்தில் அரபு நாட்டில் மட்டுமல்ல ஏறத்தால முழு உலகிலும் கட்டாயக்கல்வி நடைமுறையில் இருக்கவில்லை.சீனாவில் மட்டுமே அரசாங்க ரீதியாக கட்டாயக்கல்வி பெறும் சட்டம் நடப்பில் இருந்தது. ஆனால் இன்று எழுத்தறிவு என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. பரவலாக எல்லா நாடுகளிலும் கட்டாயக் கல்விமுறை நடப்பில் உள்ளது. விஞ்ஞானத்துறையின் வளர்ச்சி பற்றி சொல்லத்தேவயில்லை. நூலகங்கள் நிரம்பி வழிகின்றன. எழுதுகோல். விசாலானமான அர்த்தம் கொண்டவார்த்தை. இன்று அச்சுத்துறையில் ஏற்பட்டிருக்கும் எல்லா நவீன சாதனங்களையும் உள்ளடக்கிக் கொள்ளும். ஒரு குறுந்தகட்டில் இலட்சக்கணக்கான பக்கங்களை பதிவு செய்யமுடியும். ஒரு செய்தியை இன்டர்நெட் மூலம் சில மணித்துளிக்குல் பல நாடுகளுக்கு கொண்டுபோகமுடியும்.. எழுத்தறிவு இல்லாத ஓர் உலகில் வாழ்ந்த நபி(ஸல்) அவர்கள் எழுத்துத்துறை வளர்ச்சி பற்றி பேசமுடிகிறதென்றால் அது இறைச்செய்தியைத் தவிர வேறென்னவாக இருக்கமுடியும்.
3).வியாபாரம் அதிகமாகும்.
 
 
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ يَدَيْ السَّاعَةِ تَسْلِيمُ الْخَاصَّةِ وَتَفْشُو التِّجَارَةُ حَتَّى تُعِينَ الْمَرْأَةُ زَوْجَهَا عَلَى التِّجَارَةِ وَتُقْطَعُ الْأَرْحَامُ
 
கியாமத் நிகழ்வதற்கு முன்.குறிப்பிட்டவருக்கு மட்டும் ஸலாம் சொல்வது. வியாபாரம் பெருகுவது எந்த அளவென்றால் ஒரு பெண் தன் கணவனுடைய வியாபாரத்திற்கு உதவிடுவாள். உறவு துண்டிக்கப்படுவது. போன்ற செயல்கள் ஏற்படும் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். நூல்; அஹ்மத்.
عَنْ أَبِي هُرَيْرَةَ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تَظْهَرَ الْفِتَنُ وَيَكْثُرَ الْكَذِبُ وَيَتَقَارَبَ الْأَسْوَاقُ وَيَتَقَارَبَ الزَّمَانُ وَيَكْثُرَ الْهَرْجُ قِيلَ وَمَا الْهَرْجُ قَالَ الْقَتْلُ
 
 
கடைகள் பெருகி அருகருகே அமைவதும், நியாயத் தீர்ப்பு நாளின் அடையாளம்என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். நூல் : அஹமத் 10306.
 இன்று இதைக் கண்கூடாகக் காண்கிறோம். வியாபார ஒப்பந்தத்தில் எத்தனை எத்தனையோ வகைகள். இண்டர்நெட் வியாபாரத்திற்கு ஈடு இணை இல்லை. இருந்த இடத்தில் இருந்துகொண்டு உலகின் எந்த பகுதியில் உள்ள பொருளையும் வாங்க முடிகிறது. விலை பேச முடிகிறது. விற்க முடிகிறது. உடனுக்குடன் சரக்கு கைமாறுகிறது. கிரடிட் கார்டு, டெபிட் கார்டு போன்றவை வணிகத்தை மேலும் இலேசாக்குகிறது.
4).உயிரில்லாத பொருட்கள் பேசும்.
 
فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَدَقَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يُكَلِّمَ السِّبَاعُ الْإِنْسَ وَيُكَلِّمَ الرَّجُلَ عَذَبَةُ سَوْطِهِ وَشِرَاكُ نَعْلِهِ وَيُخْبِرَهُ فَخِذُهُ بِمَا أَحْدَثَ أَهْلُهُ بَعْدَهُ
விலங்கினங்கள் மனிதனிடம் பேசும் வரையிலும் தோல் சாட்டையும் செருப்பு வாரும் மனிதனிடம் பேசும் வரையிலும் யுக முடிவு நாள் ஏற்படாது என நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்.  நூல் : அஹ்மத் 11365.
இதுவும் இன்று நடைமுறைக்கு வந்துவிட்டது. ரோபோ. செல்போன். ரேடியோ போன்ற உயிரற்றவைகள் பேச ஆரம்பித்து விட்டன.
5). பள்ளிவாசல்கள் அதிகமாகும். ஆனால் இமாம் கிடைக்கமாட்டார்கள்.
عَنْ أَنَسٍ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَتَبَاهَى النَّاسُ فِي الْمَسَاجِدِ
மனிதர்கள் பள்ளிவாசல்களைக் காட்டி பெருமையடிப்பது யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்றாகும்என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்கள் ::: நஸாயி 682, அபூதாவூத் 379, இப்னுமாஜா 731, அஹ்மத் 11931, 12016,
عَنْ سَلَامَةَ ابْنَةِ الْحُرِّ قَالَتْ
سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّ مِنْ أَشْرَاطِ السَّاعَةِ أَوْ فِي شِرَارِ الْخَلْقِ أَنْ يَتَدَافَعَ أَهْلُ الْمَسْجِدِ لَا يَجِدُونَ إِمَامًا يُصَلِّي بِهِمْ
   
மக்களுக்கு தொழவைக்க கூடிய இமாமை பெற்றுக்கொள்ளாமல் இரூப்பது
உலக முடிவு நாளின் அடையாளங்களில்உள்ளதாகும் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். நூல்; மிஸ்காத். இந்த நபிமொழிக்கு இரண்டு கருத்து கூறப்படுகிறது. முதலாவது. பள்ளியின் பொறுப்புதாரிகளுக்கு தொழவைக்க தெரியாது.( இன்று நிர்வாகிகளுக்கு தொழுகவே தெரியல.)
இரண்டாவது, கல்விக்கு மதிப்பு மக்களிடத்தில் குறைந்து ஆலிம்கள் குறைவால் இமாம் கிடைக்கமாட்டார்கள்.
   இன்று மக்களிடம் கண்ணியமானதெல்லாம் இழிவாக தெரிகிறது.  இழிவானது கண்ணியமானதாக தெரிகிறது.  
: وقال عمر بن الخطاب: لو كنت مؤذنا لكمل أمري، وما باليت ألا أنتصب لقيام الليل ولا لصيام النهار، سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: "اللهم اغفر للمؤذنين" ثلاثا، قال: فقلت: يا رسول الله، تركتنا، ونحن نجتلد على الأذان بالسيوف. قال: "كلا يا عمر، إنه يأتي (1) على الناس زمان يتركون الأذان على ضعفائهم، وتلك لحوم حرمها الله على النار، لحوم المؤذنين"
உமர்(ரலி)அவர்கள் கூறினார்கள்.நான் பாங்கு சொல்லக்கூடியவனாக இருந்தால் என்னுடைய விஷயம் பரிபூரணமாகிவிடுமே. வேரெதையும் பற்றி நான் பொருட்படுத்தமாட்டேனே. என்று சொல்லிவிட்டு கூறினார்கள்.நபி(ஸல்)அவர்கள் பாங்கு சொல்பவரின் பாவத்தை மன்னிப்பானாக என்று மூன்று முறை துஆ செய்தார்கள். இதைக் கேட்டு நான் கூறினேன் எங்களுக்கு இந்த பாக்கியம் கிடைக்காமல்போய் விட்டதே.நாங்கள் ஆயுதங்கள் சுமந்துகொண்டு அந்த பாக்கியத்தை இழந்துவிட்டோமே என்று கவலையோடு சொன்னபோது நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். உமரே (ரலி) இப்போது நீர் அதை விட்டதற்காக கவலை படுகிறீர். ஆனால் இனிமேல் ஒரு காலம் வரும் அப்போது பாங்கு சொல்லும் பொருப்பை பலகீனமானவர்களிடம் ஒப்படைப்பார்கள்.( அதாவது பாங்கு சொல்வதை கேவலமாக கருதுவார்கள்)
  قال رسول الله صلى الله عليه وسلم :  ، والمؤذنون أطول الناس أعناقاً يوم القيامة »
"மறுமை நாளில் மக்களிலேயே நீண்ட கழுத்து உடையவர்களாகத் தொழுகை அறிவிப்பாளர்கள் காணப்படுவார்கள்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: முஆவியா (ரலி),
நூல்: முஸ்லிம் (631)
( مَنْ أَذَّنَ ثِنْتَيْ عَشْرَةَ سَنَةً وَجَبَتْ لَهُ الْجَنَّةُ وَكُتِبَ لَهُ بِتَأْذِينِهِ فِي كُلِّ يَوْمٍ سِتُّونَ حَسَنَةً وَلِكُلِّ إِقَامَةٍ ثَلَاثُونَ حَسَنَةً )
பன்னிரெண்டு வருடங்கள் பாங்கு சொன்னவருக்கு சொர்க்கம் கடமையாகிவிட்டது, ஒவ்வொரு நாளும் அவர் கூறும் பாங்கிற்காக 60 நன்மைகளும் இகாமத்திற்காக 30 நன்மைகளும் அவருக்கு எழுதப்படுகின்றன என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
(அறிவிப்பவர் : இப்னு உமர் -ரலி, நூற்கள் : இப்னுமாஜா 720, ஹாகிம்)
பாங்கு சொல்வதற்காகப் போட்டி போடுவது.
பாங்கு சொல்லுதல் என்ற நற்காரியத்திற்கு இறைவன் நன்மைகளை வாரிவழங்குகிறான். அவன் வாரிவழங்குவது இவ்வுலகில் நமது கண்களுக்குத் தெரியாது. இதன் காரணமாகத் தான் நாம் அந்த நற்காரியத்தைச் செய்வதில் அசட்டையாக இருக்கின்றோம். பாங்கு சொல்வதால் கிடைக்கும் நன்மையை அல்லாஹ் நமது கண்களுக்குக் காட்டினால் நிச்சயமாக அந்தப் பாக்கியத்தைப் பெறுவதற்காகபாங்கு சொல்பவரை சீட்டுக் குலுக்கிப் போட்டு தேர்ந்து எடுக்கும் நிலைதான் ஏற்படும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  பாங்கு சொல்வதிலும், (கூட்டுத் தொழுகையில்) முதல் வரிசையிலும் இருக்கும் நன்மையை மக்கள் அறிவார்களாயின் (அதை அடைந்துகொள்ள) சீட்டுக் குலுக்கிப் போடுவதைத் தவிர வேறு வழியில்லாமல் போனால் நிச்சயம் சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள்
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூற்கள்: புகாரி (615,

யார் பாங்கு சொல்வது என் விஷயத்தில் சிலர் தர்க்கித்தனர். அவர்களிடையில் ஸஃத் இப்னு அபீ வக்காஸ் (ரலியல்லாஹு அன்ஹு) சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள்.

No comments:

Post a Comment