Thursday, August 22, 2013

ஜனாஸா(மய்யித்) சம்பந்தமான சட்டங்களும் அதன் வழி முறைகளும்

ஒரு முஸ்லிம் மரணித்துவிட்டால் அவரைச் சுற்றியுள்ள முஸ்லிகள் உடனே அவருக்கு செய் யவேண்டிய அவசியமான குளிப்பாட்டுதல், கஃபனிடுதல், தொழவைத்தல், அடக்கம் செய்தல் போன்றவற்றை செய்வது கட்டாய கடமையாகும்.
ஆனால் நம் இஸ்லாமியர்களின் பெரும்பாலானவர்களிள் குடும்பத்தில் யாராவது இறந்து விட்டால் அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் அந்த மைய்யத்திற்க்கு செய்ய வேன்டிய கடமைகள் என்ன என்று கூட தெரியாமல் இருக்கின்றார்கள்.
இன்னும் சில குடும்பங்களில் முஅத்தின்(மோதினார்) இமாம்(ஹஜ்ரத்) போன்றோரை அழைத்துவந்து மைய்யத்திற்க்கு செய்யவேண்டியதை செய்யுங்கள் என்று சொல்லி விட்டு அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் ஒதுங்கி கொள்கிறார்கள்.
இந்த நிலையைப் போக்கி இதன் உண்மையான நிலைகளை நமது சகோதரர்கள் புரிந்து செயல்பட வேண்டு மென்ற நன்நோக்கில் என்னால் முடிந்த வரை குர்ஆன் ஹதீஸின் அடிப்படையில் இதை தொகுத்துள்ளேன். அதனால் ஒவ்வொரு முஸ்லிமும் தங்கள் குடும்பத்தில் ஏற்ப்படும் மைய்யித்திற்காவது நாமே அதற்கு செய்யவேண்டிய கடமைகளை செய்ய வேண்டும் என்று எண்ணி இவைகளை நாம் படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
(குல்லு நப்சின் தாயிகதுல் மவ்த்) ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை அடைந்தேதீரும். (அல்குர்ஆண். 3ஃ185) என்ற அல்லாஹ்வின் கூற்றுக்கிணங்க) இந்த உலகில் பிறந்த அனைவருமே ஒரு நாள் இறப்பவர்கள்தான் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது நமக்கு .முன்னர் வாழ்ந்த அனைவரும் இறந்தது போலவே நாமும் ஒரு நாள் இறப்போம், நம்மையும் ஒரு நாள் கப்ரில் வைப்பார்கள் என்பது உண்மை.
ஆனால் நாம் எங்கு? எப்படி? எப்போது? இறப்போம் என்பது அல்லாஹ் மட்டுமே அறிந்திருக்கிற மறைவான ஞனத்தில் உள்ளதாகும். எனவே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ள இன்பங்களை தகர்த்தொழிக்கக்கூடிய (மரணத்) அதிகமதிகம் நிணைவு கூருங்கள். (திர்மிதி) என்ற சொல்லிற்கிணங்க ங்மரணத்திற்குப் பின்னருள்ள வாழ்க்கைக்காக அல்லாஹ்வும் ரசூலும் ஏவிய நற்செயல்களை அதிகம் கடை பிடித்து அவர்கள்தடுத்துள்ள காரியங்களை தவிர்த்துக் கொள்வது நம் அனைவர்கள் மீதும் கடமைய கடமையாகும். ஆகவே ஒரு முஸ்லிம் மரணித்துவிட்டால் அவரின் குடும்பத்தில் உள்ளவர்கள் செய்ய வேண்டிய கடமைகள் பல உள்ளன அவைகள் குறித்து இன்ஷா அல்லாஹ் கானலாம்.
1. மைய்யத்தின் கண் திறந்து இருந்தால் அதைக் கசக்கி மூட வேண்டும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அபூஸலமா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் இறந்தபோது அவர்களின் கண்களை கசக்கி மூடி விட்டு கூறினார்கள் உயிர்கைப்பற்றப்படும்போது பார்வை அதை பின்பற்றி (நிலை குத்தி) நின்றுவிடுகிறது என்று கூறினார்கள் (முஸ்லிம்)
2. இறந்த உடனேயே அந்த மைய்யித்து விகாரம் அடையாத அளவுக்கு உடல் சூட்டோடு இருக்கும்போதே கை கால்களை இலகுபடுத்தி சீராக படுக்கவைக்கவேண்டும். அதோடு அந்த மைய்யத்தின் வயிறு ஊதாமல் இருப்பதற்காக சற்று கன கனமான பொருளை வயிற்றில் வைக்க வேண்டும்.
3. மைய்யித்தின் உடல் முழுதும் ஆடையால் மறைக்கவேண்டும். நபி(ஸல்)அவர்கள் இறந்த போது கோடு போட்ட ஒரு ஆடையால் உடல் முழுக்க மூடி மறைக்கப்பட்டார்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மனைவி அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அஅறிவித்தார்கள் (ஆதாரம்: புகாரி முஸ்லிம்)
4. குளிப்பாட்டி ஆடையிட்டு (கபனிட்டு) ஜனாஸ தொழுகை நடத்தி முடித்து அடக்கம் செய்யும் வரை எல்லாவற்றையும் விரைவாகச் செய்ய வேண்டும் ஜனாஸாவை அடக்கம் செய்வதில் வேகம் காட்டுங்கள் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள் (ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)
5. எந்த ஊரில் அவர் இறந்தாரோ அதே ஊரில் அவரை அடக்கம் செய்ய முயற்ச்சிக்க வேண்டும் உஹது போரில் கொல்லப்பட்ட(ஷஹீதான) சஹாபாக்களை இடம் மாற்றாமல் அந்த இடத்திலேயே அடக்கம் செய்யுமாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கட்டளையிட்டார்கள் (ஆதாரம்:திர்மிதி. அபூதாவுத், நஸஈ,இப்னு மாஜா)
  ஜனாஸாவை குளிப்பாட்டுதல்  
ஜனாஸாவை குளிப்பாட்டுவது முதல் தொழுகை நடத்துவது வரை உள் ளவற்றை சிலர்செய்வதன் மூலம் மற்றவர்களின் மீதான கடமை நீங்கிவிடும். இதற்குதான் (ஃபர்ழ் கிஃபாயா) என்றுசொல்லப்படும் எவருமே இந்த கடமைகளை செய்யாதபோது எல்லோருமே குற்றவாளிகளாக தண்டிக்கப் படுவோம் .ஜனாஸாவை குளிப்பாட்டுவது முதல் அடக்கம் செய்வது வரை கலந்து கொண்டவரின் நன்மைபற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதிகமதிகம் கூறி இருக்கிறார்கள்.
ஒருவர் தான் இறந்த பின் நீங்கள் தான் என்னை குளிப்பாட்டவேண்டும் என்று (வஸிய்யத்) மரண சாசனம் எழுதி வைத்திருந்தால் அவர்தான் அந்த ஜனாஸாவை குளிப்பாட்டுவதற்கு அதிக உரிமை பெற்றவர். அப்படி வஸிய்யத் செய்யாதபட்சத்தில் இறந்தவருக்கு மிக நெருக்கமான உறவுமிக்கவர் உரிமை பெறுவார், ஏனெனில் அவர்கள்த தாம் அதிக அக்கறை கொள்வர். பெண்ணுக்கும் வஸிய்யத் விஷயத்தில் ஆணைப் போன்றே.
கணவன் தன் மனைவியையும் மனைவி தன் கணவனையும் குளிப்பாட்டலாம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது மனைவி ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடத்தில் கவலைப் படாதீர்கள் எனக்கு முன்னால் நீங்கள் இறந்து விட்டால் நானே உங்களை குளிப்பாட்டுவேன் என்று கூறினார்கள். (ஆதாரம் : அஹ்மத்)
அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நான் இறந்த பின் எனது மனைவிதான் பின் என்னை குளிப்பாட்டவேண்டும்என்று வஸிய்யத் செய்து இருந்தார்கள். (ஆதாரம் : முஸன்னப் அப்திர் ரஸ்ஸாக்)
ஏழு வயதிற்க்குட்பட்ட ஆண் அல்லது பெண் பிள்ளைகளில் யார் இறந்தாலும் அவர்களைதாய் அல்லது தந்தை குளிப்பாட்டலாம்.
ஆண்கள் மட்டுமே உள்ள இடத்தில் பெண் இறந்து விட்டாலோ அல்லது பெண்கள் மட்டுமேஉள்ள இடத்தில் ஆண் இறந்துவிட்டாலோ குளிப்பாட்டாமல் தயமம் அதாவது ஒருவர் தன் இரண்டுகை களையும் பூமியில் அடித்து அவ்விரு கைகளையும் அந்த ஜனாஸாவின் முகம் கைகளில் தடவவேண்டும்
காபிர் இறந்துவிட்டால் எக்காரணத்தை முன்னிட்டும் அவரை குளிப்பாட்டுவதோ அடக்கம் செய்வதோ கூடாது இதுப்பற்றி அல்லாஹ்வே கூறுகிறான் அவர்களில் யாராவது இறந்துவிட்டால் அவருக்காக நீர் ஒருக்க காலும் (ஜனாஸா) தொழுகை தொழவேண்டாம் இன்னும் அவர்களின் (கப்ரில்) அடக்கஸ்தலத்தில் அவருக்கு (பிரார்த்திப்பதற்காக) நிற்கவேண்டாம் (அல்குர்ஆண்.9 9ஃ84) என்று கூறுகிறான் தொழ வைப்பதே கூடாது என்று சொல்லும்போது மற்றதைப்பற்றி சொல்ல வேண்டியதில்லை
மைய்யித்தை குளிப்பாட்டும்போது அதன் மருமப்பகுதிகள் யார் கண்களிலும் படாத வாறு மறைத்த நிலையிலேயே அதன் ஆடைகளை களைய வேண்டும். பிறகு மைய்யித்தை சற்று உயர்த்தி உட்காகார வைத்து அசுத்தங்கள் வெளியாகும் வரை வயிற்றை நன்றாக அழுத்த வேண்டும் இந்த நேரத்தில் தண்ணீரை அதிகமாக பயன்படுத்தி கொள்ளவேண்டும்.
மைய்யித்தை குளிப்ப பாட்டுபவர் தனது கையில் துணி அல்லது கையுறையை சுற்றிக் கொண்டு மைய்யித்தின் மர்ம உறுப்புக்களை சுத்தம் செய்யவேண்டும். அந்த மைய்யத்து ஏழு வயதுக்கு மேற்ப்பட்டவராக இருந்தால் மர்ம உறுப்புகளை பார்க்காமலேயே கழுகவேண்டும். பின்பு (பிஸ்மில்லாஹ்) என்று கூறி தொழுகைக்கு ஒழு செய்வதுபோல ஒழு செய்து விட வேண்டும். ஏனெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது மகள் ஜைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள்) இறந்தபோது அவர்களை குளிப்பாட்டிய பெண்களிடம் அவரின் வலது புறத்தையும் ஒழு செய்யும் உறுப்புகளையும் முதலில் கழுகுங்கள் என்று கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்)
மைய்யித்தின் வாயிலோ மூக்கிலோ தண்ணீரை செலுத்தக்கூடாது அதற்க்கு பதிலாக ஈரத்துணியை விரலில் சுற்றிக்கொண்டு மைய்யித்தின் இரு உதடுகளையும் லேசாக பிளந்து பற்களையும் மூக்குத் துவாரங்களையும் மெதுவாக தேய்த்து சுத்தம் செய்யவேண்டும். அதன் பிறகு இலந்த இலை அல்லது வாசனைப் பொருள் கலந்த தண்ணீரால் முகத்தையும் தாடியையும்கழுகவேண்டும் பிறகு எஞ்சிய தண்ணீரை வைத்து உடல் முழுதும் குளிப்பாட்ட வேண்டும்.
மைய்யித்தை குளிப்பாட்டும்போது வலது பக்கமாக ஆரம்பிக்க வேண்டும் என்று ஹதீஸ் வந்திருப்பதால் கை, கால்களை வலது பக்கமாக கழுவ தால் ஆரம்பிக்க வேண்டும். இன்னும் ஒவ்வொரு; உறுப்பையும் மூன்று முறை கழுவ வேண்டும். ஒவ்வொரு தடவையும் வயிற்றை அழுத்தி சுத்தம் செய்ய வேண்டும். மூன்று தடவைக்குமேலும் அசுத்தங்கள் வெளியாகி கொண்டிருந்தால் தேவைக்கேற்ப ஒற்றைப் படையாக கழுவிக் கொள்ளலாம் என ஹதீஸில் வந்திருக்கிறது.
கடைசியாக கழுகும்போது துர் வாடைகளை நீக்கிவிடுவதற்காக கற்பூரத்தை பயன்படுத்திக் கொள்ளவேண்டும். பலமுறை கழுகியும் அசுத்தங்கள் வெளியாகிக் கொண்டிருந்தால் அந்த பகுதியில்பஞ்சை வைத்து அடைத்து விட்டு அசுத்தம் வெளியான அந்த இடத்தை மட்டும் கழுகிவிட்டு மறுபடியும் ஒழு மட்டும் செய்து விட்டால் போதுமானது குளிப்பாட்ட வேண்டிய அவசியம் இல்லை. இன்னும் கஃபன் அணிவித்த பிறகும் அசுத்தங்கள் வெளியாகிக்கொண்டிருந்தால் மறுபடியும் கழுவி கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை.
மைய்யித்தை குளிர்ந்த நீரால் மட்டுமே குளிப்பாட்டவேண்டும். அசுத்தங்கள் அதிகம் இருந்து சுடு தண்ணீரால்தான் போக்கமுடியும் என்றிருந்தால் மட்டுமே சுடு தண்ணீரை பயன்படுத்தி கொள்ளலாம். அதுபோலவே அசுத்தங்களை நீக்க வாசனை சோப்புக்களை உபயோகிக்கலாம். ஆனால் தோல் கிழியும் அளவுக்கு அழுத்தி தேய்க்க கூடாது. பல்லுக்கு மிஸ்வாக்கை பயன்படுத்துவது சிறப்பாகும்.
மைய்யத்திற்கு மீசை, நகங்கள் சராசரிக்கு மேல் வளர்ந்திருந்தால் வெட்டலாம், (அக்குல், மர்மப்பகுதியின் முடிகளை வெட்டக்கூடாது) பெண் மைய்யித்தின் கூந்தலை மூன்று பின்னல்களாக பின்னி முதுகு பக்கம் தொங்க விடவேண்டும். குளிப்பாட்டியபின் மைய்யித்தின் மேல் உள்ள ஈரத்தை துணியால் ஒத்தி எடுக்கவேண்டும்
இஹ்ராம் அணிந்த நிலையில் ஒருவர் இறந்துவிட்டால் தண்ணீராலும் இலந்த இலைப் பொடியினாலும் மட்டுமே குளிப்பாட்டவேண்டும், வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்தக்கூடாது, ஆணாக இருந்தால் தலையை மூடக்கூடாது. ஹஜ்ஜில் இஹ்ராம் கட்டிய நபித்தோழர் ஒருவர் இறந்தபோது வாசனைத் திரவியங்களை பயன்படுத்தாமலும் தலையை மூடாமலும் கஃபனிடுங்கள் ஏனெனில் மறுமை நாளில் அவர் அதே கோலத்தில் தல்பியாக் கூறியவராக எழுப்பப்படுவார் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் (புஹாரி, முஸ்லிம்)
போரில் வீர மரணம் அடைந்த ஷஹீதின் ஆயுதங்கள் மற்ற போர் சம்மந்தப்பட்ட போருட்க்களை எடுத்துவிட்டு குளிப்பாட்டாமல், தொழகை நடத்தாமல் அவர் உடுத்தியிருந்த ஆடையுடன் அடக்கம் செய்யவேண்டும். உஹது போரில் இறந்த சஹாபாக்களுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழ வைக்க வில்லை (புஹாரி,முஸ்லிம்)
தாய் வயிற்றில் உள்ள குழந்தை நான்கு மாதம் முடிந்து விழுந்துவிடுமானால் அந்த குழந்தைக்கு பெயர் வைத்து குளிப்பாட்டி தொழுகை வைத்து அடக்கம் செய்யவேண்டும், ஏனெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் ஒரு தாயின் வயிற்றில் மூன்றாவது நாற்பதில் பிண்டமாக இருக்கு கும் அக் குழந்தைக்கு வானவர் உயிர் ஊதுவார் என்று கூறினார்கள். (முஸ்லிம்)
நான்கு மாதத்திற்க்கு முன் பாக விழுந்து விட்டால் அது உயிரற்ற வெறும் பிண்டம் என்பதால் குளிப்பாட்டவோ தொழுகை நடத்தவோ அவசியமில்லை எந்த இடத்தில் வேண்டுமானாலும் அடக்கம் செய்யலாம்.
தண்ணீர் கிடைக்காவிட்டாலோ அல்லது உடல் கருகி இருந்தாலோ அல்லது உடல் வெடித்துலோ சிதறி கிடந்து குளிப்பாட்ட முடியாத நிலையில் இருந்தால் ஒருவர் தன் கைய்யால் மண்ணில் அடித்து மைய்யித்தின் முகத்தையும் கையையும் தயம்மம் முறையில் தடவவேண்டும்.
மைய்யித்தின் உடலில் காணப்படும் ஏதாவது விசயம் நல்லதாக இல்லாவிட்டால் குளிப்பாட்டியவர் அல்லாஹ்வுக்கு பயந்து அதை வெளியில் யாரிடமும் சொல்லகூடாது, இஸ்லாமிய சகோதரர் ஒருவரை குளிப்பாட்டி அவரில் காணப்படும் குறைகளை குளிப்பாட்டியவர் மறைத்துவிட்டால் அல்லாஹ் அவரை நாற்பது தடவை மன்னிக்கிறான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (ஹாக்கிம்)
  கஃபனிடுதல்  
கஃபன் என்பது மரணித்தவரை குளிப்பாட்டி மூடி மறைப்பதற்கான ஆடைக்கு சொல்லப்படும். மைய்யித்தை கஃபனிட்டு அடக்கம் செய்வது கட்டாயக் கடமையாகும். கஃபனாடை மைய்யித்தின் சொந்த செலவில் இருக்கவேண்டும். இஹ்ராம் கட்டிய நிலையில் இறந்தவரை அவர் அணிந்திருந்த இரண்டு ஆடைகளிலேயே கபனிடுங்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.: இறந்தவர் கடனாளியாக இருந்தால் அல்லது தனது சொத்தை இன்னின்வர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று மரண சாசானம் செய்திருந்தால் கடனையும் வஸியத்தையும் நிறைவேற்றிவிட்டு மைய்யித்தை அடக்கம் செய்வதற்க்கு தேவையான செலவு தொகையையும் எடுத்து கொண்டவயான பின்னரே வாரிசுதாரர்கள் அம்மய்யித்தின் சொத்தைப் பங்கிட வேண்டும்.
கஃபனிட்டுவதற்கான பொருளாதாரம் இல்லாத நிலையில் ஒருவர் இறந்துவிட்டால் அவரை அவரின் உறவினர்கள் கஃபனிட்டு அடக்கம் செய்வது கட்டாயமாகும். உறவினர்கள் இல்லாதபோது அல்லது இருப்பவர்கள் வசதியற்றவர்களாக இருந்தால் (பைதுல்மால்) பொது நிதியகத்திலிருந்து அதற்கான பொறுப்பை ஏற்று நிறைவேற்ற வேண்டும். அப்படி ஒரு நிதியகம் இல்லையானால் அந்த ஊரிலுள்ளோர் அதற்கான ஏற்பாட்டினை செய்வது கட்டாயமாகும்.
கஃபனிடுவதற்கு உடல் முழுக்க மறைக்கும் ஒரே ஒரு ஆடை இருந்தால் போதுமானது. எனினும் ஆண்களுக்கு வெள்ளை நிறத்தில் மூன்று ஆடைகளைக்கொண்டு கபனிடுவது விரும்பத்தக்கதாகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூன்று வெள்ளை ஆடைகளில் கஃபனிடப்பட்டார்கள். (புகாரி, முஸ்லிம்) அந்த ஆடைகளை கற்பூரம் அல்லது சாம்பிரானி புகையால் வாசனைப்படுத்திக் கொள்ள வேண்டும். பிறகு அந்த ஆடைகளை ஒன்றுக்கு மேல் ஒன்றாக விரித்து சந்தனம் மற்றும் வாசனைத் திரவியங்களை அந்த ஆடையில் தெளித்து அதன் பின்பு மைய்யித்தை அந்த ஆடையின் மேல்நிமிர்த்திக் கிடத்தி வைக்கவேண்டும்;. அப்போது நறுமணத்தால் ஈரப்படுத்தப்பட்ட பஞ்சை மைய்யித்தின் மல வாயிலில் வைக்கவேண்டும். அதன் மூலம் கெட்ட வாடைகள் வராமல் தடுக்கலாம். அதன் பிறகு அந்த பஞ்சையும் இறந்தவரின் மர்ம உறுப்புகளையும் சேர்த்து கட்டுவதுவிரும்பதக்கதாகும்.
முகதுவாரப்பகுதிகளான கண், மூக்கு, உதடு,காது ஆகியவற்றின் மீதும் சஜ்தாவில் படும் உறுப்புக்கள் மீதும் சந்தனம் அல்லது கற்பூரம் போன்ற நறுமணப் பொருள்களை வைத்தும் கஃபனிடுவது சிறந்ததாகும். உடல் முழுவதும் வாசனை பூசினாலும் தவறு இல்லை நபித் தோழர்கள் இப்படியும் செய்திருக்கிறார்கள்.
வலது பக்கமாக உள்ள முதல் துணியை எடுத்து மடக்கிய பிறகு இடது பக்கமாக உள்ளதுணியை மடக்கி போர்த்த தவேண்டும். அதன் பிறகு அதுவரை அவர் மர்மப்பகுதியை மறைத்திருந்த துணியை நீக்கி விடவேண்டும். பிறகு இரண்டாம், மூன்றாம் துணிகளை மடக்கிப் போர்த்த வேண்வேண்டும், பிறகு கஃபன் அவிழ்ந்து விடாமல் இருப்பதற்காக கஃபனை அழுத்தமாக முடிச்சு போடவேண்டும். தலை முதல் கால் வரைக்கும் 5 அல்லது 3 முடிச்சிடுவது சிறப்பாகும். கப்ரில் வைத்தஉடன் முடிச்சுகளை அவிழ்த்து விடவேண்டும்.

 

No comments:

Post a Comment