Tuesday, October 29, 2013

“துனிஸியா, எகிப்து, லிபியா,.. முஸ்லிம் உலகு எதிர்நோக்கும் சவால்கள்”

ஆபிரிக்க நாடுகள் நன்கு சிந்தித்து முடிவெடுக்கப்பட்ட செயற்பாடுகளை மேற்கொள்ளும்போதே அதற்குப் பலமும், உண்மையான சுதந்திரமும் கிட்டும். கௌரவத்துக்கும், மதிப்புக்கும் ஒரு விலை உண்டு. அதைச் செலுத்த ஆபிரிக்க நாடுகள் தயாரா?
ஐக்கிய நாடுகள் அமைப்பு கூட அங்கத்துவ அரசுகளின் விவகாரங்களில் ஆபிரிக்க யூனியனின் பாத்திரத்தை உதாசீனம் செய்கின்றது . இதன் உள்நோக்கம் உப-சஹாரா (மத்திய, மேற்கு, கிழக்கு மற்றும் தென் ஆபிரிக்க) ஆபிரிக்க நாடுகளைத் தனிமைப்படுத்தி, அவற்றை மேலும் கட்டுப்படுத்துவதாகும். ஐநூறு வருட காலம், மேற்குலகுடன் பெருமளவுக்குச் சமத்துவமற்ற ஓர் உறவுக்குப் பின்னர் எது நல்லது, எது மோசமானது என்பது குறித்து ஆபிரிக்க மக்களுக்கு மேற்குலகுடன் ஒரே மாதிரியான அளவுகோல்கள் கிடையாது. ஆபிரிக்க மக்கள் பெரிதும் மாறுபடும் நலன்களைக் கொண்டுள்ளார்கள். உண்மையில் ஆபிரிக்க நாணய நிதியத்தின் மூலதனத்தை உள்ளடக்கும் 42 பில்லியன் அமெரிக்க டாலர் தொகையில் அல்ஜீரியாவும் (16 பில்லியன் டாலர் ), லிபியாவும் (10 பில்லியன் டாலர் ) 62 வீதத்தை வழங்குகின்றன. உப-சஹாரா ஆபிரிக்காவில் மிகப்பெரியதும், அதிக ஜனத்தொகையைக் கொண்டதுமான நைஜீரியா மற்றும் தென்னாபிரிக்கா என்பவை ஒவ்வொன்றும் ஆக 3 பில்லியன் டாலர்களை மட்டுமே வழங்க சம்மதித்துள்ளன. .
ஆபிரிக்கா ஐக்கிய நாடுகள் சபையில் உரிய விடயங்களை உறுதியாகச் செய்யாமல் எதைத்தான் ஐக்கிய நாடுகள் அமைப்பில் சாதிக்க எண்ணியுள்ளன என்று தெரியவில்லை. அண்மையில் மேற்கு ஆபிரிக்க நாடான ஐவரி கோஸ்ட்டில் ஐ.நா. வின் உயரதிகாரி சோய் யங் ஜின் எவ்வாறு தன்னை அந்த நாட்டின் அரசியலமைப்புக்கு அப்பாற்பட்டவராக எண்ணி நடந்து கொண்டார் என்பதை ஆபிரிக்க மக்கள் நன்கு அறிவார்கள்.
தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஸுமா ஐவரி கோஸ்ட்டில் அலசன் கட்டாரா தேர்தலில் வெற்றி பெறவில்லையென்று கூறிவிட்டு, தனது பாரிஸ் பயணத்தின்போது இதற்கு நேரெதிராகப் பேசுகையில், நூறு கோடி ஆபிரிக்கர்களைப் பிரதிநிதித்துவம் செய்வதாகவும், அவர்கள் சார்பில் பேசுவதாகவும் கூறும் இத்தலைவர்களின் நம்பகத்தகவு கேள்விக்குறியாகிறது. ஆபிரிக்க யூனியன் ஐவரி கோஸ்ட்டில் அலசன் கட்டாராவின் வெற்றியை ஏற்றுக்கொண்டு பழைய எஜமானர்களை மகிழ்ச்சிப்படுத்தத் தமது சொந்தத் தேர்தல் அவதானிப்பாளர்களின் எதிர் அறிக்கைகளை உதாசீனம் செய்யும்போது, தமக்கு மதிப்புக் கிட்டுமென்று ஆபிரிக்க மக்கள் எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?
ஐக்கிய நாடுகளின் வரலாற்றில் முதல் தடவையாக நெருக்கடிக்கு ஒரு சமாதானத் தீர்வு தேடும் சிறிய சாத்தியக்கூறையும் ஆய்வுசெய்யாது, ஆபிரிக்க நாடான லிபியா மீது யுத்தப் பிரகடனம்செய்யப்பட்டுள்ளது மிகவும் கவலைக்குரிய சம்பவமாகும் .உண்மையில் ஆபிரிக்க நாடுகள் இனியும் ஐக்கிய நாடுகள் அமைப்பில் இருப்பதில் அர்த்தமேதும் கிடையாது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் சமமான வீட்டோ அதிகாரங்களுடன் நிரந்தர அங்கத்துவம் ஒன்று கிடைக்குமென்று வழங்கப்படும் தெளிவற்ற வாக்குறுதிகளைக் குழந்தைத்தனமாக நம்பி நைஜீரியாவும், தென்னாபிரிக்காவும் மேற்குலகம் கேட்கும் எதையும் செய்யக்கூடிய நிலைக்குத் தயாராகவுள்ளன. ஐக்கிய நாடுகள் அமைப்பில் எதையும் வழங்குவதற்கு பிரான்சுக்கு எந்த அதிகாரமும் கிடையாது என்பதை இரு நாடுகளுமே மறந்துவிட்டன. அது சாத்தியமாயின், பிரான்ஸின் முன்னைநாள் அதிபர் மிட்டரன்ட், அவருடைய காலத்தில் அவருடைய நண்பர் ஹெல்முட் கோலின் அதிகாரத்தில் இருந்த ஜெர்மனிக்கு, வெகுகாலத்துக்கு முன்னராகவே ஐக்கியநாடுகள் அமைப்பில் வீட்டோ அதிகாரங்களுடன் நிரந்தர அங்கத்துவத்தை பெற்றுக் கொடுத்திருப்பார்.
ஐக்கிய நாடுகள் அமைப்புக்கான சீர்திருத்தம் என்பது ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிகழ்ச்சிநிரலில் இருந்ததும் இல்லை இருக்கப் போவதும் இல்லை . ஐக்கிய நாடுகள் அமைப்பை பொறுத்தவரையில் ஒரு விடயத்தைத் திண்ணமாக எடுத்துரைக்க ஒரே வழி சீனாவின் வழிமுறையைப் பயன்படுத்துவதாகும். அனைத்து ஐம்பது ஆபிரிக்க நாடுகளும் ஐக்கிய நாடுகள் அமைப்பிலிருந்து வெளியேறுதல் வேண்டும். ஆபிரிக்க நாடுகளின் நீண்டகாலக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் மாத்திரமே அவை திரும்பிச் ஐக்கிய நாடுகள் அமைப்பில் இணைய வேண்டும். ஐக்கிய நாடுகள் அமைப்பு அதன் சொந்தக் கூட்டமைப்பு மற்றும் அதிகாரப்படிநிலை காரணமாக இன்று சக்திமிக்க வல்லரசுகளுக்குச் சேவை செய்யும் நிலைக்குச் சென்றிருப்பதாலேயே முழு ஆபிரிக்கச் கண்டத்துக்கும் வீட்டோ அதிகாரம் கொண்ட நிரந்தர ஆசனம் உடனடியாக கிடைக்கவேண்டும், அல்லது ஐக்கிய நாடுகள் அமைப்பு என்று ஒரு அமைப்பு ஆபிரிக்க மக்களுக்கு தேவையில்லை என்று ஐக்கிய நாடுகள் அமைப்பிலிருந்து ஆபிரிக்க நாடுகள் வெளியேற வேண்டும்.. ஏழைகளுக்கும், பலவீனர்களுக்குமுள்ள ஒரேயொரு ஆயுதம் அஹிம்சா வழிமுறை ஒன்றுதான் . பலவீனர்களை அழித்தொழிப்பதை அடிப்படையாகக்கொண்ட ஓர் உலக நோக்குக்கு ஆபிரிக்க மக்கள் தமது எதிர்ப்பை வெளியிடும் வகையில் ஆபிரிக்க நாடுகள் ஐக்கிய நாடுகள் அமைப்பிலிருந்து வெளியேறுதல் வேண்டும். ஆபிரிக்க நாடுகள் ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு முன்பிருந்தது போலவே தொடர்ந்தும் சுதந்திரமாகச் செயற்படலாம். ஆபிரிக்க நாடுகள் ஐக்கிய நாடுகள் அமைப்பில் பங்குதாரிகள் அல்லவென்றும், ஆபிரிக்க மக்களின் அபிப்பிராயம் குறித்து மேற்குலக நாடுகள் ஐக்கிய நாடுகள் அமைப்பில் கேட்காத நிலையில் ஆபிரிக்க மக்கள் அதற்குச் சம்மதிக்கிறார்கள் என்று கூறும் நிலை ஆபிரிக்க நாடுகளுக்கில்லையென்றும் கூறும் ஆறுதலாவது ஆபிரிக்க நாடுகளுக்கு கிட்டும். கடந்த மார்ச் 19ஆந் திகதி சனிக்கிழமை முரித்தானிய தலைநகர் நவக்சுட்டில் ஆபிரிக்க நாடுகள் செய்ததுபோன்று ஆபிரிக்க நாடுகள் தமது அபிப்பிராயத்தை வெளியிட்டபோதிலும், ஆபிரிக்க நாடுகள் இராணுவ நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தபோது, ஆபிரிக்க நாடுகளின் அபிப்பிராயம் உதாசீனம் செய்யப்பட்டது மட்டுமல்ல ஆபிரிக்க மக்கள் மீது குண்டுகள் விழத் தொடங்கின.
இன்றைய நிகழ்வுகள் கடந்த காலத்தில் சீனாவுக்கு நடந்ததை நினைவூட்டுகின்றன. இன்று, லிபியாவில் கலகம் செய்யும் எதிர்ப்பு அரசாங்கமாகிய கட்டாரா அரசாங்கத்துக்கு அங்கீகாரம் வழங்குகின்றனர். இது இரண்டாம் உலக மகா யுத்தத்தின் இறுதியில் சீனாவுக்கு நடந்ததைப்போன்ற ஒரு விடயமாகும். சர்வதேச சமூகமென்று அழைக்கப்படுவது மாவோவின் சீனாவுக்குப் பதிலாக, சீன மக்களின் ஒரே பிரதிநிதியாகத் தாய்வானைத் தெரிவுசெய்தனர். 26 வருடங்கள் கடந்;த நிலையில் ஐக்கிய நாடுகள் அமைப்பு 2758ஆம் இலக்கத் தீர்மானத்தை நிறைவேற்றியது. மனிதர்களின் முட்டாள்தனத்துக்கு ஒரு முடிவுகட்டுவதற்குச் சகல ஆபிரிக்கர்களும் இத்தீர்மானத்தை வாசிக்கவேண்டும். அதன் சொந்த நியதிகளின்பேரில் சீனா அனுமதிக்கப்பட்டது. சீனாவுக்கு வீட்டோ அதிகாரம் வழங்கப்படாவிடில், சீனா அங்கத்தவராவதில்லையென்று சீனா உறுதியாகத் தெரிவித்தது. இக்கோரிக்கை வழங்கப்பட்டு, தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டதும் ஐ.நா. செயலாளர் நாயகத்துக்குச் சீன வெளிநாட்டமைச்சர் எழுத்தில் பதில் வழங்குவதற்கு மேலும் ஒரு வருடம் பிடித்தது. இறுதியில் இப்பதில் 1972 செப்டம்பர் 29ல் அனுப்பிவைக்கப்பட்டது. அது ஆம் என்றும் சொல்லவில்லை, நன்றி என்றும் கூறவில்லை. மாறாக, சீனாவின் கௌரவம் மதிக்கப்படுவதற்கு அவசியமான உத்தரவாதங்களை ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு எடுத்துரைத்தது.
ஆபிரிக்க மக்களின் ஐக்கியத்தை குலைக்க, வட ஆபிரிக்கா ஆபிரிக்காவின் ஒரு பகுதியல்ல; வட ஆபிரிக்க அரபிய மக்களுக்கும் ஏனைய ஆபிரிக்க நாட்டு கறுப்பு மக்களுக்கும் அதிகளவில் வித்தியாசங்கள் உண்டு; வட ஆபிரிக்கா ஆபிரிக்காவின் ஏனைய நாடுகளைவிடப் பரிணாம வளர்ச்சி, பண்பாட்டு வளர்ச்சி மற்றும் நாகரிக வளர்ச்சி கண்ட இடமாகும்; போன்ற பல இனவாத கருத்துக்களை கடந்த இருநூறு வருடங்களுக்கு மேலாக ஐரோப்பியர் பரப்பி வருகின்றனர். அத்துடன் டுனீசியா, எகிப்து, லிபியா மற்றும் அல்ஜீரியா ஆபிரிக்காவின் ஒரு பகுதியல்ல என்பது போலப் பாசாங்கு செய்கின்றனர். ஒற்றுமையே பலம் என்பதை ஆபிரிக்க நாடுகள் உணர்ந்து கொண்டு செயற்படவேண்டிய கால கட்டம் வந்து விட்டது. தவறினால் மேற்குலக நாடுகளின் கைப்பொம்மைகளினால் ஆபிரிக்க கண்டம் தொடர்ந்தும் சூறையாடப்படுவது தடுக்க முடியாததாகிவிடும்.

Saturday, October 5, 2013

தலைசிறந்த அந்த பத்து நாட்கள் !!!

 

இன்ஷாஅல்லாஹ் வரும் (06-10-2013) ஞாயிற்றுக் கிழமை அன்று அனேகமாக இவ்வாண்டு துல்ஹஜ்ஜு மாதத்தின் தலைப் பிறையாக இருக்கும் அதைத் தொடர்ந்து ஹஜ்ஜுப் பெருநாள் வரையிலுமுள்ள பத்து நாட்கள் வருடத்தின் மிகவும் விஷேசமான ரொம்ப சிறப்பான நாட்களாகும் இதன் மகிமையைத் திருக்குர்ஆனும் நபிமொழிகளும் எடுத்தோதுகின்றன இதைப்பற்றி ஆரம்பமாக நாம் பார்ப்போம்
 
وَالْفَجْرِ (1) وَلَيَالٍ عَشْرٍ (2) وَالشَّفْعِ وَالْوَتْرِ3)
 
1. விடியற்காலையின் மீது சத்தியமாக பத்து இரவுகளின் மீது சத்தியமாக ஒற்றை இரட்டையின் மீதும் சத்தியமாக (அல்குர்ஆன் 89:1,2,3)
இதில் வரும் பத்து இரவுகள் என்பது துல்ஹஜ்ஜூ மாதத்தின் முதல் பத்து நாட்களாகும். விடியற்காலை என்பது ஹஜ்ஜுப் பெருநாள் விடியற்காலை. ஒற்றை என்றால் துல்ஹஜ்ஜூ ஒன்பதாம் நாள் அரபா தினம். இரட்டை என்றால் துல்ஹஜ்ஜூ பத்தாம் நாள் பெருநாள் தினமாகும் என நாயகம் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்கள் (தப்சீர் குர்துபி) படைத்தவனாம் அல்லாஹு தஆலா இந்த பத்து நாட்களின் மீது சத்தியம் செய்வதிலிருந்தே இதன் மகத்துவத்தை உணர முடியும்

 
ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام
2. குறிப்பட்ட நாட்களில் அல்லாஹ்வின் திருப்பெயரை அவர்கள் நினைவு கூறுவதற்காக''... (22:28)

இந்த இறைவசனத்தில் வரும் குறிப்பட்ட நாட்கள் என்பது துல்ஹஜ்ஜூ மாதத்தின் முதல் பத்து நாட்களாகும் என விளக்கமளித்துள்ளார்கள் இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் ( புஹாரி)
 
அப்படியானால் அல்லாஹ்வை திக்ரு தியானம் செய்வதற்குரிய இந்த பத்து நாட்களின் சிறப்பு மகத்தானதல்லவா?    ( ما من أيام العمل الصالح فيهن أحبُّ إلى الله منه في هذه الأيام العشر(
 
3. நற்செயல்கள் செய்வதற்கு இந்த பத்து நாட்களை விட அல்லாஹ்விற்கு  மிகவும் உகந்த நாட்கள் வேறில்லை. (நபிமொழி புஹாரி 969, திர்மிதி 757, அபூதாவூத் 2438)
« مَا مِنْ أَيَّامٍ أَعْظَمُ عِنْدَ اللَّهِ سُبْحَانَهُ وَلَا أَحَبُّ إلَيْهِ مِنْ الْعَمَلِ فِيهِنَّ مِنْ هَذِهِ الْأَيَّامِ الْعَشْرِ ، فَأَكْثِرُوا فِيهِنَّ مِنْ التَّهْلِيلِ وَالتَّكْبِيرِ وَالتَّحْمِيدِ »
 
4. அல்லாஹ்விடத்தில் மிகவும் புனிதமான நாட்கள் நற்செயல் புரிவதற்கு அல்லாஹ்விற்கு  மிகவும் உகப்பான நாட்கள் அந்த பத்து நாட்களை விட வேறில்லை. எனவே இதில் அதிகமாக இறைவனைத் துதித்து மகத்துவப் படுத்தி அவனைப் புகழ்ந்து அவனது உண்மை ஏகத்துவத்தை உறுதிப்படுத்தும் உச்சாடனங்களை சொல்லுங்கள் (தபரானி)
عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال ما من أيام أحب إلى الله أن يتعبد له فيها من عشر ذي الحجة يعدل صيام كل يوم منها 
بصيام سنة وقيام كل ليلة منها بقيام ليلة القدر
 
5. அல்லாஹ்விடத்தில் இறைவழிபாடு செய்வதற்கு மிகவும் உகந்த  துல்ஹஜ்ஜு மாதத்தின் முதல் பத்து நாட்களில் நோற்கப்படும் ஒவ்வொரு நோன்பும் ஒரு வருட நோன்புக்குச் சமம். அதில் ஒவ்வொரு இரவிலும் நின்று வணங்குவது லைலத்துல் கத்ரு இரவில் நின்று வணங்குவதற்கு நிகராகும் (நபிமொழி திர்மிதி 758, இப்னு மாஜா 1728)
 
6. ஹழ்ரத் இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
அந்த பத்து நாட்கள் மூஸா நபி அலை அவர்களுக்கு அல்லாஹ் கூடுதலாக கொடுத்த பத்து நாட்களாகும். அதாவது மூஸா நபி அலை அவர்களுக்கு அல்லாஹ் தன்னோடு உரையாடுவதற்கு  முன்பு முப்பது நாட்கள் நோன்பு இருக்கச் சொன்னான். 
وَوَاعَدْنَا مُوسَى ثَلَاثِينَ لَيْلَةً وَأَتْمَمْنَاهَا بِعَشْرٍ فَتَمَّ مِيقَاتُ رَبِّهِ أَرْبَعِينَ لَيْلَةً

மூசாவிற்கு நாம் முப்பது இரவுகளை வாக்களித்திருந்தோம் பின்னர் அத்துடன் பத்து இரவுகளைச் சேர்த்தோம் ஆகவே அவருடைய இறைவனின் வாக்குறுதி நாற்பது இரவுகளாகப் பூர்த்தியாயிற்று. அல்குர்ஆன் 7:142)
 
இப்படி மூஸா நபிக்கு கூடுதலாக அதிகப் படுத்திக் கொடுத்த பத்து நாட்கள் என்பது துல்ஹஜ்ஜு மாதத்தின் ஆரம்ப பத்து நாட்களாகும். இதன்படி இந்த பத்து நாட்கள் நோன்பு இருந்தால் மூஸா நபி அலை அவர்களுக்கு உண்டான இறை நெருக்கம் நமக்கும் கிடைக்கும் அல்லவா?
 
7. மார்க்க மேதைகள் கூறுவார்கள்: இந்த பத்து நாட்கள் ரமளானின் பத்து நாட்களை விட மேலானது ஏனெனில் நாட்களில் மிகச் சிறந்த அரபா தினம் (நபிமொழி: ஸஹிஹ் இப்னு ஹிப்பான்) இதில் வருகிறது ஆனால் இரவுகளைக் கவனித்து ரமலானே சிறந்தது காரணம் ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த லைலத்துல் கத்ரு இரவு ராமலானில்தான் வருகிறது
8. இந்த பத்து நாட்களின் தனித்தனமைக்கு என்ன காரணம்?
 
قال الحافظ ابن حجر: «والذي يظهر أن السبب في امتياز عشر ذي الحجة، لمكان اجتماع أمهات العبادة فيه، وهي الصلاة والصيام والصدقة والحج، ولا يتأتى ذلك في غيره»
நபிமொழி ஆய்வாளர் அல்ஹாபிழ் இப்னு ஹஜர் ரஹ் அவர்கள் கூறுவார்கள்: தொழுகை நோன்பு சதகா தர்மம் ஹஜ்ஜு ஆகிய பிரதானமான எல்லா இறைவழிபாடுகளும் இதில்தான் சங்கமிக்கின்றன கிடைப்பதற்கரிய இந்த வாய்ப்பு வேறு நாட்களுக்கு இல்லை. எனவேதான் இது சிறந்தது.
இவ்வாறு சிறப்புமிக்க இந்த நாட்களில் செய்யப்ப்டவேண்டிய சிறப்பு அமல்கள்- நற்காரியங்களைப் பற்றி இனி பார்ப்போம்
 
1. பொதுவாக தொழுகை தர்மம் குர்ஆன் ஓதுதல் நன்மையை ஏவி தீமையைத் தடுப்பது போன்ற நற்காரியங்கள் (புகாரி 969)
 
2. குறிப்பாக ஹஜ்ஜு உம்ரா நிறைவேற்றுவது.
«العمرة إلى العمرة كفارة لما بينهما، والحج المبرور ليس له جزاء إلا الجنة» رواه البخاري ومسلم.

உம்ரா பாவங்களுக்கு பிரயாச்சித்தமாகும். ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜு இதற்கு சொர்க்கத்தைத் தவிர வேறு கூலி இல்லை. (புகாரி 1773)
«تابعوا بين الحج والعمرة، فإنهما ينفيان الفقر والذنوب، كما ينفي الكير خبث الحديد والذهب والفضة

ஹஜ்ஜு உம்ரா இவ்விரண்டும் தொடர்ந்து நிறைவேற்றுவது, நெருப்பு இரும்பின் துருவை அகற்றுவது போல் பாவத்தையும் வறுமையும் போக்கி ஆயுளையும் அதிகரிக்கச் செய்யும். (திர்மிதி 81, பைஹகீ 4095)
 
3. இந்த நாட்களில் முழுவதும் அல்லது முடிந்த அளவு நோன்பு பிடிப்பது (திர்மிதி 758)
 
4. அதிகமாக இறைவனை திக்ரு செய்வது. ஸலவாத் ஓதுவது, தஸ்பீஹ் சொல்வது ( தபரானி, ஸஹிஹ் இப்னு ஹிப்பான்)
 
5. இஸ்திஃபார் அதிகம் செய்வது. பாவமன்னிப்புக் கோருவது. இதற்கு மூன்று நிபந்தனைகள்: செய்த பாவத்தை நினைத்து வருந்துவது
 
அந்த பாவத்தை விட்டு விலகி விடுவது மீண்டும் அந்த பாவத்தின் பக்கம் திரும்ப மாட்டேன் என உறுதி கொள்வது அல்லாஹ் ரோஷப்படுபவன்  அவன் தடுத்து ஹராமாக்கிய பாவ காரியங்களை மனிதன் செய்கிறபோது அல்லாஹ் ரோஷப்படுவான் (புஹாரி)
அல்லாஹ்வின் கோபத்திலிருந்து நம்மைப் பாதுகாக்க அவனிடமே சரணடைந்து விடுவது பாவமன்னிப்புக் கூறுவதே சிறந்த வழியாகும்.
 
6. பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டு குத்பா சொற்பொழிவை செவிமடுப்பது
 
7. ஜகாத் கடமையானவர்கள் கண்டிப்பாக குர்பானி கொடுப்பது. இவாறு குர்பானி கொடுக்க நினைப்பவர் துல்ஹஜ்ஜு மாதத்தின் தலைப் பிறையைப் பார்த்துவிட்டால் நகம் முடி களையாமல் இருக்கவேண்டும் (முஸ்லிம் 1977)
« إذا دخل العشر ، فإن أراد أحدكم أن يضحي فلا يمس من شعره ، ولا بشره شيئا  பயணத்தில் இருப்பவர் குர்பானி கொடுக்கவேண்டியதில்லை அல்லாஹ்விற்காக குர்பானி-தியாகம் செய்வோம். அல்லாஹ் அருள்புரிவானாக! ஆமீன்!!


Thursday, September 19, 2013

சவுதி அரேபியாவில் இந்திய ஹஜ் அலுவலகங்கள்

Indian Haj Office, Makkah



Mr. Abdus Salam
Incharge, Makkah Haj Mission

Indian Haj Mission Makkah
Opp: Qisla Parking, Jarwal, Makkah
Phone:- 02-5603580
Fax:- 02-5427303


haj2
Indian Haj Office, Madinah

Mr. M.A. Shukkur
Incharge Madinah Haj Mission

Behind Enjaz Bank, Siteen St, Madinah
Phone No:-04-8380025
Fax:-04-8387549

Moallims for Haj-2013 

 Makkah Branch & Telephone Numbers
Branch
Area
Telephone No.
Mak Branch 1
Hafayar
0125381438
Mak Branch 2
Ummul Qura
0125496550
Mak Branch 3
Jarwal(T)
0125426580
Mak Branch 4
Jarwal(HS)
0125471539
Mak Branch 5
Shebe Amir (DJ)
0125734553
Mak Branch 6
Ajyad (Q)
0125747156
Mak Branch 7
Misfalah (IK)
0125306205
Mak Branch 8
Azizia (BH)
0125530430
Mak Branch 9
Azizia (MB)
0125664507
Mak Branch 10
Azizia (MB)
0125665781
Mak Branch 11
Azizia (MB)
0125280526
Mak Branch 12
Azizia (AK)
0125299232
Mak Branch 13
Azizia (AK)
0125501743
Thanks: முதுவைஹிதாயத்

Monday, September 16, 2013

சிரியாவில் ஆடு நனைகிறது.அமெரிக்க ஓநாய் கவலைப்படுகிறது

சமீப காலங்களில் அரபுலகத்தில் ஏற்பட்டுவருகிற புரட்சி உலகமக்களின் கவனத்தை பெற்று வருகிறது.அரபுலக வசந்தம் என்ற ஒரு சொல்லாடல் அங்கு சர்வாதிகார ஆட்சி செய்து வந்த ஆட்சியாளர்களுக்கு பயத்தை உண்டுபன்னுகிறது.

ஒரு பத்தாண்டுக்கு முன் வரையும் தங்களின் ஆட்சியாளர்களுக்கு எதிரான சிந்தனை தங்களின் கனவில்கூட வந்துவிடக்கூடாது என கவனமாக இருந்த அம்மக்களின் வாழ்வில் ஒரு புரட்சிப்புயல் வீசத்துவங்கியது. துனிசியா,எகிப்து,லெபனான் எனஅனைத்துநாடுகளையும் அந்த அரபுலக வசந்தப்புயல் ஆக்கிரமிக்கத்துவங்கியது.

அரபியர்களின் சுயமரியாதையை மீட்டெடுக்கும் சந்தர்ப்பங்கள் உருவாகி வருகிறது. அந்த வரிசையில் சமீபத்திய இரண்டு ஆண்டுகாலமாக அப்புயல் சிரியாவை மையம் கொண்டுவருவதை நாமறிவோம். மற்ற நாடுகளில் ஏற்பட்ட புரட்சிகளுடன் ஒப்பிடும்போது, சிரியாவில் ஏற்பட்ட புரட்சி முற்றிலும் வேறுபட்டதாகும். இப்புரட்சி இஸ்லாத்தை மையமாக  கொண்டுள்ளதால் சிரியாவின் புரட்சியை  இஸ்லாமிய புரட்சி என்றே அழைக்கலாம்.

அங்குள்ள மக்கள் பஸ்ஸார் அல் அசதின் ஆட்சிக்கு எதிராக போராடி வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 21 ம் தேதி ராணுவத்தினர் ரசாயன குண்டுகளை வீசியதில் குழந்தைகள் உள்பட 1,400–க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இவ்வாறு தடை செய்யப்பட்ட பயங்கர ஆயுதங்களை சிரியா பயன்படுத்தியது சட்டவிரோதமானது என்றும், சிரியா சிவப்புக்கோட்டை தாண்டிவிட்டது என்றும் அந்நாட்டிற்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்க அமெரிக்கா முயற்சித்து வருகிறது.
அமெரிக்கா,பிரான்ஸ்,பிரிட்டன் ஆகிய மூன்று சாத்தான்கள் மீண்டும் தங்களின் அழிச்சாட்டியங்களை துவக்கப்போகின்றனர்.

உண்மையில் சிரியாவில் நடப்பது என்ன?
மனிதாபிமான காரணங்களை சொல்லி கள்ளத்தனமாக அமெரிக்கா சிரியாவுக்குள் நுழைய முயற்சி செய்துவருவதின் பின்னனி என்ன?
இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி அப்பாவி மக்கள் 1400 பேரை அஸத் கொலை செய்தார் என்று அமெரிக்கா முன்வைத்த காரணம்.

சிரியா மக்கள் மீது அஸத் ஷைத்தான் தாக்குதலை தொடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது.ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை கொன்றுகுவித்து பல லட்சம் மக்கள் அகதிகளாகி வெளியேறி விட்டனர்.அப்பொழுதெல்லாம் வாய் திறக்காத அமெரிக்கா இப்போது வாய் திறக்க காரணம் என்ன?

சிரியாவில் ஆடு நனைகிறது.அமெரிக்கா ஓநாய் கவலைப்படுகிறது.
இவர்களின் மனிதாபிமான இலட்சணத்தை ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் நாம் பார்த்துக்கொண்டு தானிருக்கிறோம். சாத்தான் வேதம் ஓதுகிறது என்பார்கள்.அதை இதுபோன்ற நிகழ்வுகள் மூலம் பார்க்கமுடிகிறது. பஸ்ஸார் ஒரு மாபெரும் கிரிமினல்.சர்வாதிகார ஷைத்தான் என்பதில் நமக்கு மாற்றுக்கருத்து இல்லை.அஸத் என்ற நஜீஸை சுத்தம் செய்ய அமெரிக்கா என்ற இன்னொரு நஜீஸ் எதற்கு?

நஜீஸை நஜீஸால் சுத்தம் செய்ய முடியாது. இந்த விஷயத்தில் அமெரிக்காவின்சூட்சுமத்தை,தந்திரத்தை,நரித்தனத்தை இஸ்லாமிய சமூகம் சரியாக புரிந்துகொள்ள வேண்டும். உண்மையில், அங்கு ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்திவருகிற போராளிகளான முஜாஹிதீன்களின் கை ஓங்கிவருகிறது. எந்தளவென்றால் அங்குள்ள நிலத்தில் சுமார் 70% அதிகமாக முஜாஹிதீன்கள் கைப்பற்றி விட்டனர்.

மேலும் மேற்கத்திய நாடுகள் கடந்த காலங்களில்  சிரியா அரசுக்கு கொடுத்து வந்த பெரும் ஆயுதங்களும் புரட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் வந்துவிடும். சிரியா முழுவதுமாக அவர்களின் கட்டுப்பாட்டில் வருவதோடு  நிலையான அரசின் அனைத்து அங்கங்களும் இராணுவ தளங்களையும் அவர்கள் கைப்பற்றும் காலம் நெருங்கிவிட்டது.

கடந்த சில வாரங்களில் புரட்சியாளர்களுக்கு கிடைத்துள்ள வெற்றியும் அமெரிக்காவின் கைப்பாவை அரசான பஸ்ஸாரின் வீழ்ச்சியும் தான் அமெரிக்காவின் போலியான அனுதாபத்திற்கு காரணம் என்பதை முஸ்லிம்கள் சரியாக புரிந்துகொள்ளவேண்டும்.

இதில் அமெரிக்கா படையெடுப்பின் மூலம் இரண்டு தன்னுடைய இரண்டு திட்டங்களை நிறைவேற்ற விரும்புகிறது. 
1.மிக வேகமாக முன்னேறிக்கொண்டிரூகின்ற சிரியா போராளிகளை பலஹீனப்படுத்துவது

2.பஸ்ஸாரை வீழ்த்திவிட்டு அந்த இடத்தில் ஒரு பொம்மை அரசை நிறுவுவது.

எனவே இராசாயன ஆயுதம் பயன்படுத்தல், சட்டமீறல் என்பதெல்லாம் வெறும் போலியான குற்றச்சாட்டுக்கள்.ஏனெனில்  வளைகுடாப்போருக்கு முன்பு சதாம் ஹுசைன், குவைத்தை கைப்பற்ற அமெரிக்கா எவ்வாறு அனுமதித்ததோ,  அதைப்போன்றே அமெரிக்காவின் அனுமதியின்றி கண்டிப்பாக கொடுங்கோலன் பஸார் இரசாயன ஆயுதத்தை பிரயோகித்திருக்க முடியாது.

அமெரிக்காவின் இராணுவ தலையீடு என்பது ஒபாமா சொல்வதைப்போல் அப்பாவி சிரிய மக்களுக்கு உதவி புரிவதற்காக அல்ல. மாறாக இராக், ஆஃப்கானிஸ்தானைப்போல அதையும் சுடுகாடாக மாற்றுவதற்கான முயற்சியே தவிர வேறில்லை.

இந்தச்சூழலில் இஸ்லாத்தின் கண்ணோட்டத்தில் சிரியாவை பற்றி முஸ்லிம்கள் தெரிந்துகொள்வது காலத்தின் கட்டாயமாகும்.

சிரியா அது அல்லாஹ்வால் பரக்கத் செய்யப்பட்ட பூமியாகும்.
அல்லாஹ் தஆலா மிஃராஜ் பற்றி குறிப்பிடும்போது-
سُبْحَانَ الَّذِي أَسْرَىٰ بِعَبْدِهِ لَيْلًا مِّنَ الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الْأَقْصَى الَّذِي بَارَكْنَا حَوْلَهُ لِنُرِيَهُ مِنْ آيَاتِنَا ۚ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْبَصِيرُ

(அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்; (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம்; நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்); நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும்; பார்ப்போனாகவும் இருக்கின்றான்

நபி ஸல் அவர்களால் பரக்கத்திற்காக துஆச்செய்யப்பட்ட பூமியாகும்.
قال عبدالله بن عمرو رضي الله تعالى عنه: صلى بنا النبي عليه الصلاة والسلام ثم أقبل على القوم فقال: "اللهم بارك لنا في مدينتنا، وبارك لنا في مدنا وصاعنا، اللهم بارك لنا في حرمنا، وبارك لنا في شامنا" حديث صحيح.

நபி ஸல் அவர்கள் எங்களுக்கு தொழுகை நடத்தினார்கள்.பின்பு கூட்டத்தை முன்னோக்கி, யா அல்லாஹ்! எங்கள் மதீனாவில் பரக்கத் செய்வாயாக! எங்களுடைய முத்து மற்றும் ஸாஃவு விலும் பரக்கத் செய்வாயாக! யா அல்லாஹ்!எங்களின் சிரியா பூமியிலும் பரக்கத் செய்வாயாக என நபி ஸல் அவர்கள் துஆ செய்தார்கள் என அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்.

சிரியாவைப்பற்றி நபி ஸல் அவர்களின் முன்னறிவிப்புக்கள்
உலகில் போர்கள் பல்வேறு காரணங்களுக்காக நடைபெறுகிறது.மண்ணுக்காக, பெண்ணுக்காக, ஆட்சிக்காக, அதிகாரத்திற்காக ஆனால் சிரியாவில் எல்லா காலத்திலும் ஈமானுக்காக மட்டுமே போர்கள் நடைபெறும்.

சிரியாவில் ஆட்சி வேண்டுமானால் சர்வாதிகார ஆட்சியாக இருக்கலாம்.அங்கு வாழும் மக்கள் ஈமானிய உணர்வு மேலோங்கியவர்கள் எனபதை மறந்து விடக்கூடாது.

சிரியா உண்மையான முஜாஹிதீன்கள் வாழும் பூமி
عن عبدالله بن حوالة رضي الله عنه قال، قال النبي عليه الصلاة والسلام: "ستجدون أجنادًا جندًا بالشام وجندًا بالعراق وجندًا باليمن"، قال عبدالله فقلت: يا رسول خِرْ لي – يعني اختار لي هل أكون بالعراق أم بالشام أم باليمن؟-، فقال عليه الصلاة والسلام: "عليكم بالشام، عليكم بالشام، فمن أبى فليلحق بيمنه، وليسق من غدره؛ فإن الله عز وجل قد تكفل لي بالشام وأهله" رواه أحمد وصححه الألباني.

ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு ஹவாலா ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள். சிரியா படை,ஈராக் படை,  யமன் படை என்று நீங்கள் பல ராணுவப்படைகளை பார்ப்பீர்கள்..என  நபி ஸல் அவர்கள் கூறியபோது, அல்லாஹ்வின் தூதர் அவர்களே!நான் எதை வசிப்பதற்கு தேர்வு செய்யட்டும் என கேட்டேன். அதற்கு நபி ஸல் அவர்கள் சிரியாவில் தங்குங்கள்.சிரியாவில் தங்குங்கள் என்றார்கள்.ஏனெனில் அல்லாஹ் சிரியாவையும் அதன் மக்களையும் எனக்காக பாதுகாக்கும் பொருப்பை ஏற்றுள்ளான் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
சிரியா ஈமான் மற்றும் கல்வி அடைக்கலமாகும் பூமியாகும்.
وقال عليه الصلاة والسلام مبينًا أن أرض الشام هي أرض العلم والإيمان، قال عليه الصلاة والسلام: "إني رأيت عمود الكتاب انتُزع من تحت وسادتي فنظرت فإذا هو عمود ساطع عمد به إلى الشام، ثم قال: ألا إن الإيمان إذا وقعت الفتن في الشام" أخرجه الحاكم وصححه الألباني.

என் தலையனைக்கு கீழ் இருந்த வேதத்தின் கழட்டப்பட்டு சிரியாவில் அது ஜொலிப்பதாக காண்கிறேன். தெரிந்துகொள்ளுங்கள். ஈமானுக்கு சோதனை வந்தால் அது சிரியாவில் போய் ஒளிந்து கொள்ளும் என்றார்கள்.என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
நாளை மஹ்ஷர் பூமியும் அந்த சிரியாதான். சுவனத்தின் பொருட்களை காண வேண்டுமானால் மக்காவுக்கும் மதீனாவுக்கும் செல்லவேண்டும். நாளை மஹ்ஷர் மைதானத்தை காண வேண்டுமானால் சிரியா செல்ல வேண்டும்.ஆம்! அது தான் நாளை மஹ்ஷர் களம்.
في حديث أبي ذر أن النبي صلى الله عليه وسلم قال: قال عليه الصلاة والسلام: "الشام أرض المحشر والمنشر" رواه أحمد وهو صحيح.

சிரியா மஹ்ஷர் பூமி என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
وعن معاوية بن حيدة قال: إن النبي عليه الصلاة والسلام أخبرنا فقال: "إنكم تحشرون رجالاً وركبانًا، وتجرون على وجوهكم ها هنا "قال: وأومأ بيده نحو الشام. صححه الألباني.

நீங்கள் நடந்தவர்களாகவும் வாகனித்தவர்களாகவும் எழுப்பப்படுவீர்கள். மேலும் நீங்கள் இதன் பக்கம்  இழுத்து கொண்டுவரப்படுவீர்கள் என்று தம் கையால் சிரியாவை சமிக்கை செய்தார்கள்.

وعن فهد بن حكيم عن أبيه عن جده أن النبي صلى الله عليه وسلم قيل له: يا رسول الله أين تأمرني ؟ الجد سأل النبي صلى الله عليه وسلم، أين تأمرني؟ أين أسكن؟ إلى أين أسكن؟ قال "هاهنا" وأومأ بيده نحو الشام. قال: "إِنّكُمْ محْشورُونَ رِجَالاً وَرُكْبَاناً ومجرون علَى وُجُوهِكُم". أخرجه الإمام أحمد وصححه الألباني.

இவ்வாறு ஒருவர் தான் எங்கு வசிப்பது?என  நபி ஸல் அவர்களிடம் கேட்டபோது,சிரியாவை சுட்டிக்காட்டினார்கள்.ஏனெனில் நீங்கள் நடந்தவர்களாகவும் வாகனித்தவர்களாகவும் எழுப்பப்படுவீர்கள். மேலும் நீங்கள் இதன் பக்கம்  இழுத்து கொண்டுவரப்படுவீர்கள் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
وسئلت جارية لعبد الله بن عمر رضي الله تعالى عنهما قالت له: اشتد عليّ الزمان وإني أريد أن أخرج إلى العراق -يعني أن تسكن في العراق- فقال لها ابن عمر: فهلا إلى الشام أرض المنشر. رواه الترمذي وصححه الألباني.

ஹழ்ரத் இப்னு உமர் ரலி அவர்களின் அடிமைப்பெண் தன் எஜமானரான இப்னு உமர் ரலி அவர்களிடம்  தனக்கு நெருக்கடியாக இருக்கிறது,எனவே இராக் செல்ல நாடுகிறேன் என்றதும் நீ சிரியாவுக்குச்செல் அது தான் மஹ்ஷர் பூமி என்றார்கள்.

கியாமத்தின் நெருக்கத்தில் வெளிப்படும் நெருப்பிலிருந்து தப்பிக்கவே சிரியாவே அடைக்களம்
وعن سالم بن عبدالله عن أبيه أن النبي صلى الله عليه وسلم قال: "ستخرج نار في آخر الزمان من حَضْرمَوْت تحشر الناس" قلنا: بما تأمرنا يا رسول الله ؟ - ماذا تأمرنا استعدادًا لخروج هذه النار، ماذا تأمرنا استعدادا لقرب قيام الساعة؟ - فقال عليه الصلاة والسلام: " عليكم بالشام.. عليكم بالشام" صححه الألباني ورواه الإمام أحمد.

ஸாலிம் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்.
கியாமத்தின் நெருக்கத்தில் ஹழ்ரமவ்த் என்ற ஊரிலிருந்து ஒரு நெருப்பு மக்களை விரட்டும் என நபி ஸல் அவர்கள் கூறியபோது- அப்போது நாங்கள் எங்கு தங்கட்டும்?என நாங்கள் கேட்டோம்.அதற்கு ஸல் அவர்கள் நீங்கள் சிரியாவில் தங்குங்கள் என்று கூறினார்கள்
நபி இப்ராஹீம் அலை அவர்கள் ஹிஜ்ரத் செய்த பூமி.

عن عبدالله بن عمرو رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال: "ستكون هجرة بعد هجرة، فخيار أهل الأرض ألزمهم مهاجر إبراهيم -يعني الشام- قال: ويبقى في الأرض شرار أهلها تلفظهم أرضوهم وتقذرهم نفس الله، وتحشرهم النار مع القردة والخنازير". رواه أبو داوود وصححه الألباني.

ஹிஜ்ரத்துக்கு பின் ஹிஜ்ரத் தொடர்ந்து நடைபெறும்.இறுதியில் நல்லவர்கள் யாவரும் இப்ராஹீம் அலை அவர்கள் ஹிஜ்ரத் செய்த பூமியான சிரியாவுக்கு ஹிஜ்ரத் செய்து அடைக்கலமாகி விடுவார்கள்.    பூமியில் கெட்டவர்கள் மட்டும் வசிப்பர்.அவர்களை நெருப்பு துரத்தும் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
அல்லாஹ்வால் தேர்வு செய்யப்பட்ட பூமி
ومن حديث عبدالله بن حوالة في رواية من هذا الحديث قال عليه الصلاة والسلام: "عليك بالشام فإنها خيرة الله من أرضه" يعني اختاره الله من أرضه "يجتبي إليه خيرته من عباده" رواه أبو داود وهو حديث صحيح

சிரியாவை பற்றிப்பிடித்துக்கொள்ளுங்கள்.அது அல்லாஹ் தேர்வு செய்த பூமியாகும் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
சிரியா தஜ்ஜால் அழிந்து நாசமாகும் பூமி

ويأتي المسيح من قبل المشرق -يعني المسيح الدجال- وهمته المدينة حتى إذا جاء دبر أحد تلقته الملائكة، فضربوا وجهه قبل الشام هنالك يهلك.. هنالك يهلك"كررها هو بأبي وأمي صلوات ربي وسلامه عليه.. ففي الشام يقتل الدجال وهو الذي يسفك فيه دمه. رواه الترمذي.
கிழக்கு பக்கத்திலிருந்து தஜ்ஜால் வருவான்.அவன் மதீனாவை நாடி வரும்போது மலக்குகள் அவனை தடுத்து நிறுத்தி சிரியாவின் பக்கம் அனுப்பி வைப்பார்கள்.அந்த பூமியில் தான் அவன் அழிந்து நாசமாகுவான். என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்

இறுதி யுத்த பூமி.
وفي رواية قال عليه الصلاة والسلام:
"يوم الملحمة الكبرى فسطاط المسلمين بأرض يقال لها الغوطة فيها مدينة يقال لها دمشق خير منازل المسلمين يومئذ" رواه أبو داوود وصححه الألباني.

முஸ்லிம்களுக்கும் இறைமறுப்பாளர்களுக்கும் நடைபெறும் இறுதி மாபெரும்  யுத்தம் அந்த சிரியா பூமியின் தலைநகரான டமாஸ்கஸில் உள்ள கவ்தா எனும் நகரத்தில் நடைபெறும் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

தஜ்ஜாலின் கதையை முடிப்பதற்காக இந்த பூமியி ஹழ்ரத் ஈஸா அலை அவர்கள் இறுதிகாலத்தில் இந்த பூமியில் இறங்குவார்கள் என்பது நாம் அறிந்ததே!

அவர்கள் இறங்கும் பூமி சிரியாவின் தலை
நகரான டமாஸ்கஸில் தான்.
عن النواف بن سمعان قال سمعت النبي صلى الله عليه وسلم يقول: "ينزل عيسى ابن مريم عند المنارة البيضاء شرقي دمشق" رواه الإمام مسلم.

ஈஸா அலை அவர்கள் கிழக்கு திமிஷ்கில் உள்ள ஒரு வெள்ளை மினாராவில் இறங்குவார்கள் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
சிரியா மலக்குமார்கள் இறக்கை விரித்திருக்கும் புனித பூமியாகும்.
நபி ஸல் அவர்களின் ஆட்சியில் சிரியாவுக்கான பொருப்பில் ஹழ்ரத் முஆவியா ரலி அவர்கள் அமர்த்தப்பட்டார்கள்.
          அன்றைய இஸ்லாமிய நாடுகளில் பெரும் பலம் பொருந்திய வல்லரசாக சிரியா செயல்பட்டது.அப்படிப்பட்டவரலாற்றுச் சிறப்புமிக்க அந்த சிரியாவின் பாரம்பரியம் தெரியாமல் அமெரிக்கா தன் விஷச்செடியை அந்த பூமியில் நட்டத்துடிக்கிறது.

அவர்கள் தஜ்ஜாலுக்கே சமாதி கட்டுபவர்கள்.

அவர்கள் சத்தியவழியில் ஸ்தரமாக காலூன்றி நிற்பவர்கள்.
அமெரிக்க அழிச்சாட்டிய கூட்டணியின் கொட்டம் அங்கு தான் அடக்கப்பட வேண்டுமென்றால் அதை ஒன்றும் சொல்வதற்கு இல்லை.

Wednesday, September 11, 2013

தண்ணீரை வீண் விரயமாக்குவதைத் தடுக்க முடியும்!

உணவு இல்லாமல்கூட பல நாட்கள் மனிதனால் உயிர் வாழ முடியும். ஆனால், தண்ணீர் இல்லாமல் மனிதனால் ஓரிரு நாட்களுக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாது. தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்கு தடையாய் இருப்பது என்ன என்று யோசித்தால், உடனடியாக நம் மனதில் தோன்றும் முதல் பிரச்சனை தமிழ்நாட்டின் தண்ணீர் பிரச்சனை. அது கொஞ்சம் கடினமாக தான் இருக்கிறது. தேவைக்கு குறைவாக கிடைக்கிறது. இதனால் அண்டை மாநிலங்களோடு சண்டை, சச்சரவு ஏற்படுகிறது.
இயற்கையின் கொடையான தண்ணீர் உயிரின் ஆதாரம். இயற்கையின் விதிப்படி தண்ணீர் என்பது எல்லா உயிரினங்களுக்கும் இந்த மண்ணுக்கும் உரித்தான பொதுச் சொத்து. தற்போது வாழும் மக்களுக்கு மட்டுமின்றி வரவிருக்கும் தலைமுறைக்கும் அதன் மீது உரிமை உண்டு. 
தண்ணீர் பற்றிய தகவலை நான் தேட ஆரம்பித்தது ஒரு கட்டாய சூழ்நிலையில் தான். ஏனென்றால் தற்பொழுது அதிரையில் தண்ணீர் தட்டுப்பாடு ஆங்காங்கே காண முடிகிறது, போர்வெல்களில் தண்ணீர் வரத்தில்லை, தண்ணீர் அடி மட்டம் கீழே இறங்கியுள்ளது ஆதலால் கம்பரசர் ஊதியே ஆக வேண்டுமென பலரும் இச்செயலில் செய்கின்றனர் காரணம் தண்ணீர் இல்லாமல் எந்தறொரு ஜீவனும் வாழ்வது கடினம். 
அன்று, கிணற்றினில் தண்ணீர் சாதரணமாக அள்ளலாம் அந்த அளவிற்கு தண்ணீர் நிறைந்து காணப்படும் மேலும் அள்ள அள்ள நீர் ஊறிக்கொண்டே இருக்கும் ஆனால் இன்று, கார்ப்பரேஷன் தண்ணீர் ஒருநாள் விட்டு ஒருநாள் நம் பகுதிகளுக்கு வருகிறது என்பது சிறு ஆறுதல் தரக்கூடிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம், வந்தோர்  தாகம் தணிக்க தண்ணீரும் இல்லை, சோகம் உரைக்க சொற்களும் இல்லை. 
வானிலை அறிஞர்கள் இந்த ஆண்டு பருவ மழை எதிர்பார்த்த அளவு பெய்யாது என்று சொல்லி வயிற்றில் புளி கரைத்திருக்கிறார்கள். தண்ணீர் ஒரு நாட்டின் ஜீவாதார பிரச்சனை, அதுதான் தனி மனிதனின் ஜீவாதார உரிமையும் கூட .வற்றாத ஜீவ நதிகளெல்லாம் வற்றும்வரை தண்ணீர் திருட்டு. வாழ வீடு கட்ட, வளம் கொழிக்கும் மணல் திருட்டு. வீட்டிலுள்ளோர், வெளியில் சென்று வந்தாலும், விருந்தினர் வந்து சேர்ந்தாலும் வந்தோரை வரவேற்று முதலில் உபசரிப்பது ஒரு குவளை தண்ணீர் கொடுத்து அந்நேரத்தில் தான் தண்ணீரின் முக்கியத்துவம் நமக்கு தெரிகிறது.
முந்தைய காலங்களில் (முன்னே என்றதும் பழங்காலத்துக்கு செல்ல வேண்டாம், 15-20 ஆண்டுகளுக்கு முன்னே ஆற்றங்கரை என்று அழைக்கப்படும் சி.எம்.பி லைன் வாய்க்காலில் தண்ணீர் வழிந்தோடும் ஆற்றில் சரியாக தூர்வாரப்படாமல் தெருக்களில் சிதறி பல நாட்களாக ஓடி பல குளங்கள் நிறையும் ஆனால் தற்போது அவ்வழியே துர்நாற்றம் வீசி தண்ணீர்க்கு பதில் சாக்கடை கால்வாய்களாக ஓடுகிறது என்பது வேதனையான விஷயம்,
இன்றைய தலைமுறை வற்றிய வாய்க்காலையும், ஆறையும், வானம் பார்த்த பூமியையும் வரலாற்றுச் சின்னங்களாய் பார்த்து வாய் பிளந்து நிற்கின்றனர். நாளைய தலைமுறைக்கு நாம் இவற்றையெல்லாம், நல்ல பல கதைகளாய், கவிதைகளாய், புவியியல் பாடத்தில் புள்ளிகளாய், கோடுகளாய் மட்டுமே சொல்ல இயலுமென்பதே இன்றைய நிலை. 
தமிழ்நாட்டில் விவசாயம் என்பதே இல்லாமல் போனாலும் ஆச்சர்யமில்லை . அரிசி ஆந்திராவில் இருந்து இறக்குமதி செய்யபடுகிறது, விலை உயர்வுக்கு காரணம் அதுதான். தமிழ்நாட்டில் தண்ணீர் இப்போது விற்பனை பொருள் , தண்ணீர் பாக்கெட் , தண்ணீர் பாட்டில் , தண்ணீர் கேன் என்று அது இப்போது பணம் பண்ணும் தொழில் என்றாகிவிட்டது. 
நம் பருவகாலத்தில் பலஞ்சூர், நசுனி, ராஜாமடம் போன்ற ஆறுகளிலும், செக்கடிக் குளம், செடியன் குளம், வெள்ளை குளம் மற்றும் ஆலடிக்  குளம் போன்ற குளங்களிலும் குளித்து அதன் கரையில் உள்ள மணலில் குதித்தோடி விளையாடி, மகிழ்ந்திருந்த காலம் மலையேறிப் போய்விட்டது. வற்றாத ஆறுகள் / குளங்கலெல்லாம், வசதி படைத்தோர், மணலை வாரிச்சுருட்டியப் பின் விட்டுச் சென்ற பள்ளங்கள் மட்டுமே, மனிதனின் உயிரைக்குடிக்க வாய் பிளந்து நிற்கின்றன வறண்டும் கிடக்கின்றன. 
நதிகள் ஒன்றாக இணந்தால் வெள்ள அபாயம் இருக்காது, நல்ல மழை பெய்த மாநில தண்ணீர் வறட்சி பாதித்த மாநிலத்திற்கு போய் சேரும் அந்த மாநில தண்ணீர் பிரச்சனையும் தீரும் , சமூக ஆர்வலர்கள் சுற்று சூழல் நிபுனர்கள் சமூக அமைப்புகள் நதிகள் இணைப்பை வலியுறுத்துகிறது , அது அவசர அவசியம் என்கிறார்கள் , ஆனால் எல்லா அரசும் ஆமாம் அவசியம் என்று சொல்லிவிட்டு அதற்கு எத்தனை ஆயிரம் கோடி செலவாகும் என்று சொல்லி ஒதுங்கி விடுவார்கள்.
ஆற்றுநீர் ஓடி, அளப்பரிய வளம் பெற்ற நாட்டினிலே, பாட்டில் நீரை வாங்கி பருக வேண்டிய கட்டாயம். நாம் பணத்தைக் கொடுத்து வாங்குவது, பாட்டில் நீரை  மட்டுமல்ல, புதைக்கப்பட்ட மனிதங்களின் மனசாட்சியையும்தான். 
பருவமழை பொய்த்தது என்பது நமது தண்ணீர் தாகத்திற்கு காரணம் அல்ல. பெய்த மழை நீரை நாம் தேக்கி வைத்து கொள்ள எந்த ஏற்பாடும் செய்து கொள்வதில்லை, இதனால் பெய்த மழை நீரின் முக்கால் பங்கு கடலில் கலந்து வீணாகிறது என்பதுதான் நிஜம். வீட்டில் மழை நீர் சேமிப்பின் அவசியத்தை அரசு சொன்னதே பத்து வருடங்களுக்கு முன்புதான். இப்போது கூட கண்மாய்கள், குளங்கள், ஏரிகள் சரிவர தூர் வாரபடுவதில்லை, இதனால்தான் தண்ணீர் பிரச்சனை. ஆனால் தூர் வாரியதாக பொய் கணக்கு எழுதமட்டும் தவறுவதில்லை, இதனால் கண்மாய்கள், குளங்கள், ஏரிகள் நிறைந்து வழிந்து கடலில் கலந்து விடுகிறது . இதுபற்றி எந்த அரசும் அக்கறைபட்டதும் இல்லை. கவலைபட்டதும் இல்லை.
அதிரையில் அதிகளவில் உப்பு விளைகிறது தண்ணீர் தேக்கமில்லாத காரணத்தால் அனைத்து தண்ணீரும் கடலோடு கலக்கின்றன, இந்தியாவின் இருபத்தைந்து சதவிகித மாவட்டங்களில் தண்ணீர் உப்பு அதிகமாகி விட்டது . அது மட்டுமல்ல நமது தண்ணீரில் இரும்பு தாது அதிகமாகி விட்டது என்கிறது நீர்வள அமைச்சகம். அதுமட்டுமல்ல ஈயம், குரோமியம் , காட்மியம் போன்ற கனிமங்களால் தண்ணீர் மாசுபட்டிருக்கிறது என்று தனது அறிக்கையில் நீர்வள அமைச்சகம் மிரட்டுகிறது, உலக அளவில் பார்க்கும் போது கூட இந்தியாவின் நீர்வளம் பெருமை பட்டு கொள்வது போல் இல்லை. மோசமான நிலைதான் , உலக மக்கள் தொகையில் இந்தியாவின் மக்கள் தொகை பதினாறு சதவிகிதம், ஆனால் இந்தியாவின் நீர்வளம் வெறும் நான்கு சதவிகிதம் தான் , நிலத்தடி நீர் ஏற்கனவே குறைந்துவிட்டது தற்போது மேற்பரப்பு நீரும் குறைந்து விட்டது என்கிறார்கள் நீர்வள நிபுனர்கள் .
இப்படியே போனால் என்ன ஆகும்? நினைத்து பார்க்கவே பயமாக இருக்கிறது. பொதுவாக, நிலத்தின் அடியில், நீர் அடுக்கு(water table)க்கு சற்று கீழே, சில நூறு அடிகளில் நிலத்தடி நீர் பொதிந்து கிடக்கிறது. இந்த நிலத்தடி நீரை அக்யூபர் (aquifer) என்று நீர்வள நிபுணர்கள் சொல்கிறார்கள். அதற்கு கீழே, ஒரு அடுக்குக்கு பிறகு, ஆழ்நிலை உப்புத் தண்ணீர் களம்(deep salty aquifer) உள்ளது. சில நூறு அடிகளில் இருக்கும் நிலத்தடி நீரை, நாம் முற்றிலுமாக இறைத்துவிட்டால், அந்த இடத்திற்கு ஆழ்நிலை உப்புத் தண்ணீர் வந்துவிடும் அபாயம் இருக்கிறது. இந்த தண்ணீர் கடல் நீர் போலத்தான். இதனை நமது அன்றாட வாழ்வுக்கு பயன்படுத்துவது மிகவும் கடினம்.
மக்களுக்கு பாதுகாக்கபட்ட சுகாதாரமான குடிநீர் வழங்காமல் இந்தியா வல்லரசு என்று சொல்லி கொள்வது பெருமையான விஷயம் அல்ல.

Sunday, September 8, 2013

ஈரான் பெட்ரோல்.. அமெரிக்க மிரட்டலை இந்தியா நிராகரித்தால் ரூ.57,000 கோடியை மிச்சப்படுத்தலாம்!

ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா விதித்துள்ள தடையை மீறி அந்த நாட்டிடம் இருந்தே அதை இறக்குமதி செய்தால் ரூ. 57,000 கோடியை சேமிக்க முடியும் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்.
ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாகக் கூறி அந்த நாட்டுடன் எந்த வர்த்தக நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என்று அமெரிக்க நெருக்கடியால் ஐ.நாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி வந்த நாடுகள் அதை வேறு நாடுகளிடம் இருந்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஆனால், ஈரானுக்கு டாலர்களை வழங்கக் கூடாது என்ற அமெரிக்காவின் உத்தரவால், கொல்கத்தாவில் உள்ள யூகோ வங்கி மூலமாக ஈரானுக்கு ரூபாயாகத் தந்து ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கப்பட்டு வருகிறது. இந்த ரூபாயை ஈரானால் சர்வதேச சந்தையில் பயன்படுத்த முடியாது. இதனால் இந்த ரூபாய்கு இணையான உணவுப் பொருட்கள், மருந்துகள், ரயில்வே என்ஜின்கள், ரயில் பெட்டிகளை இந்தியாவிடம் இருந்து ஈரான் இறக்குமதி செய்து வருகிறது.
இந்நிலையில் ரூபாயின் மதிப்பைக் காப்பாற்ற மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒன்று இந்திய சந்தையில் டாலர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்வது. இந்த வகையில் டாலர்களை சேமிக்கவும், கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான செலவை மிச்சப்படுத்தவும் அமைச்சர் வீரப்ப மொய்லி ஒரு புதிய யோசனையை மத்திய அரசிடம் தெரிவித்துள்ளார்.
 ஈரானுக்கு டாலர்களுக்குப் பதிலாக ரூபாயைத் தந்தே கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய முடியும் என்பதால், அந்த நாட்டிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் பெட்ரோலியப் பொருட்களின் அளவை அதிகரிக்கலாம் என்கிறார் மொய்லி.
இந்த ஆண்டில் இதுவரை ஈரானிடம் இருந்து இந்தியா 2 மில்லியன் டன் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்துள்ளது. இன்னும் நமக்குத் தேவைப்படும் எண்ணெய்யில் 11 மில்லியன் டன்னை ஈரானிடம் இருந்தே வாங்கினால் நமக்கு ரூ. 57,000 கோடி மிச்சமாகும் என்று வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஈரானிடம் இருந்து 13 மில்லியன் டன் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்தது குறிப்பிடத்தக்கது. அதே அளவை இந்த ஆண்டும் ஈரானிடம் இருந்தே வாங்கினால், பணம் மிச்சமாகும். இது தொடர்பான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் நிதியமைச்சர் ப.சிதம்பரத்திடம் மொய்லி நேரடியாகவே பேசியுள்ளார்.
ஆனால், அமெரிக்காவுக்கு பயந்து கொண்டு ஈரானுடன் தயங்கித் தயங்கி மிகச் சொற்பமான அளவிலேயே இந்தியா வர்த்தம் செய்து வருகிறது. இந் நிலையில் ஈரானுக்கு பெரும் லாபம் கிடைக்கும் வகையில் பெரிய அளவிலான வர்த்தகத்தில் இந்தியா இறங்கினால் அது அமெரிக்காவை பகைத்துக் கொண்டது போலாகிவிடும் என்பதால் மன்மோகன் சிங் தயங்குவதாகத் தெரிகிறது.
இந்நிலையில் முதலில் ஈரானுடனான தூதரக உறவை சீராக்க வேண்டிய வேலையும் மத்திய அரசுக்கு உள்ளது. இராக்கில் இருந்து கச்சா எண்ணெய்யை ஏற்றிக் கொண்டு தனது கடல் எல்லைப் பகுதியைக் கடந்து சென்ற இந்திய டேங்கர் கப்பலை சமீபத்தில் ஈரான் சிறை பிடித்தது. தனக்கு 6 மில்லியன் டாலர் வரை வரி செலுத்த வேண்டும் என்று ஈரான் கூறிவிட்டது.
அதே நேரத்தில் ஈரானுடன் நெருக்கமான வர்த்தக உறவு வைப்பது அமெரிக்கா-இந்தியா இடையிலான உறவில் சிக்கலை ஏற்படுத்தும். இதைச் செய்யாவிட்டால் பல ஆயிரம் கோடிகள் இந்தியாவுக்கு இழப்பு ஏற்படும்.
இதனால் மொய்லி சொல்வதைப் போல ஈரானில் இருந்து அதிக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து டாலர்களை மிச்சப்படுத்தி ரூபாய் மதிப்பு மேலும் சரிவதைக் கட்டுப்படுத்தலாம் என்கிறார் ப.சிதம்பரம். மொய்லிக்கு முன்னதாகவே சிதம்பரம் இந்தக் கருத்தைத் தெரிவித்திருந்தார். ஆனால், ஐ.நா. பொருளாதாரத் தடைகள், அமெரிக்க உறவை கருத்தில் கொண்டே எந்த முடிவையும் எடுக்க வேண்டும் என்றும் சிதம்பரம் கூறியுள்ளார்.

Wednesday, September 4, 2013

மாணவர்கள் பெயரில் பிழை இருப்பின், திருத்தம் செய்து கொள்ள வாய்ப்பு!

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள், பெயரில் பிழை இருப்பின் திருத்தம் செய்துகொள்ள ஆக., 26 முதல் செப்.7 வரை வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் பெயர் பட்டியல் இறுதி செய்யும் பணி, ஆக., 26 முதல் நடக்க உள்ளது. இதன்படி மதிப்பெண் சான்றிதழில், பெயர், இன்ஷியல் பிறந்த தேதி உள்ளிட்டவை பதிவு செய்யப்படும். இதுதொடர்பாக, தேர்வுத் துறையின் சுற்றறிக்கை:

சில பெற்றோர், குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் போது பெயர், இன்ஷியல், பிறந்த தேதி போன்ற விவரங்களை தவறாக கொடுக்கின்றனர். இதனால், 10ம் வகுப்பு பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழில் தவறு ஏற்படுகிறது. உயர் கல்விக்கு செல்லும் போது சிக்கல் ஏற்பட்டு அதை சரி செய்ய தாமதம் ஆகிறது. இதைத் தவிர்க்க மாணவரிடம், உறுதி மொழி சான்றிதழ்
படிவம் அளிக்கப்படும். அதில் பெயர், இன்ஷியல் உள்ளிட்ட சரியான விவரங்களை எழுத வேண்டும் படிவத்துடன் பிறப்பு, ஜாதிச் சான்றிதழ் நகல் இணைக்க வேண்டும். இப்படிவத்தை ஆக., 26 முதல் செப். 7க்குள் தலைமை ஆசிரியரிடம் பெற்று, பூர்த்தி செய்து ஒப்படைக்க வேண்டும்.