Sunday, August 25, 2013

இன்ஷா அல்லாஹ்

முஸ்லிம்கள் அடிக்கடி இந்த வார்த்தையை பயன்படுத்துவதைக் கண்டிருப்பீர்கள். குறிப்பாக எதிர்காலத்தில் ஒரு செயலை செய்வதாக இருந்தாலோ அல்லது நாடினாலோ இந்த வார்த்தையோடு சேர்த்துதான் அச்செயலை செய்வதாகக் கூறுவர். ‘இன்ஷா அல்லாஹ் நான் இன்று மாலை அங்கு வருகிறேன்’ என்றோ ‘இன்ஷா அல்லாஹ் நாளை எனக்கு திருமணம் நடைபெற உள்ளது’ என்றோ கூறுவதை கேட்டிருப்பீர்கள். இந்த வார்த்தையின் பொருள் என்ன?
இந்த அரபு வார்த்தையின் பொருள் ‘இறைவன் நாடினால்’ என்பதே. இது அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததா? ஆம் அன்பர்களே, இறைவன் தன திருமறையில் இறைத்தூதரைப் பார்த்துக்  கூறுவதை கவனியுங்கள்.
 “அல்லாஹ் நாடினால் (இன்ஷா அல்லாஹ் ) என்ற வார்த்தையை சேர்த்தே தவிர நாளை இதைச் செய்வேன் என்று எதைப் பற்றியும் நீர் கூறாதீர்! நீர் மறந்து விடும்போது இறைவனை நினைப்பீராக!” (திருக்குர்ஆன 18;23.24)
இந்த வசனம் நமக்கு ஒரு மிக பெரிய உண்மையையும் தத்துவத்தையும் போதிக்கிறது. பொதுவாக இவ்வுலக வாழ்க்கையில் அன்றாட அலுவல்களில் ஈடுபடும்போது மனிதன் தன்னைப் பற்றியும் தன்னைச் சுற்றியும் உள்ள பல உண்மைகளை மறந்து விடுவான். தனது உடல், உயிர், பொருட்கள் இடம் காலம் என பலவும் தனது கட்டுப் பாட்டில் இல்லதவையே. இவை இன்றி அவனால் எதையுமே சாதிக்க முடியாது என்பதும் அவன் அறிவான். ஆனால் இவை அனைத்தும் இறைவனால் கட்டுப்படுத்தப்பட்டு இயக்கப் படுபவை என்ற உண்மையை மிக எளிதாக மறந்து விடுவது மனித இயல்பு. இந்த தன்னிலை மறந்த நிலை அவனை அகங்காரத்தின் எல்லைக்கும் தற்பெருமைக்கும் பிறரை இழிவாகக் கருதும் மனோநிலைக்கும் கொண்டு செல்ல ஏதுவாகிறது. அடக்குமுறை, கொடுங்கோன்மை, அக்கிரமம், அட்டூழியம் என்பவை எல்லாம் இதன் தொடர்ச்சியே!
ஆனால் எக்காரியம் செய்யும்போதும் இறைவனின் பெயரை நினைவு கூர்ந்தவர்களாக தொடங்கும்போதும் தொடரும்போதும் என்ன நடக்கும்?
  •  பணிவும் அடக்கமும் மனிதனை ஆட்கொள்கிறது!
  •   பாவங்கள் செய்ய முற்படமாட்டான்!
  • காரியங்களை சாதிக்க அநியாயமான வழிகளை நாடவோ பொய் பேசவோ       மோசடிகள் செய்யவோ முற்படமாட்டன்!
  • செய்யும் காரியத்திற்கு அகிலத்தின் இறைவன் என்னோடு துணை உள்ளான் என்ற நினைப்பு மேலோங்குவதால் தன்னம்பிக்கை பெருகுகிறது.
  • காரியம் நிறைவேறாமல் போனாலோ தோல்வியில் முடிந்து விட்டாலோ ‘என் இறைவன் அதை நாடவில்லை, இது எனது நன்மைக்கே’ என்ற உணர்வு ஆட்கொள்வதால் அவன் விரக்தி அடையவோ தற்கொலைகளுக்கோ போகமாட்டான்.
  • காரியம் நிறைவேறிவிட்டலோ அல்லது வெற்றி அவனை அடைந்து விட்டாலோ அகங்காரமோ தற்பெருமையோ அவனை ஆளாது. இது இறைவன் சாதித்துக் கொடுத்தது என்று அவனுக்கு நன்றி கூறி சிரம் பணிவான்.
இது போன்று இன்னும் பல நன்மைகள்! இனி நாமும் சொல்வோமா, இன்ஷா அல்லாஹ்?

Saturday, August 24, 2013

கல்வி உதவித் தொகை குறித்த தகவல்களை தரும் இணையதளங்கள்!

மாணவர்கள் தங்கள் படிப்பிற்கு ஆகும் செலவை பல்வேறு முறைகளில் ஈடு செய்கின்றனர். அதில் ஒன்றாக கல்வி உதவித் தொகை விளங்குகிறது. படிக்கும் மாணவர்களின் கல்வித் திறன், இனம், நாடு, எடுத்திருக்கும் படிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு உதவித் தொகைகள் வழங்கபடுகின்றன. பெரிய பெரிய நிறுவனங்களும், பல்கலைக்கழகங்களும் கூட கல்வி உதவித் தொகையை வழங்கி வருகின்றன. அந்த வகையில் கல்வி உதவித் தொகை குறித்த தகவல்களை தரும் சில இணையதளங்களைப் பற்றி இங்கு அறிவோம்.

 www.scholarshipsinindia.com

 www.education.nic.in

 www.scholarship-positions.com 

 www.studyabroadfunding.org

 www.scholarships.com

 www.scholarshipnet.info

 www.eastchance.com

 www.financialaidtips.org

இந்த இணையதளங்களில், கல்வி உதவித் தொகை குறித்த தகவல்களை மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

நன்றி:தினகரன்

Thursday, August 22, 2013

ஜனாஸா(மய்யித்) சம்பந்தமான சட்டங்களும் அதன் வழி முறைகளும்

ஒரு முஸ்லிம் மரணித்துவிட்டால் அவரைச் சுற்றியுள்ள முஸ்லிகள் உடனே அவருக்கு செய் யவேண்டிய அவசியமான குளிப்பாட்டுதல், கஃபனிடுதல், தொழவைத்தல், அடக்கம் செய்தல் போன்றவற்றை செய்வது கட்டாய கடமையாகும்.
ஆனால் நம் இஸ்லாமியர்களின் பெரும்பாலானவர்களிள் குடும்பத்தில் யாராவது இறந்து விட்டால் அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் அந்த மைய்யத்திற்க்கு செய்ய வேன்டிய கடமைகள் என்ன என்று கூட தெரியாமல் இருக்கின்றார்கள்.
இன்னும் சில குடும்பங்களில் முஅத்தின்(மோதினார்) இமாம்(ஹஜ்ரத்) போன்றோரை அழைத்துவந்து மைய்யத்திற்க்கு செய்யவேண்டியதை செய்யுங்கள் என்று சொல்லி விட்டு அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் ஒதுங்கி கொள்கிறார்கள்.
இந்த நிலையைப் போக்கி இதன் உண்மையான நிலைகளை நமது சகோதரர்கள் புரிந்து செயல்பட வேண்டு மென்ற நன்நோக்கில் என்னால் முடிந்த வரை குர்ஆன் ஹதீஸின் அடிப்படையில் இதை தொகுத்துள்ளேன். அதனால் ஒவ்வொரு முஸ்லிமும் தங்கள் குடும்பத்தில் ஏற்ப்படும் மைய்யித்திற்காவது நாமே அதற்கு செய்யவேண்டிய கடமைகளை செய்ய வேண்டும் என்று எண்ணி இவைகளை நாம் படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
(குல்லு நப்சின் தாயிகதுல் மவ்த்) ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை அடைந்தேதீரும். (அல்குர்ஆண். 3ஃ185) என்ற அல்லாஹ்வின் கூற்றுக்கிணங்க) இந்த உலகில் பிறந்த அனைவருமே ஒரு நாள் இறப்பவர்கள்தான் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது நமக்கு .முன்னர் வாழ்ந்த அனைவரும் இறந்தது போலவே நாமும் ஒரு நாள் இறப்போம், நம்மையும் ஒரு நாள் கப்ரில் வைப்பார்கள் என்பது உண்மை.
ஆனால் நாம் எங்கு? எப்படி? எப்போது? இறப்போம் என்பது அல்லாஹ் மட்டுமே அறிந்திருக்கிற மறைவான ஞனத்தில் உள்ளதாகும். எனவே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ள இன்பங்களை தகர்த்தொழிக்கக்கூடிய (மரணத்) அதிகமதிகம் நிணைவு கூருங்கள். (திர்மிதி) என்ற சொல்லிற்கிணங்க ங்மரணத்திற்குப் பின்னருள்ள வாழ்க்கைக்காக அல்லாஹ்வும் ரசூலும் ஏவிய நற்செயல்களை அதிகம் கடை பிடித்து அவர்கள்தடுத்துள்ள காரியங்களை தவிர்த்துக் கொள்வது நம் அனைவர்கள் மீதும் கடமைய கடமையாகும். ஆகவே ஒரு முஸ்லிம் மரணித்துவிட்டால் அவரின் குடும்பத்தில் உள்ளவர்கள் செய்ய வேண்டிய கடமைகள் பல உள்ளன அவைகள் குறித்து இன்ஷா அல்லாஹ் கானலாம்.
1. மைய்யத்தின் கண் திறந்து இருந்தால் அதைக் கசக்கி மூட வேண்டும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அபூஸலமா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் இறந்தபோது அவர்களின் கண்களை கசக்கி மூடி விட்டு கூறினார்கள் உயிர்கைப்பற்றப்படும்போது பார்வை அதை பின்பற்றி (நிலை குத்தி) நின்றுவிடுகிறது என்று கூறினார்கள் (முஸ்லிம்)
2. இறந்த உடனேயே அந்த மைய்யித்து விகாரம் அடையாத அளவுக்கு உடல் சூட்டோடு இருக்கும்போதே கை கால்களை இலகுபடுத்தி சீராக படுக்கவைக்கவேண்டும். அதோடு அந்த மைய்யத்தின் வயிறு ஊதாமல் இருப்பதற்காக சற்று கன கனமான பொருளை வயிற்றில் வைக்க வேண்டும்.
3. மைய்யித்தின் உடல் முழுதும் ஆடையால் மறைக்கவேண்டும். நபி(ஸல்)அவர்கள் இறந்த போது கோடு போட்ட ஒரு ஆடையால் உடல் முழுக்க மூடி மறைக்கப்பட்டார்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மனைவி அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அஅறிவித்தார்கள் (ஆதாரம்: புகாரி முஸ்லிம்)
4. குளிப்பாட்டி ஆடையிட்டு (கபனிட்டு) ஜனாஸ தொழுகை நடத்தி முடித்து அடக்கம் செய்யும் வரை எல்லாவற்றையும் விரைவாகச் செய்ய வேண்டும் ஜனாஸாவை அடக்கம் செய்வதில் வேகம் காட்டுங்கள் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள் (ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)
5. எந்த ஊரில் அவர் இறந்தாரோ அதே ஊரில் அவரை அடக்கம் செய்ய முயற்ச்சிக்க வேண்டும் உஹது போரில் கொல்லப்பட்ட(ஷஹீதான) சஹாபாக்களை இடம் மாற்றாமல் அந்த இடத்திலேயே அடக்கம் செய்யுமாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கட்டளையிட்டார்கள் (ஆதாரம்:திர்மிதி. அபூதாவுத், நஸஈ,இப்னு மாஜா)
  ஜனாஸாவை குளிப்பாட்டுதல்  
ஜனாஸாவை குளிப்பாட்டுவது முதல் தொழுகை நடத்துவது வரை உள் ளவற்றை சிலர்செய்வதன் மூலம் மற்றவர்களின் மீதான கடமை நீங்கிவிடும். இதற்குதான் (ஃபர்ழ் கிஃபாயா) என்றுசொல்லப்படும் எவருமே இந்த கடமைகளை செய்யாதபோது எல்லோருமே குற்றவாளிகளாக தண்டிக்கப் படுவோம் .ஜனாஸாவை குளிப்பாட்டுவது முதல் அடக்கம் செய்வது வரை கலந்து கொண்டவரின் நன்மைபற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதிகமதிகம் கூறி இருக்கிறார்கள்.
ஒருவர் தான் இறந்த பின் நீங்கள் தான் என்னை குளிப்பாட்டவேண்டும் என்று (வஸிய்யத்) மரண சாசனம் எழுதி வைத்திருந்தால் அவர்தான் அந்த ஜனாஸாவை குளிப்பாட்டுவதற்கு அதிக உரிமை பெற்றவர். அப்படி வஸிய்யத் செய்யாதபட்சத்தில் இறந்தவருக்கு மிக நெருக்கமான உறவுமிக்கவர் உரிமை பெறுவார், ஏனெனில் அவர்கள்த தாம் அதிக அக்கறை கொள்வர். பெண்ணுக்கும் வஸிய்யத் விஷயத்தில் ஆணைப் போன்றே.
கணவன் தன் மனைவியையும் மனைவி தன் கணவனையும் குளிப்பாட்டலாம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது மனைவி ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடத்தில் கவலைப் படாதீர்கள் எனக்கு முன்னால் நீங்கள் இறந்து விட்டால் நானே உங்களை குளிப்பாட்டுவேன் என்று கூறினார்கள். (ஆதாரம் : அஹ்மத்)
அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நான் இறந்த பின் எனது மனைவிதான் பின் என்னை குளிப்பாட்டவேண்டும்என்று வஸிய்யத் செய்து இருந்தார்கள். (ஆதாரம் : முஸன்னப் அப்திர் ரஸ்ஸாக்)
ஏழு வயதிற்க்குட்பட்ட ஆண் அல்லது பெண் பிள்ளைகளில் யார் இறந்தாலும் அவர்களைதாய் அல்லது தந்தை குளிப்பாட்டலாம்.
ஆண்கள் மட்டுமே உள்ள இடத்தில் பெண் இறந்து விட்டாலோ அல்லது பெண்கள் மட்டுமேஉள்ள இடத்தில் ஆண் இறந்துவிட்டாலோ குளிப்பாட்டாமல் தயமம் அதாவது ஒருவர் தன் இரண்டுகை களையும் பூமியில் அடித்து அவ்விரு கைகளையும் அந்த ஜனாஸாவின் முகம் கைகளில் தடவவேண்டும்
காபிர் இறந்துவிட்டால் எக்காரணத்தை முன்னிட்டும் அவரை குளிப்பாட்டுவதோ அடக்கம் செய்வதோ கூடாது இதுப்பற்றி அல்லாஹ்வே கூறுகிறான் அவர்களில் யாராவது இறந்துவிட்டால் அவருக்காக நீர் ஒருக்க காலும் (ஜனாஸா) தொழுகை தொழவேண்டாம் இன்னும் அவர்களின் (கப்ரில்) அடக்கஸ்தலத்தில் அவருக்கு (பிரார்த்திப்பதற்காக) நிற்கவேண்டாம் (அல்குர்ஆண்.9 9ஃ84) என்று கூறுகிறான் தொழ வைப்பதே கூடாது என்று சொல்லும்போது மற்றதைப்பற்றி சொல்ல வேண்டியதில்லை
மைய்யித்தை குளிப்பாட்டும்போது அதன் மருமப்பகுதிகள் யார் கண்களிலும் படாத வாறு மறைத்த நிலையிலேயே அதன் ஆடைகளை களைய வேண்டும். பிறகு மைய்யித்தை சற்று உயர்த்தி உட்காகார வைத்து அசுத்தங்கள் வெளியாகும் வரை வயிற்றை நன்றாக அழுத்த வேண்டும் இந்த நேரத்தில் தண்ணீரை அதிகமாக பயன்படுத்தி கொள்ளவேண்டும்.
மைய்யித்தை குளிப்ப பாட்டுபவர் தனது கையில் துணி அல்லது கையுறையை சுற்றிக் கொண்டு மைய்யித்தின் மர்ம உறுப்புக்களை சுத்தம் செய்யவேண்டும். அந்த மைய்யத்து ஏழு வயதுக்கு மேற்ப்பட்டவராக இருந்தால் மர்ம உறுப்புகளை பார்க்காமலேயே கழுகவேண்டும். பின்பு (பிஸ்மில்லாஹ்) என்று கூறி தொழுகைக்கு ஒழு செய்வதுபோல ஒழு செய்து விட வேண்டும். ஏனெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது மகள் ஜைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள்) இறந்தபோது அவர்களை குளிப்பாட்டிய பெண்களிடம் அவரின் வலது புறத்தையும் ஒழு செய்யும் உறுப்புகளையும் முதலில் கழுகுங்கள் என்று கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்)
மைய்யித்தின் வாயிலோ மூக்கிலோ தண்ணீரை செலுத்தக்கூடாது அதற்க்கு பதிலாக ஈரத்துணியை விரலில் சுற்றிக்கொண்டு மைய்யித்தின் இரு உதடுகளையும் லேசாக பிளந்து பற்களையும் மூக்குத் துவாரங்களையும் மெதுவாக தேய்த்து சுத்தம் செய்யவேண்டும். அதன் பிறகு இலந்த இலை அல்லது வாசனைப் பொருள் கலந்த தண்ணீரால் முகத்தையும் தாடியையும்கழுகவேண்டும் பிறகு எஞ்சிய தண்ணீரை வைத்து உடல் முழுதும் குளிப்பாட்ட வேண்டும்.
மைய்யித்தை குளிப்பாட்டும்போது வலது பக்கமாக ஆரம்பிக்க வேண்டும் என்று ஹதீஸ் வந்திருப்பதால் கை, கால்களை வலது பக்கமாக கழுவ தால் ஆரம்பிக்க வேண்டும். இன்னும் ஒவ்வொரு; உறுப்பையும் மூன்று முறை கழுவ வேண்டும். ஒவ்வொரு தடவையும் வயிற்றை அழுத்தி சுத்தம் செய்ய வேண்டும். மூன்று தடவைக்குமேலும் அசுத்தங்கள் வெளியாகி கொண்டிருந்தால் தேவைக்கேற்ப ஒற்றைப் படையாக கழுவிக் கொள்ளலாம் என ஹதீஸில் வந்திருக்கிறது.
கடைசியாக கழுகும்போது துர் வாடைகளை நீக்கிவிடுவதற்காக கற்பூரத்தை பயன்படுத்திக் கொள்ளவேண்டும். பலமுறை கழுகியும் அசுத்தங்கள் வெளியாகிக் கொண்டிருந்தால் அந்த பகுதியில்பஞ்சை வைத்து அடைத்து விட்டு அசுத்தம் வெளியான அந்த இடத்தை மட்டும் கழுகிவிட்டு மறுபடியும் ஒழு மட்டும் செய்து விட்டால் போதுமானது குளிப்பாட்ட வேண்டிய அவசியம் இல்லை. இன்னும் கஃபன் அணிவித்த பிறகும் அசுத்தங்கள் வெளியாகிக்கொண்டிருந்தால் மறுபடியும் கழுவி கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை.
மைய்யித்தை குளிர்ந்த நீரால் மட்டுமே குளிப்பாட்டவேண்டும். அசுத்தங்கள் அதிகம் இருந்து சுடு தண்ணீரால்தான் போக்கமுடியும் என்றிருந்தால் மட்டுமே சுடு தண்ணீரை பயன்படுத்தி கொள்ளலாம். அதுபோலவே அசுத்தங்களை நீக்க வாசனை சோப்புக்களை உபயோகிக்கலாம். ஆனால் தோல் கிழியும் அளவுக்கு அழுத்தி தேய்க்க கூடாது. பல்லுக்கு மிஸ்வாக்கை பயன்படுத்துவது சிறப்பாகும்.
மைய்யத்திற்கு மீசை, நகங்கள் சராசரிக்கு மேல் வளர்ந்திருந்தால் வெட்டலாம், (அக்குல், மர்மப்பகுதியின் முடிகளை வெட்டக்கூடாது) பெண் மைய்யித்தின் கூந்தலை மூன்று பின்னல்களாக பின்னி முதுகு பக்கம் தொங்க விடவேண்டும். குளிப்பாட்டியபின் மைய்யித்தின் மேல் உள்ள ஈரத்தை துணியால் ஒத்தி எடுக்கவேண்டும்
இஹ்ராம் அணிந்த நிலையில் ஒருவர் இறந்துவிட்டால் தண்ணீராலும் இலந்த இலைப் பொடியினாலும் மட்டுமே குளிப்பாட்டவேண்டும், வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்தக்கூடாது, ஆணாக இருந்தால் தலையை மூடக்கூடாது. ஹஜ்ஜில் இஹ்ராம் கட்டிய நபித்தோழர் ஒருவர் இறந்தபோது வாசனைத் திரவியங்களை பயன்படுத்தாமலும் தலையை மூடாமலும் கஃபனிடுங்கள் ஏனெனில் மறுமை நாளில் அவர் அதே கோலத்தில் தல்பியாக் கூறியவராக எழுப்பப்படுவார் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் (புஹாரி, முஸ்லிம்)
போரில் வீர மரணம் அடைந்த ஷஹீதின் ஆயுதங்கள் மற்ற போர் சம்மந்தப்பட்ட போருட்க்களை எடுத்துவிட்டு குளிப்பாட்டாமல், தொழகை நடத்தாமல் அவர் உடுத்தியிருந்த ஆடையுடன் அடக்கம் செய்யவேண்டும். உஹது போரில் இறந்த சஹாபாக்களுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழ வைக்க வில்லை (புஹாரி,முஸ்லிம்)
தாய் வயிற்றில் உள்ள குழந்தை நான்கு மாதம் முடிந்து விழுந்துவிடுமானால் அந்த குழந்தைக்கு பெயர் வைத்து குளிப்பாட்டி தொழுகை வைத்து அடக்கம் செய்யவேண்டும், ஏனெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் ஒரு தாயின் வயிற்றில் மூன்றாவது நாற்பதில் பிண்டமாக இருக்கு கும் அக் குழந்தைக்கு வானவர் உயிர் ஊதுவார் என்று கூறினார்கள். (முஸ்லிம்)
நான்கு மாதத்திற்க்கு முன் பாக விழுந்து விட்டால் அது உயிரற்ற வெறும் பிண்டம் என்பதால் குளிப்பாட்டவோ தொழுகை நடத்தவோ அவசியமில்லை எந்த இடத்தில் வேண்டுமானாலும் அடக்கம் செய்யலாம்.
தண்ணீர் கிடைக்காவிட்டாலோ அல்லது உடல் கருகி இருந்தாலோ அல்லது உடல் வெடித்துலோ சிதறி கிடந்து குளிப்பாட்ட முடியாத நிலையில் இருந்தால் ஒருவர் தன் கைய்யால் மண்ணில் அடித்து மைய்யித்தின் முகத்தையும் கையையும் தயம்மம் முறையில் தடவவேண்டும்.
மைய்யித்தின் உடலில் காணப்படும் ஏதாவது விசயம் நல்லதாக இல்லாவிட்டால் குளிப்பாட்டியவர் அல்லாஹ்வுக்கு பயந்து அதை வெளியில் யாரிடமும் சொல்லகூடாது, இஸ்லாமிய சகோதரர் ஒருவரை குளிப்பாட்டி அவரில் காணப்படும் குறைகளை குளிப்பாட்டியவர் மறைத்துவிட்டால் அல்லாஹ் அவரை நாற்பது தடவை மன்னிக்கிறான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (ஹாக்கிம்)
  கஃபனிடுதல்  
கஃபன் என்பது மரணித்தவரை குளிப்பாட்டி மூடி மறைப்பதற்கான ஆடைக்கு சொல்லப்படும். மைய்யித்தை கஃபனிட்டு அடக்கம் செய்வது கட்டாயக் கடமையாகும். கஃபனாடை மைய்யித்தின் சொந்த செலவில் இருக்கவேண்டும். இஹ்ராம் கட்டிய நிலையில் இறந்தவரை அவர் அணிந்திருந்த இரண்டு ஆடைகளிலேயே கபனிடுங்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.: இறந்தவர் கடனாளியாக இருந்தால் அல்லது தனது சொத்தை இன்னின்வர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று மரண சாசானம் செய்திருந்தால் கடனையும் வஸியத்தையும் நிறைவேற்றிவிட்டு மைய்யித்தை அடக்கம் செய்வதற்க்கு தேவையான செலவு தொகையையும் எடுத்து கொண்டவயான பின்னரே வாரிசுதாரர்கள் அம்மய்யித்தின் சொத்தைப் பங்கிட வேண்டும்.
கஃபனிட்டுவதற்கான பொருளாதாரம் இல்லாத நிலையில் ஒருவர் இறந்துவிட்டால் அவரை அவரின் உறவினர்கள் கஃபனிட்டு அடக்கம் செய்வது கட்டாயமாகும். உறவினர்கள் இல்லாதபோது அல்லது இருப்பவர்கள் வசதியற்றவர்களாக இருந்தால் (பைதுல்மால்) பொது நிதியகத்திலிருந்து அதற்கான பொறுப்பை ஏற்று நிறைவேற்ற வேண்டும். அப்படி ஒரு நிதியகம் இல்லையானால் அந்த ஊரிலுள்ளோர் அதற்கான ஏற்பாட்டினை செய்வது கட்டாயமாகும்.
கஃபனிடுவதற்கு உடல் முழுக்க மறைக்கும் ஒரே ஒரு ஆடை இருந்தால் போதுமானது. எனினும் ஆண்களுக்கு வெள்ளை நிறத்தில் மூன்று ஆடைகளைக்கொண்டு கபனிடுவது விரும்பத்தக்கதாகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூன்று வெள்ளை ஆடைகளில் கஃபனிடப்பட்டார்கள். (புகாரி, முஸ்லிம்) அந்த ஆடைகளை கற்பூரம் அல்லது சாம்பிரானி புகையால் வாசனைப்படுத்திக் கொள்ள வேண்டும். பிறகு அந்த ஆடைகளை ஒன்றுக்கு மேல் ஒன்றாக விரித்து சந்தனம் மற்றும் வாசனைத் திரவியங்களை அந்த ஆடையில் தெளித்து அதன் பின்பு மைய்யித்தை அந்த ஆடையின் மேல்நிமிர்த்திக் கிடத்தி வைக்கவேண்டும்;. அப்போது நறுமணத்தால் ஈரப்படுத்தப்பட்ட பஞ்சை மைய்யித்தின் மல வாயிலில் வைக்கவேண்டும். அதன் மூலம் கெட்ட வாடைகள் வராமல் தடுக்கலாம். அதன் பிறகு அந்த பஞ்சையும் இறந்தவரின் மர்ம உறுப்புகளையும் சேர்த்து கட்டுவதுவிரும்பதக்கதாகும்.
முகதுவாரப்பகுதிகளான கண், மூக்கு, உதடு,காது ஆகியவற்றின் மீதும் சஜ்தாவில் படும் உறுப்புக்கள் மீதும் சந்தனம் அல்லது கற்பூரம் போன்ற நறுமணப் பொருள்களை வைத்தும் கஃபனிடுவது சிறந்ததாகும். உடல் முழுவதும் வாசனை பூசினாலும் தவறு இல்லை நபித் தோழர்கள் இப்படியும் செய்திருக்கிறார்கள்.
வலது பக்கமாக உள்ள முதல் துணியை எடுத்து மடக்கிய பிறகு இடது பக்கமாக உள்ளதுணியை மடக்கி போர்த்த தவேண்டும். அதன் பிறகு அதுவரை அவர் மர்மப்பகுதியை மறைத்திருந்த துணியை நீக்கி விடவேண்டும். பிறகு இரண்டாம், மூன்றாம் துணிகளை மடக்கிப் போர்த்த வேண்வேண்டும், பிறகு கஃபன் அவிழ்ந்து விடாமல் இருப்பதற்காக கஃபனை அழுத்தமாக முடிச்சு போடவேண்டும். தலை முதல் கால் வரைக்கும் 5 அல்லது 3 முடிச்சிடுவது சிறப்பாகும். கப்ரில் வைத்தஉடன் முடிச்சுகளை அவிழ்த்து விடவேண்டும்.

 

Tuesday, August 20, 2013

பேச்சாளர் பேராசிரியர் அப்துல்லாஹ் இன்று அதிகாலை மரணமடைந்தார்.

சென்னை: பிரபல எழுத்தாளர், மனோதத்துவ நிபுணர், பேச்சாளர் பேராசிரியர் அப்துல்லாஹ் இன்று (19/08/2013) அதிகாலை மரணமடைந்தார்.


நுரையீரல் புற்றுநோயால் அவதிப்பட்ட பேராசிரியர் அப்துல்லாஹ், சில நாட்களுக்கு முன்பு சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிட்சை பெற்று வந்தார். நேற்று உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டு வெண்டிலேட்டரில் அப்துல்லாஹ்வுக்கு சிகிட்சை அளிக்கப்பட்டது. சிகிட்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை 1.30 மணியளவில் அவர் மரணமடைந்தார்.
சேசாசலம் எனும் இயற்பெயர் கொண்ட பெரியார்தாசன் 1949 ஆகஸ்ட் 21ம் நாள் சென்னை பெரம்பூரில், வீராசாமி – சாரதாம்பாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். எளிய குடும்பமும், ஏழ்மைச் சூழலும் சேசாசலமாக இருந்தவரை சாதனையாளராக உருமாற்றம் செய்தது. சென்னை பெரம்பூரிலுள்ள R.B.C.C.C. பள்ளியில் தமது ஆரம்ப கல்வியை கற்ற அவர் பச்சையப்பன் கல்லூரியில் பட்டம் வென்றார். பின்னர் அதே கல்லூரியிலேயே 1971ல் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். லண்டன் ஆக்ஸ்போர்டு பலகலைக்கழகத்தில் மனோதத்துவத் துறையில் அவர் டாக்டர் பட்டம் பெற்றார்.
சாதீய இழிவுகளையும், சமூக கொடுமைகளையும் கண்டித்து எழுதினார், பேசினார். அவர் 120க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். பெரியாரின் முன்னிலையில் உரையாற்றி பெரியார்தாசனாக மாறினார். உலகின் பல்வேறு நாடுகளுக்கு சென்று சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார். அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்றில் விசிட்டிங் பேராசிரியராகவும் பணியாற்றினார்.
அவரிடம் நகைச்சுவை உணர்வு நிரம்ப காணப்பட்டது. கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், மனோதத்துவ நிபுணர் என்பதோடு அவர் ஒரு நடிகராகவும் திகழ்ந்தார். மனோதத்துவத் துறையில் தாம் கற்ற பெற்ற அனுபவத்தின் மூலம் சிறந்த மனவியல் பயிற்சியாளராகப் புகழ் பெற்றார். ஏராளமானோருக்கு சிகிட்சை அளித்துள்ளார்.
அம்பேத்கரின் வழியில் பெளத்தத்தை தழுவினார் பெரியார்தாசன். பெளத்த தத்துவங்கள் குறித்து ஆய்வு நூல்களை எழுதிய அவர், பெளத்தக் கருத்துகளைப் பரப்பும் பிரச்சாரகராகவும் தீவிரப் பயணம் மேற்கொண்டார். அம்பேத்கரின் இறுதி நூலான ‘புத்தரும் அவர் தர்மமும்’ என்ற நூலை தமிழில்
மொழிபெயர்த்தார்.
இந்துக்களின் ஆன்மீக குருவாக தம்மை அறிவித்துக் கொண்ட சங்கரமட சங்கராச்சாரியாருடனும், இந்து முன்னணி இராம கோபாலனுடனும் விவாதங்கள் புரிந்த பெரியார்தாசன், தமது அழுத்தமான கேள்விகளால் அவர்களைத் திணறடித்தார். இந்து மத வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள் அனைத்தையும் கரைத்துக் குடித்த அவர், அவற்றிலிருந்து மேற்கோள்களையும், ஸ்லோகங்களையும் எடுத்துக் கூறினார்.
2010ம் ஆண்டு மார்ச் மாதம் அப்துல்லாஹ் என்று பெயர் மாற்றம் செய்து, இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக மாற்றிக்கொண்டார். மக்காவில் வைத்து இஸ்லாத்தை தழுவிய அப்துல்லாஹ், உடனே உம்ரா என்ற புனித கடமையையும் நிறைவேற்றினார். முஸ்லிமான பிறகு அழைப்புப் பணியில் தீவிர கவனம் செலுத்தினார். பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார்.

Sunday, August 18, 2013

ஷைத்தானிடமிருந்து பாதுகாப்பு

ஷைத்தான் நம்முடைய பகிரங்க விரோதி ஆவான். ஆதிமனிதர் காலத்திலிருந்து பகைமை தொடர்கின்றது. திக்ருல்லாஹ் – இறைவனை நினைவுகூறும் இடங்களில் ஷைத்தானின் சதிவலைகள் பயனற்றுப் போகின்றன. கழிப்பிடங்களில் நாம் திக்ரு செய்வதில்லை. அங்கே அவனுடைய ஆதிக்கம் அதிகமாக உள்ளது. எனவே உள்ளே செல்லும் போது நாம் கெட்ட ஜின்களை விட்டு பாதுகாப்பு தேடிக் கொள்கின்றோம்.ஷைத்தான் வழிகேட்டுக்கு வழி வகுக்கும் செயல்களையே தூண்டுகின்றான்.

மானக்கேடானவை மற்றம் தீயவற்றைச் செய்யுமாறே ஷைத்தான் ஏவுவான். (நூர் – 21)

இறைநம்பிக்கையாளன் தொழுகையின் மூலமாக இறைவனுடனான ஒப்பந்தத்தை புதுப்பித்துக் கொள்கின்றான். இறைநினைவு அவன் மனதில் நீங்கா இடம் பிடிக்கின்றது. இறைநினைவு எந்த நிமிடமும் அவனை விட்டு நீங்குவதே இல்லை. எனவே, அவனைக் காக்கும் கேடயமாக, இறை நினைவினை அவனுக்கு அளிக்கும் 'தொழுகை' மாறிவிடுகின்றது.

நிச்சயமாக தொழுகை மானக்கேடான மற்றும் தீயசெயல்களை தடுக்கின்றது. (அன்கபூத் – 45)

இவ்வசனத்தை விளக்குகையில் அல்லாமா இப்னு கஸீர் ரஹ்மதுல்லாஹி அலைஹி ஒரு கருத்தை அறிவிக்கின்றார். அதுமவ்கூஃப்ஹதீஸ் ஆகும். அதாவது நபித்தோழர்களோடு நின்றுவிடும் அறிவிப்பு. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத், அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ், ஹஸன் ஆகியோர்களோடு நின்று விடுகின்றது. அதாவது -தடுக்கப்பட்ட தீய செயல்களை விட்டும், மானக்கேடான ஆபாசமான காரியங்களை விட்டும் யாரை அவருடைய தொழுகை தடுக்கவில்லையோ, அது தொழுகையே அல்ல! (அல்லது அவர் தொழுகவே இல்லை)

  இஹ்ஸானுஸ் சலாத்  
 
நாம் ஏற்கனவே இஹ்ஸானுல் ஒழுவைப் பற்றி பார்த்துள்ளோம். அதே போல இஹ்ஸானுஸ் சலாத்தும் உள்ளது. ஒவ்வொரு இபாதாவிலும் இஹ்ஸான் உள்ளது (உதாரணம் – இஹ்ஸானுத் துபுஹ், இஹ்சானுல் ஜிஹாத்) இஹ்ஸானுஸ் சலாத் என்றால் என்ன?புகழ் பெற்ற ஹதீஸு ஜிப்ரீல் – ஐக் காண்போம். பிறகு அவர் 'இஹ்ஸான் என்றால் என்ன?' என்று கேட்டார். அண்ணலெம் பெருமானார் பதில் கூறினார்கள், 'நீ அல்லாஹ்வைப் பார்த்துக் கொண்டிருக்கிறாய் என்ற உணர்வோடு அவனை வணங்க வேண்டும். அவ்வாறு வணங்க இயலவில்லை என்றால் அவன் உன்னை பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற உணர்வுடனாவது வணங்க வேண்டும்ஸஸஸ..' (சஹீஹுல்புஃகாரி)

நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி இது! அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இஹ்ஸான் என்பதற்கு தெளிவானதொரு விளக்கத்தை அளித்துள்ளார்கள். அதனடிப்படையில் ஒரு மனிதன் இருவித நிலைகளில் தொழலாம், தொழ வேண்டும்!

(1) அல்லாஹ்வுக்கு முன்னால் நாம் நின்று கொண்டு, அவனைப் பார்த்துக் கொண்டிருந்தால் எத்தகைய எண்ணங்கள், உணர்ச்சிகள் நம் உள்ளத்தில் மேலெழும்புமோ அவ்வுணர்வுகளோடு தொழுக வேண்டும்.
(2) அந்த அளவுக்கு நாம் இல்லை என்றால், அத்தகைய உணர்வுகளை நம்மால் அடைய இயலவில்லை என்றால், அவன் நம்மைப் பார்த்துக் கொண்டே இருக்கிறான். நாம் பார்க்காவிட்டாலும் அவன் நம்மை கண்காணித்துக் கொண்டே உள்ளான் என்ற உணர்வோடு தொழுக வேண்டும்.

இந்த இருவித நிலைகளில் ஏதேனுமொரு நிலையில் நின்று தொழுதால் தான் அது இஹ்ஸானஸ் சலாத் ஆக இருக்கும். இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படும். இவ்விரு நிலைகளைத் தவிர்த்து மூன்றாவதாக ஒரு நிலை கிடையாது.

நாம் ஒரு கடையில் வேலை செய்வதாக நினைத்துக் கொள்வோம். முதலாளிக்கு முன்னால் நின்று கொண்டுள்ளோம். நாம் முதலாளியின் பார்வையிலும் அவர் நம்முடைய பார்வையிலும் இருக்கும் போது நம்முடைய பொறுப்பு உணர்வு எந்த அளவு நன்றாக இருக்கும். வீண் காரியங்கள் செய்ய மாட்டோம். சக ஊழியர்களோடு அரட்டையில் ஈடுபட மாட்டோம். வாடிக்கையாளர்களைக் கவனிக்காமல் பொழுதைப் போக்க மாட்டோம். மாறாக, கடமையில் கண்ணுங்கருத்துமாக இருப்போம். இல்லையா?

இதே கடை, ஆனால் முதலாளி முன்னால் இல்லை. அவர் தன்னுடைய அறைக்கு சென்றுவிட்டார். நம்மால் அவரைப் பார்க்க இயலாது. ஆனால் அவர் குளிர்கண்ணாடிகளின் வழியாக நம்மைக் கண்காணித்துக் கொண்டே இருக்கும் போது, நாம் வெட்டிவேலைகளில், சேட்டைகளில் ஈடுபடுவோமா? இல்லை, கவனமாக இருப்போமா? நாம் ஒரு சபையில் கலந்து கொள்ள செல்கின்றோம். மேன்மனிதர்கள், உயர் பெருமக்கள் அச்சபையில் அமர்ந்துள்ளார்கள். சபை மரியாதையோடு தன்னடக்கத்தோடு நடந்து கொள்கின்றோம். அதே அவைக்கு பார்வையற்ற ஒரு மனிதன் வருகிறார். அவரால் யாரையும் பார்க்க முடியாது. தன்னை விட அறிலிலும், அந்தஸ்திலும் பெரிய சான்றோர் பலர் அமர்ந்துள்ளார்கள் என்ற நினைப்போடு கண்ணியமாகவும் அடக்கமாகவும் அவர் நடந்து கொள்வாரா? இல்லை, தான்தான் யாரையும் பார்க்க இயலாதே என்ற எண்ணத்தில் கௌரவக் குறைவான வேலைகளை – கூச்சல் இடுவது, உடைகளை தாறுமாறாக ஆக்கிக் கொள்வது போன்ற செயல்களை செய்வாரா?

ஆக, சகோதர, சகோதரிகளே! இவ்விரண்டு நிலைகள் தாம் தொழுகைக்கான நிலைகள். நம்முடைய கொழுகை உண்மையிலேயே தொழுகையாக இருக்க வேண்டுமானால் நாம் இவற்றில் ஒன்றை கைக்கொண்டிருக்க வேண்டும். அப்போது தான் அது தொழுகையாக இருக்கும். தொழுகையின் தன்மைகளைப் பெற்றிருக்கும். இறைவனால் தொழுகையாக அங்கீகரிக்கப்படும், ஏற்றுக்கொள்ளப்படும். தொழுகை, தொழுகையாக இருந்தால் தான் அது தீமைகளை விட்டு, தடுக்கப்பட்ட செயல்களை விட்டு ஆபாசமான காரியங்களை விட்டு நம்மைத் தடுக்கும். கோழி தானியங்களைக் கொத்துவதைப் போல அவசர அவசரமாக கொத்தி எறிந்து விட்டு வந்தால் அது தொழுகையும் அல்ல. அது தன் வேலையையும் செய்யாதுஸ அவ்வாறு தொழுபவனை தொழுகைத் திருடன் என்று ஹதீஸ் வர்ணிக்கிறது.

தொழுகையை உடல், உயிர் என்று நாம் வகைப்படுத்தலாம். உயிர் இல்லாத உடல் பயனற்றது. ஒருவன் மிகவும் அழகாக கச்சிதமான உறுப்புகளைக் கொண்டவனாக இருக்கின்றான். ஆனால் அவன் உடம்பில் உயிர் இல்லை என்றால், அவன் என்று அதை நாம் சொல்லமாட்டோம். அது பிணம்! அதே சமயம் ஒருவன் கைகால் அற்றவனாக, அல்லது உறுப்புகள் சிதைந்த நிலையில் அல்லது ஹெலன் கெல்லரைப் போல புலனுணர்வுகள் அற்ற நிலையில் இருந்தாலும் நாம் அவனை மனிதன் என்றே கருதுவோம்.மதிப்போம். உயிரோட்டம் இல்லாத தொழுகை வடிவழகில் முழுமையானதாக இருந்தாலும்அண்ணலாரை அப்படியே பின்பற்றினாலும் அது தொழுகையாக ஆகிவிடாது. பிணத்திற்கு எதற்கு அழகும் சௌந்தர்யமும்?

  ஹிஃப்ழுல் குர்ஆன்  

அல்லாஹ்வுடைய கலாமாகிய வான்மறை குர்ஆனில் நம்மால் இயன்ற அளவு அதிகமதிகம் மனனம் செய்ய முயற்சிக்க வேண்டும். சகோதர, சகோதரிகளே! நம்மில் பலரும் இஸ்லாத்தை சரியாக விளங்கிக் கொள்ளும் முன் சினிமாவும் TVயும் பார்த்துக் கொண்டிருந்தோம். இல்லையா? அப்போதெல்லாம் கேட்ட எத்தனையோ படப்பாடல்கள், விளம்பரப்பாடல்கள் இன்றும் நினைவில் பசுமையாக உள்ளன. எப்போதோ கேட்ட பாடல்களுக்கும், தேவையற்ற செய்திகளுக்கும் நாம், நம்முடைய நினைவில் இடம் ஒதுகிகியுள்ள போது, ஏன் குர்ஆனுக்கொன்றும் ஓரிடத்தை ஒதுக்கக் கூடாது? மனித மூளை அற்புதமான திறன் கொண்டது. நாம் இப்போது சினிமாவே பார்ப்பதில்லை என்றாலும் எப்போதோ கேட்ட பாடல்கள் இன்றும் அழியாமல் நினைவில் வைத்துக் கொள்ளும் திறன் படைத்தது நம்முடைய மூளை! எனவே நாம் குர்ஆனை ஹிப்ழ் செய்ய முயற்சிக்க வேண்டும்.

நீண்ட சூராக்கள், நடுத்தரமான சூராக்கள், சிறிய சூராக்கள் என்று குர்ஆன் சூராக்களை வகைப்படுத்தியுள்ளனர். சிறிய சூராக்களுக்கு முஃபஸ்ஸல் என்று பெயர். அத்தியாயம் 49 (அல்ஹுஜுராத்)லிருந்து கடைசி வரை உள்ள அத்தியாயங்களே முஃபஸ்ஸல் அத்தியாயங்கள். எனவே, சிறிய அத்தியாயங்கள் முழுவதையும் நாம் மனனம் செய்து கொள்ளும் வைராக்கியத்தை மேற்கொள்ள வேண்டும். அல்லது குறைந்த பட்சம் கடைசி இரண்டு ஜுஸ்வுகளையாவது (29,30) மனப்பாடம் செய்தே தீர வேண்டும்.அண்ணலார் சொன்னது போல கொஞ்சமேனும் குர்ஆன் இல்லாத உள்ளம், பாழடைந்த வீட்டைப் போன்றதாகும். கொஞ்சமேனும் என்பது குறைந்த பட்சம் ஒரு ஜுஸ்வு, இரண்டு ஜுஸ்வுவாக இருக்கக்கூடாதா என்ன?
source: http://www.dhisaikaati.com/

Friday, August 16, 2013

மறக்கடிக்கப்பட்ட மகாகவி அல்லாமா முஹம்மது இக்பால்!!

இந்திய திருநாட்டின் விடுதலை நாளை கொண்டாடும் இந்த நேரத்தில் நாட்டின் விடுதலைக்காக தன உயிராலும், உணர்வாலும் பாடுப்பட்ட உண்மையான தலைவர்களைப் பற்றி அறிய நாம் கடமைப்பட்டுள்ளோம்.அந்த வரிசையில் ஒரு மாபெரும் கவிஞராக.. பழுத்த தேசபக்தராக வாழ்ந்த மகாகவி அல்லாமா முஹம்மது இக்பால் அவர்களின் நினைவுகள் இன்று அடியோடு மறக்கடிக்கப்பட்டதற்கு காரணம்.. அவர் முஸ்லிம் என்பதைத் தவிர வேறு காரணமில்லை.

 1938 இல், லாகூரில் மகாகவி இக்பால் மரணமடைவதற்கு சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற பொதுநிகழ்ச்சி ஒன்றில் ஜவஹர்லால் நேருவும் கலந்து கொள்கிறார். அவர் மேடையிலிருந்த மகாகவி இக்பாலை நோக்கி இப்படி சொல்கிறார்: "ஜின்னாஹ் ஒரு அரசியல்வாதி! நீங்களோ ஒரு தேசபக்தர்!" பாகிஸ்தான் பிரிவினைக்குக் காரணகர்த்தா இவர் என்று சொல்பவர்களுக்கு இது நெத்தியடியாகும். இருந்தும் மகாகவி இக்பால் தொடர்ந்து பாசிச சந்திகளால் பழிக்கப்படுகிறார்.

இந்திய துணைக்கண்டத்தின் பன்முகப் பண்பாட்டை மிகவும் விரும்பியவர் மகாகவி. இக்பால் அவர்களால் எழுதப்பட்ட "ஸாரே ஜகான் சே அச்சா, ஹிந்துஸ்தான் ஹமாரா ஹமாரா" என்று தொடங்கும் பாடல் 1947 ஆகஸ்ட்டில் ஆங்கிலேயர் விரட்டியடிக்கப்பட்டு இந்தியாவின் நாடாளுமன்றத்தில் முதன்முதலாக ஒலித்தது. மறைந்த நேரு அவர்களால் அதிகம் கையாளப்பட்ட பாடலும் இதுவாகும்.

உலகத்தில் சிறந்தது எங்கள் இந்த தேசம். 
இந்த பூந்தோட்டம் எங்களுடையது......... என நீண்டு செல்கின்றன பாடல் வரிகள். ராணுவத்தின் முழக்கமாக விளங்கும் இந்தப் பாடலின் வரிகள், இந்தியாவின் சுதந்திர மற்றும் குடியரசு தினங்களில் மட்டும் மக்களின் காதுகளுக்கு எட்டும். அவை நாள்தொறும் நாட்டில் ஒலிக்கப்பட வேண்டும். பொதுமையும், இந்திய மண்ணின் பண்பையும் விளக்கும் இப்பாடல் இந்திய தேசிய கீதமாய் அங்கீகரிக்கப்படாமல் ஓரங்கட்டப்பட்டது அதை எழுதியவர் ஒரு முஸ்லிம்
என்ற காரணத்தால்..

நாட்டின் விடுதலைக்காக உயிர்நீத்த சமுதாயத்தின் வாரிசுகளின் மனதில் உண்மையான வரலாறு விதைக்கப்பட வேண்டும்.

நாளைய வரலாற்றை எழுதுவது நாமாக இருக்க வேண்டும்.
நேற்றும் இன்றும் கதையாக கழிந்துவிட்டன.
நாளை உதயமாவதை எதிர்பார்த்திரு! என்ற அல்லாமா இக்பால் அவர்களின் கவிதை வரிகள் உயிரோட்டம் பெற வேண்டும்.

இப்படிப்பட்ட மகாகவிஞரை நாடும் மறந்தது. நாமும் மறந்தோம்.

Thursday, August 15, 2013

தங்க விலையில் மிகப் பெரிய அளவில் வீழ்ச்சி ஏற்படும்!

தங்கவிலை இயக்கம் ஒரு மந்தகரமான நிலையை அடைந்ததன் விளைவாக, கடந்த 12 வருடங்களில் ஏற்படாத ஒரு விலை வீழ்ச்சி இந்த வருடத்தில் ஏற்பட்டுள்ளது. இதனால் க்குவான்டிடேடிவ் ஈஸிங்க் 3 (QE3) குறைவதற்கும், அதிகளவில் டிமான்ட் குறைவதற்கும் வழிவகுக்கும்

ரிசர்வ் வங்கியில் இருந்து வெளிவந்த கருத்துக்கள் மற்றும் வலுவான அமெரிக்க பொருளாதார தரவு ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும் போது QE3 டேப்பரிங்க் வெகு தூரத்தில் இல்லை என்பது உறுதி.

"ஜூலையில் வேலையின்மை விகிதத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியின் விளைவாக, ரிசர்வ் வங்கியின் மாதாந்திர பாண்ட் கொள்முதல் அளவு $85 பில்லியனிலிருந்து பின்தங்கும் நிலை ஏற்படும்" என டல்லாஸ் மத்திய வங்கித் தலைவர் ரிச்சர்ட் ஃபிஷர் சமீபத்தில் கூறினார்.

செப்டம்பர் மாதத்தில், ரிசர்வ் வங்கியின் சொத்து கொள்முதல் திட்டம் அல்லது QE3 அளவு குறையகூடும் என பலர் விவதிக்கின்றனர். இதன் விளைவாக இந்திய மற்றும் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி அடையும் என நம்பப்படுகிறது.

கடந்த சில நாட்களாக அமெரிக்க பங்கு சந்தையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, QE3 டேப்பரிங்க் செப்டம்பர் மாதத்திலேயே தொடங்கலாம் என அச்சுறுத்துகிறது. இந்நிலை செப்டம்பரில் ஏற்படாவிட்டாலும், அக்டோபர் அல்லது டிசம்பர் மாதத்தில் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில வருடங்களாக, பெரும்பாலான மத்திய வங்கிகள் பின்பற்றி வந்த எளிதான பணவியல் கொள்கை மற்றும் ஈஸி லிக்விடிட்டி கண்டிஷன்கள் தங்கவிலை உயர்விற்கு காரணமாகும்.
தி ஃபெடரல் ரிசர்வ் $85 பில்லியன் மாதாந்திர சொத்து கொள்முதலில், தங்கத்தை அதிகளவில் கொள்முதல் செய்துவந்த காரணத்தால், கடந்த 3 வருடங்களாக தங்கவிலை அதிகரித்து வந்தது. சொத்து கொள்முதல் திட்டம் அடுத்த வருடத்தில் முற்றிலுமாக நீங்கிவிடும் சாத்தியம் தென்படுவதால், கண்டிப்பாக தங்கவிலையில் ஒரு மிகப்பெரியயளவில் வீழ்ச்சி ஏற்பட சாத்தியம் உண்டு. Read in English:

தங்கமே தங்கம்...! தங்கம் வாங்க போறீங்களா..?!

நண்பர் ஒருவரின் ஆதங்கம் எனக்கு மிகச் சரியாகவே பட்டது. அவர் சொன்னது இதுதான். வெளி நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் நகைக் கடையில் நகை வாங்கிய போது பில்லில் காட்டப்பட்ட சேதாரம் பற்றி விசாரித்ததோடு "சேதாரத்திற்கு பணம் பிடித்தம் செய்யப்படும் போது அந்த சேதாரத்திற்கான தங்கத்தைத் திருப்பித் தந்தாக வேண்டும், அது வாடிக்கையாளருக்குச் சொந்தமானது" என்று உரிமைக் குரல் எழுப்பினாராம்! வாயடைத்துப் போன கடை நிர்வாகம் வேறு வழியில்லாமல் சேதாரப் பணத்தைத் தள்ளுபடி செய்ததாம்!
நண்பரின் ஆதங்கம் இதுதான். ' சேதாரம் என்ற பெயரில் நகைக் கடைகளில் பெருங் கொள்ளையடிப்பதை நம்மவர் யாரும் ஏன் கண்டு கொள்வதே இல்லை? என்பதே அவரது நியாயமான கேள்வி"

அவரது குமுறல் மிக நீதியானதே என்பதுதான் எனது வாதமும். 16 கிராமில் ஒருவர் நகை வாங்கினால் ஏறக்குறைய 3 கிராம் சேதாரம் என்று கணக்கிட்டு ஒன்பதாயிரம் ரூபாய் வரையில் பெருங்கொள்ளையடிக்கிறார்கள் நகைக் கடை முதலாளிகள்.

இன்றைய தங்க விற்பனை விலை 16 கிராமுக்கு ரூ48000 என்றால் கடைமுதலாளிக்கு சேதாரம் என்ற பெயரில் "ஒன்பதாயிரம் ரூபாய்" தெண்டம் அழ வேண்டும். ஏறக்குறைய 16 சதவீதம்? "எதற்காக இந்த தெண்டம்? பதினாறு கிராமுக்கு மூணு கிராம் எப்படி சேதாரமாகும்?" எந்த அதிமேதாவியும் இது வரை கேள்வி கேட்டதில்லை. அப்படி புத்தியோடு யாரும் தைரியமாக எதுவும் கேட்டு விடக்கூடாது என்று சொல்லித்தான் அவர்களாக சில நூறு ரூபாய்களை பிச்சை போடுவார்கள். 

போனவுடன் குடிக்க ஏதாவது கொடுத்து ஆட்களை' கூல்' பண்ணுவார்கள். இப்பொழுதெல்லாம் சேதாரத்தைச் சட்டப்பூர்வமாகவே ஆக்கி விட்டார்கள். அதாவது எந்தப் பொருளையும் கொடுக்காமலேயே பல்லாயிரக்கணக்கில் கொள்ளையடிப்பது....

சில கடைகளில் மிகக் குறைந்த சேதாரம் என்ற விளம்பரம் வேறு... உற்றுப் பார்த்தால் ஆறு சதவீதம் முதல் என்று இருக்கும். என்னுடைய கேள்வி என்னவென்றால் ஏன் சேதாரமில்லாமல் யாரும் நகை விற்பனை செய்ய முடியாதா? பொருளுக்குள்ள உண்மை விலையை மட்டும்தானே வாங்க வேண்டும்? செய்கூலி கேட்பது நியாயம்தான்.

16 கிராமில் நகை செய்ய மூன்று கிராமா சேதம் ஆகும்? இந்த அக்கிரமத்தை ஏன் அரசாங்கங்கள் கண்டு கொள்வதில்லை? பலசரக்குக் கடைக்கு விலைப் பட்டியல் வைக்க வேண்டுமென்று உத்தரவிட்டிருக்கும் அரசாங்கம் ஏன் நகைக் கடைகளுக்கு சேதார அளவுக்கு வரம்பு வைக்க வில்லை? எத்தனை எத்தனை ஏழை மக்கள் குருவி சேர்ப்பது போல் பணம் சேர்த்து நகை வாங்க வருகிறார்கள்?

அவர்களிடம் வழிப்பறி செய்வதை விட மோசமான செயல் அல்லவா சேதாரம் என்ற பெயரில் திருடுவது? பின்னர் ஏன் நாட்டில் ஏழை ஏழையாகவே இருக்க மாட்டான்? ஒரு நகைக் கடை வைத்தவன் ஊரெல்லாம் நகைக் கடை திறக்க மாட்டான்?

மில்லி கிராம் தங்கம் கூட சொந்தமில்லாத ஏழைகள் இந்த மண்ணில் கோடிக்கணக்கில். கோடிக்கணக்கான ஏழைகளைச் சுரண்டித்தான் ஒருவன் பணக்காரனாக கொழுக்க முடிகிறது. இது போன்ற பகற் கொள்ளைக்காரர்கள் திருந்த வேண்டும். அல்லது திருத்தப் பட வேண்டும். விரைவில் இம்மண்ணில் இது நிகழ்ந்தாக வேண்டும்!

Sunday, August 11, 2013

புதுகையில் பலத்த மழை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டாக பருவமழை பெய்யத் தவறியதால் வரலாறு காணாத வறட்சி நிலவியது. நீர்நிலை அனைத்தும் வறண்டு விட்டதால் விவசாயம் அடியோடு ஸ்தம்பித்தது.

நிலத்தடி நீர்மட்டமும் குறைந்ததால் மாவட்டத்தின் பல பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவிவருகிறது. சம்பா சாகுபடிக்காக கல்லணைக் கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் டெல்டா பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் கடந்த இரண்டு நாட்களாக நிரம்பிவருகிறது. நிலத்தடி நீர்மட்டமும் அதிகரித்துள்ளதால் அப்பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நீங்கியுள்ளது.

மாவட்டத்தின் இதரப் பகுதிகளில் வறட்சி தாண்டவம் ஆடியதால் விவசாயிகள் மத்தியில் மழை குறித்து எதிர்பார்ப்பும், ஆதங்கமும் நிலவியது. நீண்ட இடைவெளிக்கு பின் நேற்று மதியம் முதல் மாலை வரை வெயில் மறைந்து மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 5.30 மணிக்கு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

இரண்டுமணி நேரத்துக்கும் மேலாக இடைவிடாது பெய்த மழையால் புதுக்கோட்டை நகரின் முக்கிய வீதிகள் மற்றும் ரோடுகளில் மழை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதுபோன்று தோரண வாய்க்கால்கள், கழிவுநீர் ஓடைகளில் மடைதிறந்த வெள்ளம் போல் மழை தண்ணீர் ஓடியது. இதனால் மாவட்டத்தில் கடந்த பல மாதங்களாக நீடித்த வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.

புதுக்கோட்டை மட்டுமின்றி மாவட்டத்தின் இதர பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. நிலத்தடி நீர் மட்டம் உயர்வதற்கும், சம்பா சாகுபடிக்கான உழவுப் பணிகளுக்கும் இந்த மழை பயனுள்ளதாக அமைந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Saturday, August 10, 2013

கஃபாவின் தொழிலாளர்களுட் சேர்ந்து நோன்பு திறந்த சவுதி அரேபியாவின் ஷேய்ஹ் அல் சுதைஸ்

“நம்மை இயக்குவது பசி. மற்றையது செக்ஸ். இதில் இரண்டாவதிற்கு கூட முதலாவது பூர்த்தி செய்யப்பட்டால் மட்டுமே செயற்படவைக்க முடியும். இதை சொன்னவர் கவிஞர் கண்ணதாசன். தனது குடும்பம் நலமாக வாழ வேண்டும் என்பதற்காக கடல் கடந்து மத்தியகிழக்கின் பாலைவனங்களில் அலையும் ஒட்டடகங்களை போல தாங்கள் பார்க்கும் தொழில் உள்ள சிரமங்களையும் பிரச்சனைகளையும் மனதில் அலையவிட்டபடி கஸ்டப்படும் இலட்சக்கணக்கான ஆசிய முஸ்லிம் தொழிலாளர்கள் இருக்கின்றனர். மக்காவின் கஃபாவில் சுத்திகரிப்பாளர்களாக பல்லாயிரம் பேர் வேலை செய்கின்றனர். சவுதி அரசாங்கத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இயக்கப்படும் ஸ்தலம் அது. எந்த குறையும் நிகழாமல் எல்லாவற்றையும் வழமை போல வைத்திருக்க விரும்பும் அதன் நிர்வாகம் மிகவும் கண்டிப்பானது. ரமழான் மாதத்தில் களைப்பிற்கு மத்தியில் தங்கள் நோன்பை முடித்தது கொள்ளும் மஹ்ரிப்புடைய நோன்பு திறக்கும் நேரத்திற்கு சற்று முன் அசுவாசமாக உட்காந்திருந்த ஆசிய தேச முஸ்லிம் ஊழியர்களிற்கு அன்றைய தினம் ஒரு இன்பபேரதிர்ச்சி காத்திருந்தது. கடந்த மாதம் 27ம் திகதி நடந்த சம்பவம் இது. கஃபாவின் பிரதம பேஷ் இமாம் மட்டுமல்லாது மக்காவின் பிரபல வர்த்தகருமான Shaykh Abdurrahman As Sudais அவர்கள் இந்த ஊழியர்கள் அமர்ந்திருந்த இடம் வந்தார்கள். படாரென நிலத்தில் உட்கார்ந்து விட்டார்கள். நோன்பை இனிதுர திறந்து மகிழ்ந்தார்கள். நிர்வாக ஊழியர்களை பார்த்து இந்த தொழிலாளர்கள் மேல் கருணை காட்டும் படி வேண்டினார்கள். இறுதியாக அவர் தன் காரில் ஏறிச்செல்லும் முன் சொன்ன வார்த்தைகள் இவை. “இங்கே வேலை செ்யகிறார்களே இவர்களது வேலை போல் உன்னதமான மகத்தான வேலை உலகத்தில் வேறெங்கும் இல்லை. இவர்கள் இறைவனின் இல்லத்தின் ஊழியர்கள். இவர்களிற்கு ஊழியம் செய்வதற்கு நாம் பழகி கொள்ள வேண்டும் எனவும் கூறிச்சென்றுள்ளார். உலகின் புகழ்பெற்ற இமாம் சுதைஷ். இவரது குரல் ஒலிக்காத வீடுகளே இல்லை. அந்த மனிதனின் உள்ளத்தின் வாயிலின் திறக்கப்பட்ட ஒரு கதவின் ஒலியில் வரைந்த வரிகளே இவை. ... You might also like: